Wednesday, September 26, 2007

ஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு!

ராதிகா செல்வி Vs கீதா ஜீவன்: ஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007

தூத்துக்குடி:

தூத்துக்குடியில், மத்திய இணை அமைச்சர் ராதிகா செல்வி ஆதரவாளர்களுக்கும், தமிழக அமைச்சர் கீதா ஜீவன் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் ஒன்றிய செயலாளர் வெட்டப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் சக்திவேல். இவர் தமிழக அமைச்சர் கீதா ஜீவனின் ஆதரவாளர். அப்பகுதியில் நடக்கும் அரசு விழா, மற்றும் கட்சி விழாக்களில் மத்திய இணை அமைச்சர் ராதிகா செல்வியின் பெயரை அழைப்பிதழ்கள் -போஸ்டரில் போடாமல் புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராதிகா செல்வி ஆதரவாளர்கள் கோபத்துடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் விஸ்வ ஹந்து பரிசத் முன்னாள் எம்.பி வேதாந்தியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் கட்சியனர் 8 பேர் ஒரு வாகனத்தில் உடன்குடி திரும்பியுள்ளனர்.

அப்போது வரண்டிவேல் விலக்கு என்ற பகுதி அருகே ஒரு கார் இவரது வாகனத்தை மறித்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றிய செயலாளர் சக்திவேலை அரிவாளால் வெட்டி வாகனத்தையும் சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனராம்.

இது குறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெட்டப்பட்ட ஒன்றிய செயலாளர் சக்திவேல் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒரே கட்சியின் இரு பெண் அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றிங்க

என்ன அநியாயங்க இது?

ஒரு கட்சிக்குள்யேயே இப்படி வெட்டுக் குத்து நடந்தால், ஒரே கட்சிக்காரங்க யாருக்காக போராட்டம் நடத்துவது?

No comments: