சென்னை: ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்த சடலத்தை மீட்க சென்ற ரயில்வே போலீஸ் மற்றும் இரண்டு வெளிநபர்கள் உட்பட மூன்று பேர் ரயிலில் அடிபட்டு இறந்தனர்.
சென்னை திருநின்றவூர் அருகே ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்த உடலை மீட்க ரயில்வே போலீஸ் ஜோசப் தன்னுடன் இரண்டு நபர்களை அழைத்துக்கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் பலியாயினர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்றிங்க, தினமலர் 10.09.2007
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஒரு தத்துவப் பாடல் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
''எறந்தவனெ சுமந்தவனும் எறந்துட்டா..?
அதெ இருப்பவனும் எண்ணிப் பாக்க மறந்துட்டா...?''
No comments:
Post a Comment