Thursday, September 06, 2007

ஒரு மறுமொழியின் தகவல்!

வேறு பதிவில் பிறைநதிபுரத்தானின் மறுமொழி. தொடர்புடைய பதிவின் கருத்துகள் நீக்கப்பட்டிருக்கின்றன!

பிறைநதிபுரத்தான் has left a new comment on your post "4.பிச்சைக்காரியான விளம்பர நடிகை!":
----------------------------------------------------------------------

பதிவுக்கு சம்பந்தமில்லாத செய்தி ஒன்று:

தமிழ்மணத்தில் நான் படித்த இன்னொரு பதிவு ( http://neshamudan.blogspot.com/2007/08/blog-post_7527.html) 'மாற்றுமதத்தவர்களை காபிர்கள் என்று அழைத்து முஸ்லிம்கள் ஏன் அவமதிக்கிறார்கள்?' என்று முட்டாள்த்தனமாக தலைப்பிட்டு சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வம்பு பதிவாக உள்ளது..அதில் உங்கள் வலைப்பூவிற்கும் தொடர்புகொடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு தெரிந்தேதான் இது நடக்கிறதா?

மேற்கண்ட கட்டுரைக்கு பிண்ணூட்டமிடவும் வகைசெய்யவில்லை.

(தங்களின் இ.மெயில் தெரியாததால் இந்த பின்னூட்டதுடன் சேர்த்து எழுதவேண்டியதாகிவிட்டது- மன்னிக்கவும்).

pirainathipurathaan@gmail.com

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by பிறைநதிபுரத்தான் to முஸ்லிம் at 7:22 AM


neshamudan.blogspot.com இந்த முகவரியில் உள்ள வலைப்பதிவை இப்போதுதான் பார்க்கிறேன். muslimpage.blogspot.com என் வலைப்பதிவின் சுட்டியை அங்கே கொடுத்திருக்கிறார்கள் என்பதைத் தவிர அந்த வலைப்பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை!

அந்த வலைப்பதிவில் இன்னும் சில பதிவுகளையும் வாசித்து பார்த்ததில் எனக்கு தோன்றியதை எழுதுகிறேன்.

இஸ்லாத்தை ஏற்காதவர்களை அல்குர்ஆன் காஃபிர் என்று சொல்லித் திட்டுகிறது என முன்பு இஸ்லாத்துக்கு எதிராக சிலர் எழுதிவந்தார்கள். காஃபிர் என்பது ஏச்சு இல்லை இஸ்லாத்தை மறுத்தவர் நிராகரித்தவர் என்ற அர்த்தத்திலே சொல்வது என முன்பு சில முஸ்லிம் வலைஞர்கள் பதில் எழுதினார்கள். காஃபிர் என்பதை அவமானமான சொல்லாக சித்தரிக்க முயன்றவர்க்கு neshamudan பதிவின் வலைஞர் பதிலாக அவர்கள் பாணியில் தலைப்பிட்டு பதில் சொல்லியிருக்கிறார் என்று கருதுகிறேன்.

என் மின்னஞ்சல் முகவரி: tomuslim[AT]gmail.com

9 comments:

╬அதி. அழகு╬ said...

ஒருவனைத் திருடன் - தீயவன் என்று குறிப்பதற்கு இந்து, முஸ்லிம், கிருத்துவர் ஆகிய அனைத்து மலையாளிகளும் ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ளும் சொல் "கள்ளக் காஃபிரு". இது தமிழுக்கு எப்படி வந்தது?

சகோ. பிறைநதி புரத்தான் கேட்பதில் பொருளிருக்கிறது. கவர்ச்சிக்காக ஏன் அவ்வாறு தலைப்பிட வேண்டும்? "காஃபிர் என்பது கெட்ட வார்த்தையா?" என்று தலைப்புக் கொடுத்திருந்தால் பொதுவானாதாக இருக்கும் என்பதைச் சம்பந்தப் பட்டவர்கள் உணர வேண்டும்.

பிறைநதிபுரத்தான் said...

அந்த வலைப்பதிவுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அறிந்து மகிழ்ச்சி! நான் அந்த வலையில் உள்ள குறிப்பிட்ட இந்த கட்டுரையை
மட்டும் பற்றித்தான் என் கருத்தை கூறினேன்.

சகோதரர் அழகு சொன்னது போல் தலைப்பிட்டிருந்தால் இந்த குழப்பமே இருந்திருக்காது. அதனால்தான் தலைப்பே - முட்டாள்தனமாக இருக்கிறது
என்று எழுதியிருந்தேன்.

அடுத்து, நேசமுடன் தன்னுடைய பதிவு யாருக்காக எழுதப்பட்டது என்பதை எங்கும் குறிப்பிடவில்லை. அப்படியே பதிலளிக்க எண்ணியிருந்தால்,
அந்தப்பதிவுக்கு நேசமுடன் சென்று நேர்மையாக பதில் எழுதியிருக்க முடியுமே? ஏன் செய்யவில்லை. அதனால், அவருக்கு சாதகமான தங்களின் கருத்தை
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

சங்பரிவார வகுப்புவதி எவராவது இஸ்லாத்தை தூற்றி எழுதியிருந்தால் அந்த நபரை அல்லது கும்பலை/கோஷ்டியை மட்டும் விளித்து எழுதாமல் -
பொத்தாம் பொதுவாக 'மாற்றுமதத்தவர்களே' என்று வாசகர்களை அழைக்கவேண்டிய அவசியமென்ன? எங்கேயோ இடிக்கிறதே...

இறுதியாக, அந்தக்கட்டுரையில் உள்ள கடைசி இரண்டு பத்திகள் படித்துப்பாருங்களேன் -

மாற்று மதத்தவர்களே! - 'காஃபீர்' என்ற சொல் உங்களை புண்படுத்துவதாக கருதினால், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.-நேசமுடன்

மாற்று மதத்தவர்களே! 'காஃபீர்' என்ற நீங்கள் அழைக்கப்படுவது உங்களை புண்படுத்துவதாக கருதினால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்களை எவரும் 'காஃபீர்' (இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்) என்று அழைக்க மாட்டார்கள்.-நேசமுடன்

என்ன படித்தீர்களா? இந்த வரிகளில் இஸ்லாம் எங்கிருக்கிறது? அது வலியுறுத்தும் அமைதி எங்கிருக்கிறது?
யாருக்காவது விளக்கம் அளிக்கவேண்டும் என்ற எண்ணம் சிறு துளியாவது இருந்திருந்தால் நேசமுடன் இவ்வளவு குதர்கத்தோடு எழுதியிருப்பாரா?.

நேசமுடன் என்ற பெயரிலே இதுபோன்ற விஷ எழுத்துக்களை எழுதி -இஸ்லாத்தை அவமதிக்கும்
இந்த கட்டுரையை நேசமுடன் உடனடியாக தன்னுடைய பதிவிலிருந்து நீக்கவேண்டும் அல்லது இந்தகருத்துக்களின் மீதான உரையாடலுக்கும் விவாதத்திற்கும் வசதியாக அந்தப்பதிவில்
பின்னூட்டமிட வழியமைக்கவேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

பிறைநதிபுரத்தான் said...

என்னுடைய பின்னூட்டத்தில் கடைசி பத்தியில் சிறு திருத்தம்:

நேசமுடன் என்ற பெயரிலே இதுபோன்ற விஷ எழுத்துக்களை எழுதி - மாற்றுமதத்தவரை புண்படுத்தி - இஸ்லாத்தை அவமதித்து, மத நல்லிணக்கத்தை கெடுக்கும்
இந்த கட்டுரையை 'நேசமுடன்' உடனடியாக தன்னுடைய பதிவிலிருந்து நீக்கவேண்டும் அல்லது இந்தகருத்துக்களின் மீதான உரையாடலுக்கும் விவாதத்திற்கும் வசதியாக அந்தப்பதிவில்
பின்னூட்டமிட உடனடியாக வழியமைக்கவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

முஸ்லிம் said...

அழகு உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சம்பந்தப்பட்டவர் தலைப்பையும், கட்டுரையின் கருத்தையும் மாற்ற வேண்டும்.

முஸ்லிம் said...

பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஒரு விஷயத்தைப் பார்த்து கருத்து சொல்ல வந்தால் அதன் தாக்கம் எதனால் என்பதையும் பார்க்க வேண்டும். ''அல்குர்ஆன் இஸ்லாத்தை ஏற்காதவர்களை காஃபிர் என்று திட்டுகிறது'' என விளம்பரம் செய்வது எப்படித் தவறான கருத்தோ, அதே தவறான கருத்துடனேயே ''காஃபிர் என்று அழைத்து மாற்று மதத்தவர்களை முஸ்லிம்கள் அவமதிப்பது ஏன்?'' என்ற தலைப்பும் சொல்லப்பட்டுள்ளது.

இரண்டிலும் முட்டாள் தனம் இருக்கிறது என்று உடைத்து சொல்லவில்லையே தவிர, ''பதிலாக அவர்கள் பாணியில் பதில் சொல்லியிருக்கிறார் என்று கருதுகிறேன்'' என அவர்கள் பாணி எதுவோ அதுவே இங்கும் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தில் எழுதியிருக்கிறேன்.

அந்த பதிவில் என் பதிவுக்கு சுட்டிக் கொடுக்கப்பட்டிருப்பதால் அதற்கும் எனக்கும் தொடர்பு உண்டா? என்ற உங்கள் சந்தேகத்தை மட்டுமே நான் நீக்க வேண்டியிருந்தது. அதை மட்டுமே எழுதயிருந்தேன் அவ்வளவுதான். அதனால் அதில் உள்ள கருத்துக்களை சரி கண்டதாக ஆகாது.

பிறைநதிபுரத்தான் said...

ஒரு விஷயத்தைப் பார்த்து கருத்து சொல்ல வந்தால் அதன் தாக்கம் எதனால் என்பதையும் பார்க்க வேண்டும்.-முஸ்லிம்

பிரச்சினையே அதுதானே!நேசமுடன் யாருக்கு (எந்த முட்டாளுக்கு) பதிலளிப்பதற்காக இப்படி 'முட்டாள்தனமாக' எழுதினார் என்றும், அவரை எழுத தூண்டியது எது? என்றும் தகவல் இல்லாத்தால்தான் இவ்வளவு பிரச்சினை.

இரண்டிலும் முட்டாள் தனம் இருக்கிறது -முஸ்லிம்.

'கட்டுரையில்' நேசமுடனின் முட்டாள்தனம், மட்டும்தான் 'தெளிவாக' இருக்கிறது.

Anonymous said...

பிறைநதி சொன்ன மாதிரி, 'நேசமுடன் இஸ்லாம்' பதிவுகள் கொஞ்சம் வெவகாரமானதாத்தான் இருக்கு. இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வர வேண்டும் என்பதற்காக யாரோ செய்யும் சதித் திட்டமோ என எண்ணத் தோனுது. இறைநேசனுக்கு அவர் இணைப்புக் கொடுத்திருப்பது பற்றி எனக்கு கொஞ்சமும் ஆச்சரியமில்லை. ஆனால் உங்களுக்கும் அவர் இணைப்புக் கொடுத்து, ஒங்களைத் தரம் தாழ்த்த அவர் முயல்வது அவர் தீட்டியுள்ள சதி. நீங்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது நல்லது.

பிறைநதிபுரத்தான் said...

'நேசமுடன்' கேணத்தனமாக எழுதிய இன்னொரு பதிவின் சுட்டி.

http://neshamudan.blogspot.com/2007/09/blog-post_722.html

விழாக்காலங்களில் - ஜவுளிக்கடைவாசலில் நின்றுக்கொண்டு வழிப்போக்கர்களையெல்லாம் கையைப்பிடித்து கடைக்குள் அழைப்பது போல் - 'சத்திய மார்க்கத்தை' நோக்கி அழைக்கிறார். இதுதான் 'நேசமுடன்' பாணி அழைப்புப்பணி போலிருக்கிறது..

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வர வேண்டும் என்பதற்காக யாரோ செய்யும் சதித் திட்டமோ என எண்ணத் தோனுது.A Critic

A Critic சொல்வதுதான் எனக்கும் சரியாகப்படுகிறது.

'நேசமுடன்' தான் எழுதுவதில் நியாயம் இருப்பதாக-உண்மை இருப்பதாக கருதினால் பிண்ணூட்ட வசதியை ஏன் கோழைத்தணமாக நீக்கவேண்டும்?. உரையாடலுக்கு - விவாதத்திற்கு பயந்து ஓடி ஒளிய வேண்டும்?

'நேசமுடன்' என்ற பெயரில் 'நீசமுடன்' எழுதும் முட்டாள்-கோழை- நரி யார் என்ற செய்தி இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளிவரும்.

Anonymous said...

//இறைநேசனுக்கு அவர் இணைப்புக் கொடுத்திருப்பது பற்றி எனக்கு கொஞ்சமும் ஆச்சரியமில்லை.//

ம்..ம்ம்.

பின்னூட்டுவதற்காகவே ஒரு தனி வலைப்பதிவு திறந்து விஷமம் புரியும் A Critic க்கிற்கும், என் வலைப்பதிவை என் அனுமதியின்றி என்னைக் கேளாமலேயே இணைப்பு கொடுத்திருக்கும் அந்த நேசமுடன் வலைப்பதிவாளருக்கும் முட்டாள்தனத்தில் எந்த வித்தியாசமும் இருப்பதாக நான் கருதவில்லை.

எனினும் இந்தப் பின்னூட்டம் மூலம் அந்த வலைப்பதிவில் என் பதிவின் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது என்ற தகவலை எனக்குத் தந்த விஷம Critic க்கிற்கு என் நன்றிகள்.

A Critic அவர்களே,

சுகமான ஓய்வில் என்னை சிறிது காலம் அப்படியே இருக்க விடுங்களேன். தயவுசெய்து அனாவசியமான சீண்டல்கள் என்னிடம் வேண்டாம்! அப்புறம் குத்துதே குடையுதே என்று கூறுவதனால் யாதொரு பிரயோஜனமும் விளையாது.

அதீத பாசத்துடன்
இறை நேசன்.