Monday, September 10, 2007

எய்ட்ஸுக்கு சித்த மருந்து.

எய்ட்ஸுக்கு சித்த மருந்து - திண்டுக்கல்லில் விற்பனை

திங்கள்கிழமை, செப்டம்பர் 10, 2007

திண்டுக்கல்:

எய்ட்ஸ் நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ள சித்த மருந்துகளான சயவனபிராஷ் லேகியம், அமுக்காரா மாத்திரை, நரசிம்ம லேகியம் ஆகிய சித்த மருந்துகளின் விற்பனை திண்டுக்கல்லில் தொடங்கியுள்ளது.

இந்த மூன்று மருந்துக்களின் முதல் ஆங்கில எழுத்துக்களை கொண்டு 'கேன்' என இந்த மருந்துகள் அழைக்கப்படுகின்றன. முதல் கட்டமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 15 தன்னார்வ தொண்டு அமைப்புகளின் மூலம் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த மருந்துகளின் சந்தை விலை ரூ.270. இருப்பினும் உற்பத்தி செலவான ரூ.200க்கே நோயாளிகளுக்கு விற்கப்படுகிறது.

இந்த மருந்துகளின் விற்பனை திண்டுக்கல்லில் காந்தி கிராம அறக்கட்டளையின் அங்கமான லஷ்மி சேவா சங்கத்தில் தொடங்கியது. இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துக்கான சிறப்பு ஆணையர் ராஜ்குமார் விற்பனையை தொடங்கி வைத்தார்.

நன்றிங்க

பொதுவானவை.

No comments: