Thursday, September 06, 2007

பேய் விரட்டும் நம்பிக்கை உயிரைக் குடித்தது!

பேய் விரட்டும் நம்பிக்கை உயிருக்கு வைத்தது வேட்டு: தீயில் கருகி பெண் பலியான பரிதாபம்

பேய் விரட்டும் நம்பிக்கையில் தீப்பந்தத்தை கையிலெடுத்து நள்ளிரவில் கிராமத் தெருக்களில் பவனி வந்த பெண்கள், அருள் வந்து சாமியாடிய போது ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் பலியானார்.

கிருஷ்ணகிரி, பர்கூர், கல்லத்துப்பட்டியைச் சேர்ந்த லாரி டிரைவர் மத்தன், காஞ்சிபுரத்தில் சாலை விபத்தில் இறந்தார். அவர் ஆவியாக நடமாடுவதாக கிராமத்தில் புரளி ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் பீதி நிலவியது. இரவில் வெளியே யாரும் நடமாடுவது இல்லை.

இதற்கு பரிகாரம் செய்ய கிராம மக்கள் கூடி ஆலோசித்தனர். சாமியார் ஒருவரிடம் அருள் வாக்கு கேட்டனர். அவர் அள்ளிவிட்டதைக் கேட்ட கிராம மக்கள் அதன்படியே பரிகாரமும் செய்தனர்.பெண்களே ஒன்றாக கூடி பேயை விரட்ட திட்டமிட்டனர். இரவில் தீப்பந்தம் ஏந்தி, தெருவில் வலம் வந்து ஒவ்வொரு வீடாக செல்வது; வீடுகளின் கதவைத் தட்டி வீட்டுக்குள் தீப்பந்தத்தை காட்டி பூஜை செய்வது என்று முடிவு செய்தனர். இப்படி செய்தால் பேய் ஓடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதன்படி பெண்கள் தீப்பந்தம் ஏந்தி, நள்ளிரவில் தெருவில் பவனி வர ஆரம்பித்தனர்.பெண்கள் ஊர்வலத்தில் உடுக்கை, மேள தாளம் முழங்கின.

ஒரு வீட்டின் கதவை பெண் தட்டி தீப்பந்தத்தைக் காட்டினார். அப்போது, கிராம பெண்கள் அஜிதா, அம்சவேணி, சிவகாமி ஆகியோர் அருள் வந்து சாமி ஆடினர். தீப்பந்தம் பறந்து பெண்களின் சேலையில் தீ பற்றியது. சாமி தானே ஆடுகிறது என்று பெண் மீது பற்றிய தீயை அணைக்க யாரும் முன்வரவில்லை. தீ வேகம் அதிகரித்த அஜிதா கதறி துடித்த பின்தான் சிலர் சுயநினைவுக்குத் திரும்பினர். தீயை அணைக்க முயன்றனர். இதற்கிடையில் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி அஜிதா நேற்று இறந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க

அந்தோ பரிதாபம் :(

2 comments:

மாசிலா said...

பாவம் படிப்பறிவு இல்லாத வெளி உலகம் அறியாத வெகுளி மக்கள்.
இறப்பிற்கும் பின்னும் ஆவி அடுத்த பிறவி என்று நம்புவதினால் ஏற்பட்ட சோகங்கள்.

மறைந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி முஸ்லிம்.

முஸ்லிம் said...

மாசிலா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.