யோகா ' வுக்கு இங்கிலாந்து தேவாலயங்களில் தடை
லண்டன்(ஏஜென்சி), சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2007 ( 18:56 IST )
இங்கிலாந்திலுள்ள இரண்டு தேவாலயங்களில் 'யோகா' வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள சில்வர் ஸ்ட்ரீட் பேபிஸ்ட் சர்ச் மற்றும் செயின்ட் ஜேம்ஸ் சர்ச் ஆகிய இரண்டு தேவாலயங்களில், குழந்தைகளுக்கு 'யோகா' வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் 'யோகா' கிறிஸ்துவத்திற்கு எதிரானது எனக் கூறி 'யோகா' பயிற்றுவிக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. லூசி உட்ஸ்டாக் என்பவர் மேற்கூறிய இரு தேவாலயங்களிலும் 'யோகா' வகுப்புகளை நடத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று வழக்கம்போல் யோகா வகுப்புகளை நடத்த சென்ற லூசிக்கு இரு தேவாலய நிர்வாகிகளும், வகுப்பு நடத்த அனுமதி மறுத்து விட்டனர்.
நன்றிங்க
என்ன இந்த 'யோகா' வுக்கு வந்த சோதனை?
No comments:
Post a Comment