கோவை-தீக்குளித்த ஆட்டோ டிரைவர் சாவு!
அரசும், காவல்துறையுமே சாவுக்கு பொறுப்பு-ஜெ
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2007
கோவை: ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தக் கோரி போராட்டம் நடத்தி தீக்குளித்த ஆட்டோ டிரைவர் பலியானார்.
கடந்த வாரம் கோவையில் ஆட்டோக்களுக்கு புதிய கட்டண முறை அமலுக்கு வந்தது. குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 14யை நிர்ணயித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
ஆனால், இதை எதிர்த்தும் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 20 ஆக நிர்ணயிக்கக் கோரியும் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி முதல் ஆட்டோ டிரைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்ற கண்ணன் என்ற ஆட்டோ டிரைவர் தீக்குளித்தார். இவர் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர், ஆட்டோ சங்க மாவட்ட தலைவராகவும் இருந்தார்.
தீக்குளித்ததில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணன் நேற்றிரவு பலியானார்.
இதற்கிடையே, இன்று கண்ணனின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் கோவை நகரில் இன்று ஒரு ஆட்டோவும் ஓடவில்லை.
இறந்த கண்ணனுக்கு சாந்தி (32) என்ற மனைவியும் தினேஷ் (12), ஜெயராம் (8) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
அதிமுக ரூ. 50,000 நிதியுதவி:
கண்ணன் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 31ம் தேதி ஆட்டோ டிரைவர் ஜி.கண்ணன் தீக்குளித்தார். நேற்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.
ஆட்டோ கட்டண மாற்றம் குறித்து ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில் அவர்களை தீவிரமாக கண்காணித்து, பிரச்சினையை தீர்க்க முயற்சிக்காக திமுக அரசும், காவல்துறையுமே இந்த சாவுக்குப் பொறுப்பேற் வேண்டும்.
கண்ணன் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு, அதிமுக குடும்ப நல நிதியாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
கண்ணன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் நிவாரண உதவியை வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி கோரிக்கை விடுத்துள்ளது.
நன்றிங்க
சமயம் பார்த்து ஊதுன நல்ல சங்கு!
No comments:
Post a Comment