Monday, September 10, 2007

பின் லேடனின் புது வீடியோ ரிலீஸ்

பின் லேடனின் புது வீடியோ ரிலீஸ்
அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை


சனிக்கிழமை, செப்டம்பர் 8, 2007

பாக்தாத்:

அமெரிக்கா பெரிய வல்லரசு நாடாக இருக்கலாம். ஆனால் இளம் முஸ்லீம்கள் சிலரை வைத்து அமெரிக்காவை நாங்கள் நிர்மூலமாக்குவோம் என்று அல் கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன் எச்சரித்துள்ளார்.

நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது அல் கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி நாளையுடன் ஐந்து ஆண்டுகள் முடிவடைகின்றன. இதையொட்டி நேற்று பின் லேடனின் பேச்சு அடங்கிய புதிய வீடியோவை அல் கொய்தா அமைப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின் லேடன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதம் கடுமையாக நடந்து கொண்டுள்ள நிலையில் பின் லேடனின் புத்தம் புதிய தோற்றத்துடன் கூடிய இந்த வீடியோவை அல் ஜசீரா டிவி ஒளிபரப்பியுள்ளது.

நீண்ட தாடியுடன் காணப்படும் லேடன் இதில் டிரிம் செய்யப்பட்டு, கருப்பு டை அடிக்கப்பட்ட தாடியுடன் படு பளிச்சென காணப்படுகிறார். அரபு நாட்டு உடையில் இருக்கும் லேடன், சில வயது குறைந்தது போன்ற புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறார்.

அரை மணி நேரம் லேடன் பேசியுள்ளார். அதில் அமெரிக்கா உலகின் மிகப் பெரிய வல்லரசு நாடாக இருக்கலாம்.

உலகின் மிகப் பெரிய ராணுவத்தைக் கொண்டிருக்கலாம். உலகையே தனது ஆளுமைக்குக் கீழ் கொண்டு வரும் வல்லமை பெற்ற நாடாக இருக்கலாம். ஆனால் 19 இளம் முஸ்லீம்களை வைத்து நாங்கள் உங்களை பயமுறுத்தினோம் (இரட்டை கோபுர தாக்குதல்). உலகில் உள்ள இளம் முஸ்லீம்களே, அமெரிக்கா மீதும் பிற மேற்கத்திய நாடுகள் மீதும் தொடர்ந்து கடும் தாக்குதலை தொடருங்கள்.

அமெரிக்கர்கள் தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஜார்ஜ் புஷ் முதல் முறை அதிபர் ஆன பின்னர் அவர் செய்த தவறுகளை நீங்கள் அனுமதித்தீர்கள். தவறு செய்த அவரை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுத்து இன்னும் பெரிய தவறை செய்துள்ளீர்கள்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அவர் செய்த படுகொலைகளுக்கு நீங்கள் முழு ஆதரவு கொடுத்து கொண்டு இருக்கிறீர்கள். இதிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும், உங்கள் உயிரை காத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களேயானால், அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லீம்களாக மாறி விடுங்கள் என்று கூறியுள்ளார் லேடன்.

லேடனின் வீடியோவில் குறிப்பிடத்தக்க எந்த தாக்குதல் மிரட்டலும் இல்லை. இந்த வீடியோ சமீபத்தில்தான் எடுக்கப்பட்டதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.லேடன் பேச்சு அடங்கிய வீடியோ படத்தின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க அதிகாரிகள் ஆராய்ந்து
கொண்டுள்ளனர்.

நன்றிங்க

//இதிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும், உங்கள் உயிரை காத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களேயானால், அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லீம்களாக மாறி விடுங்கள் என்று கூறியுள்ளார் லேடன்.//

செய்தி உண்மையெனில்...பக்தர்கள் மன்னிக்கவும்

வாழ்க பின் மூடன்!

5 comments:

Anonymous said...

திரு முஸ்லீம்,

//வாழ்க பின் மூடன்!//

அவர் தவறி சொன்னதற்காக அவரோட அப்பாவைத்திட்ட வேணாமே.

அப்புறம், அவர் 30 நிமிஷம் பேசி இருக்கிறார். அதில, நீங்க ந்யூஸ் மீடியாவிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளதை மட்டும் மேற்கத்திய ஊடகங்கள் பின்லாடனின் செய்தி-ண்டு சொல்லிகிட்டு வருது. மத்த படி, அவர் எப்பிடி காட்சி அளித்தார் ?, தாடி உண்மையா பொய்யா?, அவர் எங்கு மறைஞ்சி இருக்கார்?-ண்டுதான் கவர் பண்ணுறாங்க

அவருடைய உண்மையான பேச்சில பல பஞ்ச்-லைன்ஸ் இருக்கு. அனைத்தும் மக்களைச் சிந்திக்க வைக்கக் கூடியவை. உண்மையில தான். அவரோட உண்மையான மெஸ்ஸேஜுக்கு நீங்க "extracts from the Bin Laden tape"-ண்டு கூகிளில் தேடி படிச்சுக்குங்க. அமெரிக்காவின் இன ஒழிப்புத் திறமையைப் பத்தி ஒரு பஞ்ச்-லைன் விடுறார்.

முஸ்லிம் said...

A Critic உங்கள் வரவுக்கு நன்றி.

//அவர் தவறி சொன்னதற்காக அவரோட அப்பாவைத்திட்ட வேணாமே.//

பின் மூடன் என்பது அவரின் தந்தையை குறிக்காது. இவர் தவறாக பேசியதற்கு இவரின் தந்தையை மூடர் என்று சொல்வது பெருந்தவறு.

இதை எப்படி விளங்குவது? என்றால்,

அறியாமையின் தந்தை என்று சொன்னால் எப்படி அவரது மகனை குறிப்பிடாதோ அதுபோல் பேச்சு மூடத்தனமாக இருப்பதால் மூடத்தனத்தின் மகன் என்றே கொள்ள வேண்டும்.

மூடத்தனத்தின் தந்தை என்று சொன்னாலும் அவருடைய மகனைத் திட்ட வேண்டாமே என்ற குறைபாடு எழுகிறது. அதனால் தன்மையைக் குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளுங்களேன்

அடுத்து பஞ்ச் டயலாக்...???

G.Ragavan said...

மதத்தைப் பாராமல் லேடன் தவறானவர் என்று சொன்னமை நன்று. அமெரிக்கா உத்தமன் இல்லைதான். அதையும் திட்ட வேண்டியிருக்கு. இதையும் திட்ட வேண்டியிருக்கு.

முஸ்லிம் said...

ராகவன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அமெரிக்கா உத்தமன் இல்லை! ஆனால் அமெரிக்கா மக்களில்...

பிறைநதிபுரத்தான் said...

இதிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும், உங்கள் உயிரை காத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்களேயானால், அமெரிக்கர்கள் அனைவரும் முஸ்லீம்களாக மாறி விடுங்கள் என்று கூறியுள்ளார் - லேடன்

அது சரி, லேடன் எப்பொழுது உண்மையான முஸ்லிமாக போகிறாராம்?