Thursday, September 27, 2007

பெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது!

பெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது

மும்பை: தனக்கு பிறந்த பெண் குழந்தையை, எட்டு வயதில் இருந்து தாரமாக மாற்றி நான்காண்டுகளாக தொடர்ந்து கற்பழித்து வந்த காமுகன் கைது செய்யப்பட்டான்.

மும்பையைச் சேர்ந்தவன் மோதிலால் சிங். வயது 32. புறநகர் பகுதியில் வடை, பஜ்ஜி விற்பது தான் தொழில். தனது தாய், மனைவி மற்றும் குழந்தையுடன், நிர்மல் நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறான் மோதிலால் சிங். மனைவி மட்டுமின்றி, தனது சொந்த மகள் மீதும் காமம் கொண்டான் மோதிலால் சிங். சிறுமிக்கு எட்டு வயதானதிலிருந்து, அவளை கதறக் கதற கற்பழித்தான்.

இந்த விஷயம், அவன் குடும்பத்தில் யாருக்குமே தெரியாது. மனைவி மற்றும் தனது தாய் இல்லாத சமயங்களில் தான் தனது மகளுடன் தகாத உறவு வைத்துக் கொள்வது மோதிலால் சிங்கின் வழக்கம்.சில நாட்களுக்கு முன், மோதிலாலின் மனைவியும் தாயும் ஒரு திருமணத்துக்காக வெளியில் சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த சிறுமி கெஞ்சியும், கதறியும் மனமிறங்காமல் மீண்டும் கற்பழித்தான் மோதிலால்.வீடு திரும்பிய மோதிலால் மனைவியும், தாயும், சிறுமி அழுது கொண்டிருப்பதை பார்த்தனர்.

அவளிடம் விசாரித்த போது, இதுவரை நடந்த எல்லா விஷயத்தையும் கண்ணீருடன் கொட்டித் தீர்த்து விட்டாள் அந்த சிறுமி.அதன் பிறகு என்ன? வழக்கம் போலத் தான். கணவனுடன் மனைவி சண்டை போட, மகனை தாய் திட்ட, குடும்பத்தில் தினமும் ரகளைதான். இதனால் மிரட்சியடைந்த சிறுமி, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ஒரு ரயிலில் ஏறி, லோயர் பரேல் ரயில் நிலையத்தில் இறங்கி விட்டாள். அதன் பிறகு என்ன செய்வது என்பது தெரியாமல், ரயில் நிலையத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தாள்.சந்தேகமடைந்த பெண் போலீஸ் ஒருவர், சிறுமியிடம் விசாரித்தார்.

முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னாள் சிறுமி. இதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்காக பாடுபடும், "சாத்தி' என்ற சமூக சேவை நிறுவனத்தாருக்கு ரயில்வே போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள், சிறுமியிடம் விசாரித்த போது, ஓரளவு தகவல்கள் தெரிய வந்தன.மும்பை மத்திய ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விஷயத்தை கூறினர். போலீசார் சிறுமியிடம் சகஜமாக பேச்சுக் கொடுத்து விசாரித்தனர். அப்போது எதற்காக வீட்டை விட்டு வெளியேறினாள் என்பது உட்பட எல்லா விஷயத்தையும் கூறினாள் சிறுமி. நாக்படா போலீஸ் மருத்துவமனையில் அந்த சிறுமியை பரிசோதித்தனர். அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டிருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து மோதிலால் சிங் மீது வழக்கு பதிவு செய்து, அவனை கைது செய்தனர். அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

நன்றிங்க

படிக்கும்போது நெஞ்சு பதறி கண்ணீர் நிறைகிறதய்யா :(((

2 comments:

வடுவூர் குமார் said...

இன்று சிங்கை செய்தித்தாளில் இதே மாதிரி செய்தி போட்டுள்ளார்கள் ஆனால் சொந்த மகள் இல்லை.
கொடுமை தான்.

முஸ்லிம் said...

வடுவூர் குமார் உங்கள் வரவுக்கும் தகவலுக்கும் நன்றி.