ஷார்ஜா: 20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்
தவித்து வரும் 200 தொழிலாளர்கள்!
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007
ஷார்ஜா:
ஷார்ஜாவில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமில், கடந்த 20 நாட்களாக கடும் தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஷார்ஜாவின் தேசிய பெயின்ட்ஸ் ரவுன்ட் அருகே இந்த முகாம் உள்ளது. இங்கு இரு பெரும் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் (அனைவரும் செக்யூரிட்டிக்களாக பணியாற்றுபவர்கள்) தங்கியுள்ளனர்.
முன்னணி செக்யூரிட்டி நிறுவனமான பென்ட்லி செக்யூரிட்டி மற்றும் சேப்ட்டி சர்வீஸஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 100 தொழிலாளர்கள் இவர்களில் அடக்கம்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த முகாமில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சப்ளை இல்லையாம். இதனால் தொழிலாளர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொழிலாளர் கூறுகையில், ரமலான் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தண்ணீர் சப்ளை இல்லாதது பெரும் சிரமமாக உள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். புனித மாதமான இந்த நாளில், தங்களது கடமைகளைச் செய்ய முடியாமல் அனைவரும் தவித்து வருகிறோம்.
பென்ட்லி நிறுவனம், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் கட்டணத்தை செலுத்தாததால், தண்ணீர் விநியோகத்தை நகராட்சி துண்டித்து விட்டது. தற்போது தண்ணீர் சப்ளையை சீராக்கக் கோரி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக பல தொழிலாளர்கள் வேலைக்குப் போகாமல் உள்ளனராம். குளிக்காமல் கொள்ளாமல் எப்படி வேலைக்குப் போக முடியும். அதனால்தான் போகவில்லை. மேலும் எங்களில் சிலர் வேலைய விட்டே போய் விடலாமா என்று சிந்தித்துக் கொண்டுள்ளனர் என்று ஒரு தொழிலாளர் கூறினார்.
ஆனால் முகாமில் தண்ணீர்ப் பிரச்சினை இல்லை என்று பென்ட்லி நிறுவனம் மறுத்துள்ளது. முகாமில் ஒரு பிரச்சினையும் இல்லை, தொழிலாளர்கள்தான் பெரிதுபடுத்திக் கூறுகிறார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நன்றிங்க
இவங்களையெல்லாம் தண்ணீரில்லாத காட்டுக்கு மாத்தனும்னு சொல்வாங்களே...!
இதைத் தண்ணீரில்லாத வீட்டுக்குன்னு, மாத்தி சொல்லிக்கோங்க!! :)
3 comments:
ரமதானாக இருப்பதால் நோன்பு வைப்பதில் நிறைய சிரமங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக எந்த இடம் என்று சொன்னால் நான் எந்த வகையிலாவது உதவ முடியுமா என்று பார்க்கலாம்.
சல்தான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பொதுவா ரமதானில் மட்டுமில்லை, மனிதனுக்கு எல்லா நாட்களிலும் தண்ணீர் மிக அவசியத் தேவையானது.
செய்தியில் ஷார்ஜா என்றே குறிப்பிட்டுள்ளார்கள். மேல் விபரங்கள் எதுவுமில்லை. ஒருவேளை கம்பெனியின் பெயரை வைத்து கண்டுபிடிக்க முடியுமா? என்று பாருங்கள்.
ஒப்பந்தம் செய்து அயல் நாட்டினரை வேலைக்கமர்த்தும் நிறுவனங்கள் இதுபோன்ற குறைபாடுகளில் பணியாளர்களைத் திண்டாட விடுவது புதிய விஷயமில்லை!
Publish : Yes/No உங்கள் சாய்ஸ்
நான் விசாரித்த வகையில், செய்தியில் உண்மை அதிகமில்லை.
நேஷனல் பெயிண்ட் நிறுவனப் பகுதியில் எப்போதாவது தற்காலிகத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். அப்போது காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.
இப்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லை என்பதே உண்மை.
Post a Comment