வேலூர்: கெட்ட நேரம் என்பதால் போலீசில் மாட்டிக் கொண்டேன் என்று ஐதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வேலூர் மாணவி ஷாகி ரப்ஜானி தெரிவித்தார்.
வேலூர் அழைத்து வந்தபோது அவர் கூறியதாவது: நான் எந்த தப்பும் செய்யவில்லை. குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. எனக்கு ஒன்றும் தெரியாது. அல்லாவின் மீது ஆணையாக சொல்கின்றேன். என் தம்பி நடத்தை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என் பெற்றோரும் தம்பியும் தலைமறைவானதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. அவர்கள் சரண் அடைந்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.
எனக்கு கெட்ட நேரம் என்பதால் போலீசில் மாட்டிக் கொண்டேன். இந்தியா மீது பற்று உள்ளதால் தான் கல்லூரியில் நடந்த போட்டியில் கவிதை எழுதினேன். என்னை பற்றி தப்பாக எழுத வேண்டாம். போலீசார் மிகவும் மரியாதையாக நடத்துகின்றனர். இவ்வாறு ஷாகி ரப்ஜானி கூறினார்.
நன்றிங்க, தினமலர் தேதி: 10/09/2007
அந்தோ பரிதாபம்.
2 comments:
11. வேலூர் கல்லூரி மாணவி வீட்டில் போலீசார் சோதனை
வேலூர்: ஐதராபாத் இரட்டைக் குண்டு வெடிப்பில் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த வேலூர் கல்லூரி மாணவி சாகி ரப்ஜானியின் வீட்டில் போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
43 பேரைப் பலி வாங்கிய ஐதராபாத் இரட்டைக் குண்டு வெடிப்பில் உளவாளியாகச் செயல்பட்டதாக வேலூர் காட்பாடியில் உள்ள கல்லூரியில் பயின்ற வந்த சாகி ரப்ஜானியை சிறப்புப் புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.
வங்க தேசத்தைச் சேர்ந்த சாகி ரப்ஜானி இந்தியா வருவதற்கும், இங்கு தங்குவதற்கும் முறையான ஆவணங்கள் பெறவில்லை என போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வேலூரில் சாகி ரப்ஜானி வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அவர் முறையான விசா வைத்திருப்பதும், 2008 வரை இந்தியாவில் தங்குவதற்கு அனுமதி பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.
மேற்கண்ட செய்தி: தினமலர், 10.09.2007
Post a Comment