கர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்
திங்கள்கிழமை, செப்டம்பர் 24, 2007
அம்பாசமுத்திரம்:
குடிப்பதற்கு பணம் கொடுக்காததால், கர்ப்பமாக இருந்த மனைவியை வெட்டி கொலை செய்தார் கணவர்.
அம்பை அருகே உள்ளது பிரம்மதேசம் என்ற கிராமம். இங்குள்ள பஞ்சாயத்து அலுவலக தெருவில் வசிப்பவர் நாராயணன் என்ற செல்வகுமார்.
இவரது மனைவி நாலாயிரத்து செல்வி. இருவரும் மூன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. செல்வக்குமார் முன்பு டிரைவராக வேலை பார்த்தார். அதில் வருமானம் போதவில்லை. அதனால் தற்போது கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.
இந்த வேலைக்கும் ஒழுங்காக செல்லாமல் செல்வகுமார் மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். வேலைக்கும் செல்லாமல், மனைவியிடமிருந்து குடிப்பதற்காக அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு வாங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மதியம் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு செல்வகுமார் தகராறு செய்துள்ளார். அப்போது மனைவி நாலாயிரத்து செல்வி பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் சமையலறையில் இருந்த நாலாயிரத்தை அரிவாளால் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
நன்றிங்க
குடி குடியைக் கெடுத்து விட்டது!
No comments:
Post a Comment