கொல்லப்பட்ட கொள்ளையர்கள் உடலை கங்கையில் வீசிய போலீஸார் சஸ்பெண்ட்
திங்கள்கிழமை, செப்டம்பர் 17, 2007
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட 10 கொள்ளையர்களின் உடல்களை கங்கை ஆற்றில் வீசிய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரில் உள்ள வைசாலி என்ற கிராமத்தில், கடந்த வாரம் கொள்ளையடிக்க 10 திருடர்களை கிராம மக்களே அடித்துக் கொன்றனர். ஒரு திருடன் மட்டும் உயிருக்கு ஆபத்தான முறையில் போலீஸாரால் மீட்கப்பட்டான்.
கொல்லப்பட்ட 10 பேரின் உடல்களையும் வாங்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து உடல்களை போலீஸாரே தகனம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்காக 3 பேரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் 10 பேரின் உடல்களையும் எரிப்பதற்குப் பதில், அவற்றை கங்கை ஆற்றில் வீசி விட்டுச் சென்றுள்ளனர் இந்த இதயமற்ற காக்கிகள். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரிய வந்து அதிர்ந்துள்ளனர்.
உடனடியாக 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். கொள்ளையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை விட போலீஸாரின் இந்த செயல் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றிங்க
மனித சடலத்துக்கு நேர்ந்த அவலத்தைப் பாருங்கள்.
என்னய்யா இது?
பிகார் மாநில பொது மக்களுக்குத்தான் அனுதாபம் இல்லையென்றால் போலீஸுக்குமா மனிதாபிமானம் இல்லாமல் போய்விட்டது!
அது சரி! போலீஸும் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தானே!!
No comments:
Post a Comment