Sunday, September 23, 2007

வேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தமில்லை

வேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தமில்லை - பாஜக, வி.எச்.பி.

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 23, 2007

சென்னை:

முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து வி.எச்.பியைச் சேர்ந்த சாமியார் வேதாந்தி பேசியிருப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாஜகவும், வி.எச்.பியும் கூறியுள்ளன.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறுகையில், ராமர் குறித்து முதல்வர் கருணாநிதி பேசியிருப்பது ஆட்சேபனைக்குரியது. இதுகுறித்து மக்கள் மன்றத்தில் விவாதிக்க பாஜக தயாராக இருக்கிறது.

இதுகுறித்து கொள்கை ரீதியாக மக்களைக் கவர்ந்திட பிரசாரம் செய்து ஆதரவு திரட்டிட வேண்டுமே தவிர, அப்பாவி மக்களின் வீடுகள் மீது கல்லெரிவதும், அதுபோலவே வன்முறையைத் தூண்டும் வார்த்தைப் பிரயோகங்களோடு சவால் விடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முதல்வர் குறித்துக் கூட அயோத்தியைச் சேர்ந்த யாரோ ஒருவர் இதுபோன்ற வார்த்தைகளைப் பிரயோகித்தது கூட நான் அறிந்தேன். அவருக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது கருத்துக்கள் பாஜகவின் கருத்துக்களும் அல்ல. அதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.

வேதாந்தி வி.எச்.பியில் உறுப்பினராகக் கூட இல்லை என்று வி.எச்.பி. அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார். அவர் இதுகுறித்துக் கூறுகையில், வேதாந்தி வி.எச்.பி. அமைப்பில் உறுப்பினராகக் கூட இல்லை. அவரது கருத்து வி.எச்.பியின் கருத்து கிடையாது, அது அவரது சொந்தக் கருத்து.

அமைச்சர் வீராசாமி மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளார். அது நல்லதல்ல. அதை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் வேதாந்தம்.

நன்றிங்க

அந்தோ பரிதாபம் லோரும் சேர்ந்து இப்படிக் கழட்டி விடுவார்கள் என்று வேதாந்தி கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

No comments: