Sunday, September 16, 2007

3. கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்.

கல்யாணம் செய்வதாக கூறி பெண்ணைக்
கற்பழித்து ஏமாற்றிய என்ஜீனியர்!

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007

தூத்துக்குடி:

தூத்துக்குடி பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி சென்னைக்கு அழைத்துச் சென்று கற்பழித்து விட்டுத் தலைமறைவான மின்வாரிய பொறியாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆயிரம் காத்தான். இவரது மகள் ஜெயலெட்சுமி. புளியம்பட்டியில் உள்ள ஃபேன்ஸி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

தூத்துக்குடி தெர்மல் நகர் அனல் மின் நிலைய குடியிருப்பு 2-ஐ சேர்ந்தவர் சித்திவிநாயகமூர்த்தி. புளியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2005ம் ஆண்டு ஜெயலட்சுமி வேலை பார்த்து வந்த கடைக்கு சித்திவிநாயகமூர்த்தி வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இதை தொடர்ந்து சித்திவிநாயகமூர்த்தி, ஜெயலட்சுமி வீட்டிற்கு மின் இணைப்பு கிடைக்க ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 7-10-2005ல் ஜெயலட்சுமியை சென்னைக்கு அழைத்து சென்று சித்திவிநாயகமூர்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் தெர்மல் நகரில் உள்ள தனது வீட்டிற்கும் அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

நட்பு நெருக்கமான பழக்கமானதால், தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஜெயலட்சுமி வற்புறுத்தினார். ஆனால் சித்திவிநாயகமூர்த்தி கல்யாணம் செய்ய மறுத்து விட்டார். மேலும், தொடர்ந்து தொல்லை கொடுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து ஜெயலட்சுமி புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சித்திவிநாயகமூர்த்தி தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நன்றிங்க

எமாறும் பெண்கள் இருக்கம்வரை ஏமாற்றும் ஆண்களும் இருப்பார்கள்!

பெண்களே உஷார்!!

3 comments:

முஸ்லிம் said...

மாசிலா உங்கள் பின்னூட்டம் கொஞ்சம் விரசம்.

மாற்றி எழுதுங்கள்.

மாசிலா said...

முஸ்லிம் அய்யா!

மொதோ நீங்க உங்களுடைய பார்வைய மாத்துங்க!

உங்கள யாருயா தப்பு கணக்கெல்லாம போட சொன்னது?

;-D

முஸ்லிம் said...

மாசிலா அய்யா

விரசமான ரெட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள் என் பதிவுக்கு மறுமொழியாகத் தேவையில்லை.

முடிந்தால் மாற்றி எழுதுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்!