ஆட்டோ மோதி, 'ஹெல்மட்' உடைந்து
தலையில் குத்தி வாலிபர் பலி!
புதன்கிழமை, செப்டம்பர் 5, 2007
மார்த்தாண்டம் (கன்னியாகுமரி)
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மீது ஆட்டோ மோதியதில், அவர் அணிந்திருந்த ஹெல்மட் உடைந்து, அது தலையில் குத்திக் கிழித்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரு சக்கர வாகனங்களில் ஹெல்மட் அணிந்துதான் செல்ல வேண்டும் என தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஹெல்மட் அணிந்து சென்றதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள விழுந்தை அம்பலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தனது நண்பர் ரவிச்சந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மகேந்திரன் ஹெல்மட் அணிந்திருந்தார். ரவிச்சந்திரன் ஹெல்மட் போடாமல் பயணித்தார்.
இந்த நிலையில் எதிரே வந்த ஆட்டோ மீது மகேந்திரனின் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
தூக்கி வீசப்பட்ட மகேந்திரனின் ஹெல்மட் உடைந்தது. அதன் கம்பிகள் தலையைக் குத்திக் கிழித்ததில் படுகாயமடைந்த மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்தில் அவரது உடலின் வேறு எந்தப் பகுதியிலும் பலத்த அடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்ககது.
ரவிச்சந்திரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆட்டோ மோதியதை விட, தான் அணிந்திருந்த ஹெல்மட் குத்திக் கிழித்ததில்தான் மகேந்திரன் உயிரிழந்துள்ளார்.
அவர் அணிந்திருந்த ஹெல்மட் தரமற்றது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நன்றிங்க
பாதுகாப்புக்கு அணிந்து கொள்ளும் தலைக் கவசமே எமனாக மாறினால் என்னதான் செய்வது...?
4 comments:
The helemt is stronger than our skull. If helmet breaks during an accident, then it means that the force of impact is very very high. If the person was not wearing a helmet, certainly his head would have scattered.
//ஆனால் ஹெல்மட் அணிந்து சென்றதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.//
This is very misleading and wrong.
If wearing a helemt did not save a person, NOT wearing a helemt would not have saved him in that situation. Please write responsibly.
Your articles like this and news paper articles which have wrong tone will discourage people from wearing helemt.
(I was once saved because of wearing a helemt)
Mani RKM உங்கள் வரவுக்கும் கருத்துக்கு நன்றிகள்.
மகேந்திரனின் நேரம் முடிந்து விட்டது. மரணத்துக்கு தலைக் கவசம் ஒரு காரணம் அவ்வளவுதான்.
Take it easy,
sir
நண்பரே, செய்தியை இப்படிச் சொல்லியிருந்திருக்க வேண்டாம். நீங்கள் அப்படி நினைக்கவில்லையானாலும் ஹெல்மெட் அணிந்ததால் ஒருவர் இறப்பு என்ற தொணியில் பதிவு இருக்கிறது. தரமற்ற ஹெல்மெட் என்று மட்டும் மாற்றினாலே பதிவின் உண்மையான கருத்து வெளிப்படும்.
இருசக்கரவண்டியோட்டிகளுக்கு தலைக்கவசம் கண்டிப்பாகத் தேவையானது. தலைக்கவசச் சட்டத்தைத் தமிழக அரசு விலக்கியது என்னைப் பொருத்த வரையில் அடிமுட்டாள்தனமான செயல்.
நண்பர் ராகவன் உங்கள் வரவுக்கும் அருமையான கருத்துக்கும் நன்றிகள்.
தலைக் கவசம் தரமானதா தரமற்றதா என்பது இரண்டாம் பட்ச விஷயம். ஹெல்மெட் உடைந்து அதன் கம்பிகள் தலையில் குத்திக் கிழித்ததால் மரணமடைந்தார் என்பது செய்தி.
பாதுகாப்புக்காக மூடிக்கொள்ளும் தலைக் கவசமே மரணத்துக்குக் காரணியாகி விட்டது என்பது ஒரு விதிவிலக்கான செய்தி அவ்வளவுதான். ஒரு செய்தி எப்படி இருக்கிறதோ அப்படித்தான் சொல்ல முடியும். விபத்தில் மகேந்திரனுக்கு உடலில் வேறு எந்தப் பகுதியிலும் பலத்த அடிபடவில்லை தலையில் அடிபட்டதாலேயே அவர் மரணமடைந்தார். இதனால் ஹெல்மட் அணிந்தவர்களெல்லாம் விபத்து ஏற்பட்டால் கண்டிப்பாக மரணிப்பார்கள் என்று அர்த்தமில்லை.
தலையோட்டை விட உறுதியானது ஹெல்மெட்.(நன்றி,mani rkm) அது தரமானதாகவே இருந்தாலும் மிகப் பலமாக அடிபடும்போது அதுவும் நிலைகுலையும்.
இதனால்...
தலையைப் பாதுகாக்கும் தலைக் கவசத்துக்கே இந்த கதி ஏன்றால் வெறும் தலை என்னவாகும்? என்று ஹெல்மெட் அணியாதவர்களும் அணியத் தொடங்குவார்கள்.
Post a Comment