Friday, September 28, 2007

03.ஏ.டி.எம் அட்டைகள் ஜாக்கிரதை!

03. வேலை பார்த்த வீட்டில் கிரெடிட் கார்டு திருடி ரூ.14 லட்சம் "லபக்' * ஷேர் ஆட்டோக்கள் வாங்கிய புது பணக்காரன் சிக்கினான்

சென்னை : கிரெடிட் காடு மற்றும் ஏ.டி.எம்., கார்டுகளை திருடி ரூ.18 லட்சம் மோசடி செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஷேர் ஆட்டோகள், ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல் தெருவில் வசிப்பவர் சீனிவாசன்(52). பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்.

இவரது சகோதரர் கல்யாணகிருஷ்ணன்; சாப்ட்வேர் இன்ஜினியர். அமெரிக்காவில் கட்டட கான்ட்ராக்டராக உள்ளார். சீனிவாசனின் மனைவி மற்றும் மகன்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். நெல்லை குறுக்கல்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள்(50). சென்னை தண்டையார் பேட்டையில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தவர், சீனிவாசனின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். சீனிவாசன் சொந்தமாக கார் வைத்திருந்தார். செல்லம்மாளின் உறவினர் நெல்லையை சேர்ந்த முத்துராஜ்(32), சீனிவாசனின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்.

கல்யாணகிருஷ்ணன் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணக்கில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள புதிய கிரெடிட் கார்டு பெற்றார். அதை சீனிவாசனிடம் கொடுத்து விட்டு அமெரிக்கா சென்றார். சீனிவாசனின் வீட்டில் இருந்த புதிய கிரெடிட் கார்டு செல்லம்மாளிடம் கிடைத்தது. அதை முத்துராஜிடம் கொடுத்தார். கார்டை பயன்படுத்த தெரியாத முத்துராஜ் நான்கு மாதம் வீட்டில் வைத்திருந்தார். பின்னர் நண்பரிடம் காண்பித்தார். ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை போட்டு பணம் எடுக்கும் விதத்தை முத்துராஜூக்கு அவரது நண்பர் சொல்லிக் கொடுத்தார்.

இதையடுத்து சிறிது சிறிதாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.14 லட்சத்தையும் முத்துராஜ் எடுத்தார். சொந்த ஊரான குறுக்கல்பட்டியில் ரூ.2 லட்சத்தில் பழைய வீட்டை புதுப்பித்தார். ரூ.4 லட்சத்தை வட்டிக்கு விட்டார். ரூ.8 லட்சத்தில் இரண்டு ஷேர் ஆட்டோக்கள் வாங்கி சென்னையில் வாடகைக்கு விட்டார். அமெரிக்காவில் இருந்த கல்யாணகிருஷ்ணன் சென்னை திரும்பினார். அவரது வங்கி கணக்கில் ரூ.14 லட்சத்துக்கு பதிலாக ரூ.112 மட்டுமே இருந்தது. இது குறித்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் அவர் புகார் அளித்தார். உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், சப்இன்ஸ்பெக்டர்கள் முத்து, ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையிலான போலீசார் புது பணக்காரனான முத்துராஜ் மற்றும் வேலைக்காரி செல்லமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி பணத்தில் வாங்கப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சம்பவம்:

இதேபோன்ற மற்றொரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. அதன் விவரம்: சென்னை ராஜாஜி சாலையில் "ஆல்பா லைன்ஸ் ஷிப்பிங்' என்ற தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இதன் மேலாளர் தப்பான் உபாசக். நிறுவனத்தின் பெயரில் எச்.எஸ்.பி., வங்கியில் இரண்டு ஏ.டி.எம்., கார்டுகளை பெற்றார். ஏ.டி.எம்., கார்டு மற்றும் ரகசிய குறியீட்டு எண் அடங்கிய கவரை, சிங்கப்பூரில் உள்ள நிறுவன உரிமையாளருக்கு கூரியர் மூலம் அனுப்பினார். சிங்கப்பூரில் இருந்த உரிமையாளர், உலகம் முழுவதிலும் உள்ள தனது நிறுவனத்தின் கணக்குகளை ஆன்லைனில் தினமும் சரி பார்த்து வந்தார்.

சென்னையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் எடுக்கப்பட்டிருந்தø த கண்டுபிடித்தார். சென்னை நிறுவன அதிகாரியான தப்பான் உபாசக்கிடம் பேசினார். "வங்கி கணக்கில் ஏ.டி.எம்., கார்டு பெற்று உங்களுக்கு அனுப்பியுள்ளேன்' என அவர் கூறியுள்ளார். "சிங்கப்பூருக்கு ஏ.டி.எம்., கார்டு வந்து சேரவில்லை' என உரிமையாளர் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம், உபாசக் நேற்று முன்தினம் காலை புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தினர்.

சென்னையில் "டி.டி.டி.சி.,' கூரியர் நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த மோகன் மகன் நாகேந்திரன்(22). கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், பார்சலை உடைத்து அதில் இருந்த ஏ.டி.எம்., கார்டுகளை திருடினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதுப்பாளையம் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்த காமராஜ் மகன் ஸ்ரீராஜ்(24) மற்றும் நாகேந்திரன் நண்பர்கள். இருவரும் சேர்ந்து ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ.4 லட்சம் எடுத்து இருந்தனர். நாகேந்திரன், ஸ்ரீராஜ் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்த ரூ.4 லட்சத்தையும் போலீசார் மீட்டனர்.

நன்றிங்க

''திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்

அதைச் சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கும்

திருடராய் பார்த்து...''

No comments: