01. ஆஸ்திரேலியா பெண் வரதட்சணை கொடுமை வழக்கில் புதிய திருப்பம் * சுமையாவை கைது செய்ய போலீசார் தீவிரம்
ராமநாதபுரம் : ஆஸ்திரேலியா பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய துபாய் கணவர் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் வெளிபட்டிணத்தை சேர்ந்தவர் கரீம்கனி(67). இவரது பேத்தி சுமையா(21) பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். சுமையாவுக்கும் பெரியபட்டிணத்தை சேர்ந்த மொகைதீன்ஹாருனுக்கும் திருமணம் நடந்தது
கணவருக்கு ஆஸ்திரேலியாவில் விசா வாங்கியிருந்த சுமையா, 2007 மார்ச் 13ல் தனக்கும் தனது கணவருக்கும் இடையே உள்ள உறவு, கருத்து வேறுபாடால் முறிந்துவிட்டது என ஆஸ்திரேலியா ஹைகமிஷனில் முறையிட்டு, கணவரின் விசாவை ரத்து செய்யும்படி மனு செய்தார். ஆஸ்திரேலியா ஹைகமிஷன் 2007 ஏப்.2ல் மொகைதீன் ஹாருனின் விசாவை ரத்து செய்தது. அதன் பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், மொகைதீன் ஹாருன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக ராமநாதபுரம் மகளிர் போலீசில் சுமையா புகார் கொடுத்தார். மொகைதீன் ஹாருனின் வீட்டிற்கு சென்ற பெண் போலீசார், மொகைதீனின் தாயார் முகபத்பீவியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். மொகைதீனின் தாய்மாமன் மெக்தர்அலி, சுமையாவின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்தனர்.
மறுநாள், சுமையா மற்றும் அவரது உறவினர்கள், பெரியபட்டிணத்தில் மொகைதீன் ஹாருன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக திருப்புல்லாணி போலீசார், சுமையா
உள்ளிட்ட ஆறுபேரை தேடி வருகின்றனர்.
நன்றிங்க
பெண்கள் பயன்படுத்தும் ''வரதட்சணை கொடுமை'' என்ற விஷம ஆயுதத்தால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்பட்டு பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது.
No comments:
Post a Comment