ராஜிவ் கொலை சதிகாரன் "கேபி' தாய்லாந்தில் கைது
புதுடில்லி: ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சி.பி.ஐ., அதிகாரிகளாலும், சர்வதேச போலீசாராலும் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி., தாய்லாந்தில் கைது செய்யப் பட்டான். அவனை உடனடியாக ஒப்படைக்கும் படி தாய்லாந்து அரசிடம் சி.பி.ஐ., கேட்டுக் கொண்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு இரண்டு சர்வதேச பிரிவுகள், பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன. கே.பி., பிரிவு மற்றும் அய்யனா குழு என்று அவை அழைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பெயர்களில் பல்வேறு நாடுகளில், விடுலைப் புலிகளுக்காக ஆயுதம் சேகரித்து கடத்துதல், நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான் கேபி. இவன் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு இருந்தான்.
தாய்லாந்தின் ரனாங் மாகாணத் தில், நேற்று முன்தினம் குமரன் பத்மநாதனும், விடுதலைப்புலி அமைப்பை சேர்ந்த மேலும் இருவரும், துப்பாக்கிகளும் 45 ஆயிரம் தோட்டாக்களும் வாங்க முயன்றபோது பிடிபட்டனர்.ராஜிவ் கொலையாளிகளுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி அளித்தவர் குமரன் பத்மநாதன். ராஜிவ் கொலை வழக்கில் பல ஆண்டுகளாக இவனை சி.பி.ஐ., தேடி வருகிறது. இது தொடர்பாக 23 நாடுகளிடம் தகவல் தெரிவித்து தேடுதல் வேட்டை நடத்தியது.
சுவீடனில் இவனைப் பிடிக்க சி.பி.ஐ., முயன்றபோது அவன் தப்பி விட்டான். இந்நிலையில், பாங்காக்கில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனை உடனடியாக ஒப்படைக்கும் படி சி.பி.ஐ., அந்த அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ராஜிவ் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தாய்லாந்து அரசிடம் சி.பி.ஐ., அளித்துள்ளது. இதனையடுத்து சி.பி.ஐ., அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தும் போது 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த பல்வேறு சதிப் பின்னணிகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றிங்க, தினமலர் 12/09/2007
பலநாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான்!
11 comments:
//துப்பாக்கிகளும் 45 ஆயிரம் தோட்டாக்களும் //
போயும் போயும் 45 ஆயிரம் தோட்டாக்கள் ! heheheheheheheheheh
அப்புறம் தாய்லாந்து அறிவித்துள்ள இந்த செய்தியையும் படியுங்கள். அப்புறமா நான் ஒரு பழமொழி சொல்றேன்
-----தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும், அதன் வெளிநாட்டு ஆயுதக் கொள்வனவு முகவருமான குமரன் பத்மநாதனை கைது செய்யவில்லை என்று தாய்லாந்து அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தாய்லாந்தின் இன்ரபோல் தலைவர் கேணல் அபிசாட் சுரிபன்யா தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகரும், அதன் வெளிநாட்டு ஆயுத முகவராக 20 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டவருமான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பாங்கொக்கில் கைது செய்யப்படவில்லை.
குடிவரவு, குடியகல்வு திணைக்கள அறிக்கைகளின் படி கடந்த இரு வருடங்களாக அவர் தாய்லாந்திற்குள் நுழைந்ததற்கான தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் இலங்கையைச் சேர்ந்த எவரையும் நாம் கைது செய்யவில்லை.
இது தொடர்பில் பங்கொக்கில் உள்ள சிறிலங்கவின் தூதரகத்திலும் தகவல்கள் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும் பத்தமநாதனை சிறிலங்காவிற்கு நாடு கடத்துமாறு கோரி சிறிலங்கா அரசாங்கத் தரப்பு தாய்லாந்து காவல்துறையினரை நாடியுள்ளதாக வெளிவந்த தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.
இதனிடையே, குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத்தின் படைத்துறை இணையத்தளம் தாய்லாந்து தகவல்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியிட்டிருந்ததுடன், பத்மநாதனின் கைது தொடர்பாக தாய்லாந்து அரசாங்கத்தின் உறுதியான தகவல்களுக்காக தாம் காத்திருப்பதாக இந்தியாவின் "ஹிந்துஸ்த்தான் ரைம்ஸ்" நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணலின் போது சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.---
கெட்டிக்காரன் புழுகு எட்டுநாளைக்கும் இல்லை.. heheheh
//துப்பாக்கிகளும் 45 ஆயிரம் தோட்டாக்களும் //
அப்போ இந்த செய்தி போலிதானா...?
- நன்றிங்க கொழுவி :)
தினமலரின் ஈழ வெறுப்பு அனைவரும் அறிந்ததே அந்த நாய்களின் செய்தியை உண்மையை அறியாமல் போட்டுவிட்டீர்கள் நண்பரே. தினமல்ரும் ஹிந்துவும் என்று ஒழிகின்றதோ அன்றுதான் தமிழருக்கு விடிவுகாலம் பிறக்கும்.
//கெட்டிக்காரன் புழுகு எட்டுநாளைக்கும் இல்லை.. heheheh //
Thai police deny Tamil Tiger leader held in Bangkok
http://in.reuters.com/article/southAsiaNews/idINIndia-29477520070912
45 ஆயிரம் தோட்டாக்களின் அளவுதெரியாத மடையர்கள்தான் இந்த தினமலர் காரர்களா.........ஐயோ .....ஐயோ
வந்தியத்தேவன், குழைக்காட்டான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
பகீரதன் உங்கள் வரவுக்கு நன்றி.
சங்கரராமன் கொலை சதிகாரன் ஜெயேந்திரன் என்கிற சுப்பிரமணி கோர்ட்டில் ஆஜர் என்று தினமலம் தலைப்பிடுமா?
ஈழத்தில் விடுதலைக்காக போராடும் சகோதரர்களை பற்றி 'தினமலம்' வகையறாக்களிடமிருந்து நடுநிலையான செய்தியை எதிர்பார்ப்பது வாசகர்களின் தவறு.
அருண்மொழி, பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கு நன்றி.
தவறானச் செய்தியைச் சொன்ன தினமலரை ஒரு வழியாக்க எண்ணி விட்டீர்கள் நடத்துங்க :)
அடச்சே!
இப்பிடிக் கேவலப்படுத்திப் போட்டாங்களே?
45 ஆயிரம் தோட்டாக்கள் வாங்கிறதெண்டு சொல்லி கேவலப்படுத்திப் போட்டுது தினமலர்.
சொன்னது தான் சொன்னாங்கள், 45 ஆயிரம் ஆட்லறி எறிகணைகள் எண்டு சொல்லி இருந்தாலும் பெருமையா இருந்திருக்கும்.
இன்னும் எண்பதுகளின்ர தொடக்கத்திலதான் உவங்கள் இருக்கிறாங்கள்.
Post a Comment