ஆட்டோ மோதி, 'ஹெல்மட்' உடைந்து
தலையில் குத்தி வாலிபர் பலி!
புதன்கிழமை, செப்டம்பர் 5, 2007
மார்த்தாண்டம் (கன்னியாகுமரி)
மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மீது ஆட்டோ மோதியதில், அவர் அணிந்திருந்த ஹெல்மட் உடைந்து, அது தலையில் குத்திக் கிழித்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரு சக்கர வாகனங்களில் ஹெல்மட் அணிந்துதான் செல்ல வேண்டும் என தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனால் ஹெல்மட் அணிந்து சென்றதால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள விழுந்தை அம்பலம் என்ற ஊரைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தனது நண்பர் ரவிச்சந்திரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
மகேந்திரன் ஹெல்மட் அணிந்திருந்தார். ரவிச்சந்திரன் ஹெல்மட் போடாமல் பயணித்தார்.
இந்த நிலையில் எதிரே வந்த ஆட்டோ மீது மகேந்திரனின் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
தூக்கி வீசப்பட்ட மகேந்திரனின் ஹெல்மட் உடைந்தது. அதன் கம்பிகள் தலையைக் குத்திக் கிழித்ததில் படுகாயமடைந்த மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்தில் அவரது உடலின் வேறு எந்தப் பகுதியிலும் பலத்த அடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்ககது.
ரவிச்சந்திரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆட்டோ மோதியதை விட, தான் அணிந்திருந்த ஹெல்மட் குத்திக் கிழித்ததில்தான் மகேந்திரன் உயிரிழந்துள்ளார்.
அவர் அணிந்திருந்த ஹெல்மட் தரமற்றது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நன்றிங்க
பாதுகாப்புக்கு அணிந்து கொள்ளும் தலைக் கவசமே எமனாக மாறினால் என்னதான் செய்வது...?