9.மாணவி தனியறையில் அடைப்பு : அரசு பள்ளி ஆசிரியர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை காரையூர் மறவாமதுரையைச் சேர்ந்த மாணவி உஷா (வயது15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படிக்கிறார். செப்., 26ல் சக மாணவியருடன் பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புக்கு சென்றார். அன்று மாலை பள்ளி முடிந்தும், உஷா வீடு திரும்பவில்லை. அவரை தேடி பெற்றோர் பள்ளிக்கு சென்றனர். சிறப்பு வகுப்பு நடத்திய ஆசிரியர் முத்து (36)விடம் விசாரித்தனர். சக மாணவியுடன் உஷா, மங்கனூர் கிராமத்துக்கு சென்றதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், பெற்றோர், வகுப்பறைகளை திறந்து பார்த்தனர். ஆசிரியர் தங்கும் அறையில் உஷா மட்டும் தனியாக இருந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். ஆசிரியர் முத்து தவறான எண்ணத்துடன் தன்னை அழைத்தார். பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தனியாக அடைத்து வைத்திருந்தார் என உஷா தெரிவித்தார். ஆசிரியர் முத்து, ஏற்கனவே திருமணம் ஆனவர். இரு குழந்தைகளும் உள்ளனர். ஏற்கனவே இத்தகைய புகார்களுக்கு ஆளானவர்.
பெற்றோர், பொதுமக்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர். பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பும் தடைபட்டது. ஆசிரியர் முத்துவை காப்பாற்ற கல்வித்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். முதன்மைக்கல்வி அலுவலர் செல்லம் தலைமையில், சமாதானக்குழு அமைத்து, பெற்றோருடன் பேச்சு நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாததால், ஆசிரியர் முத்து மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். வேறுவழியில்லாத முதன்மைக்கல்வி அலுவலர் செல்லம், ஆசிரியர் முத்துவை சஸ்பெண்ட் செய்தார்.
நன்றிங்க, தினமலர் 30.09.2007
மாணவியின் மீது பாலியல் பலாத்காரம் தாக்குதலுக்கு தயாரான அயோக்கினுக்காக என்ன பரிந்து பேச வேண்டியிருக்கு? சட்டப்படி தண்டிக்க வேண்டியதுதானே முறை!
1 comment:
இது போல நடக்காமல் இருக்க வேன்டுமெனில் இஸ்லாம் காட்டித் தந்த முறை - அதாவது ஆனுக்கு ஆண், பென்னுக்கு பென் ஆசிரியர்களை நியமித்து வகுப்பு எடுப்பதுதான் சரி என்பது எனது கருத்து
முஹம்மது இக்பால்
Post a Comment