Monday, September 24, 2007

01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.

01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை * துபாய் கணவர் தலைமறைவு

ராமநாதபுரம் : ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய துபாயில் பணியாற்றும் இன்ஜினியரை, ராமநாதபுரம் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்தவர் கரீம் கனி(67). இவரது பேத்தி சுமையா(21), பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்திய கலாசாரத்தில் வாழ விரும்பிய சுமையாவுக்கு, ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்த மொகைதீன் ஹாருனை திருமணம் செய்து வைத்தனர். இவர், துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு கிலோ தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. தேனிலவுக்கு ஹாங்காங் நாட்டிற்கு பெண் வீட்டு செலவில் தம்பதியர் அனுப்பி வைக்கப்பட்டனர். கிரெடிட் கார்டை கையோடு எடுத்து வரவில்லை என்பதற்காக, மனைவியை ஹாங்காங்கில் மொகைதீன்கான் அடித்து துன்புறுத்தினார். மீண்டும் பெரியபட்டினம் வந்தவுடன் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம், நூறு சவரன் நகை, நிலம், வீடு வேண்டும் என்று கேட்டு மொகைதீன் ஹாருன் குடும்பத்தினர் சுமைதாவை கொடுமைப்படுத்தினர்.

விசாரணை நடத்திய ராமநாதபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் வசந்தா, வரதட்சணை கேட்ட மொகைதீன் ஹாருனின் தாயார் முகபத் பீவி(50), தாய்மாமன் மெக்தார் அலி(55) ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான மொகைதீன் ஹாருன், அவரது பெரியப்பா அகநத் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றிங்க

இந்திய கலச்சாரத்தில் மாப்பிள்ளை வேண்டுமென்றால் மாப்பிள்ளை வீட்டாரின் வரதட்சணைக் கொடுமையையும் சகித்தாக வேண்டும்.

என்றைக்கோ வரதட்சணை இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றாக கலந்து விட்டது! :(

6 comments:

மாசிலா said...

//இந்திய கலச்சாரத்தில் மாப்பிள்ளை வேண்டுமென்றால் மாப்பிள்ளை வீட்டாரின் வரதட்சணைக் கொடுமையையும் சகித்தாக வேண்டும்.//
சத்தம் போட்டு சொல்லாதீங்க. தோழியர் தமிழச்சி காதிலே விழுந்தா, அப்றம் உங்க கதை கந்தல்தாம்பா!

;-D

முஸ்லிம் said...

மாசிலா உங்கள் வரவுக்கு நன்றி.

முகவைத்தமிழன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரருக்கு,

இந்த விஷயம் சற்று கூடுதலாக கையாளப்பட்டுள்ளது ஆனால் செய்தியில் கூறப்பட்டுள்ளபடி உண்மை எதுவுமில்லை.

மாப்பிள்ளை, பென் இருவருமு எனக்கு உரவினர்கள் தான். பென்னின் தாய் 15 வருடங்களுக்கு முனு் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து விட்டார். தற்தை ரியாத்தில் விசா வியாபாரம் செய்தவர் பின்னர் ஆஸ்திருலியாவிற்கு இடம் பெயாந்து குழந்தைகளை கூட்டிச் சனெ்று அந்த நாட்டு கலாச்சாரததில் வளர்த்து விட்டார். பென்னின் தந்தை ஒரு ஆலிம் (மார்க்க அறிஞர்) ஆனால் பின்னாலில் பனத்திற்காக அதை துறந்தவர் தனது இரு பென் பிள்ளைகளுக்கும் இஸ்லாத'தை போதிக்காமல் வளாத்ததன் விளைவுதான் இது.

திருமனம் முடிந்தபின்பும் இந்த பென் தனது கணவனின் சொல் கேளாது லை நாட்டு மோகத்தில் திரிந்ததும் மேலை நாட்டு பென்கள் பூல் குட்டை பாவாடை போன்ற உடைகள அனிந்து துபையில் கணவனை கலஙங்கப்படுத்தியதும் புர்கா அணிய மறுத்ததும் தான் இந்த பிரச்சினைக்கு காரணம்.

பிரச்சினையில் பணம் விளயைாடி உள்ளது. காசு கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.

மாப்பிள்ளை பையன் சமீபத்தில் நடந்த பல சமுதாயம் சம்பந்தப்பட்ட நிகழச்சிகளில் மும்முரமாக பணியாற்றீயவர். இங்கு வரதட்சினை பிரச்சினை என்பது பொய்.

பென்னின் மேலை நாட்டு மோகமும் பென்வீட்டாரின் பணத்திமிரும்தான் இந்த பிரச்சினயைின் மூல காரணம்.

மார்க்கம் அறிந்த ஆலிம் ஒருவர் தான் கற்ற மார்க்கத்தை துறந்து உலக ஆதாயததிற்காக மேலைநாட்டு காலாச்சாரத்தில் தானும் மூழ்கி தனது குழந்தைகளையுமு் முழ்க வைத்ததன் விளைவு மேலை நாட்டு கலாச்சாரப்படி இரன்டு குழந்தைகளும் அமெரகி்க பென்களைப்பூல் கட்டிய சிறது காலத்தில் விவாகரத்து செய்துள்ளனர். இது நமது சமுதாயத்திற்கு ஒரு படிப்பினை.

குழந்தைகளை மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு அடிமையாக்காமல் மார்க்கத்தை கற்றுக் கொடுத்து மார்க்க முறைப்படி ஆடை அனியவும் வாழ்க்கை வாழவும் கற்றுக் கொடுத்தால் இந்தநிலை வராது.

முஸ்லிம் said...

முகவைத்தமிழன் உங்கள் வரவுக்கும் தகவலுக்கும் நன்றி.

Anonymous said...

திரு முகவைத்தமிழன்

ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணைக் கொடுமை என்ற பெயரில் வெளியான வலைபூவுக்கு நீங்க அளித்த பதிலை படித்தேன்

நாடு முழுதும் பொய் டவுரி வழக்குகள் மலிந்து வருகின்றன. இது ஒரு கேன்ஸர் போல இந்திய குடும்பகளை அழித்து வருகிறது

சாதாரண கணவன் மனைவி பிணக்கை பெரிசு படுத்தி, அதை டவுரி என்று சொல்லி (டவுரி என்று சொல்லிவிட்டால் பெண் மீது பச்சாத்தாவமும் , போலீஸ் ஆதரவும் கிடைக்குது என்று) டவுரி என்று சொல்லி, பொய் கேஸ் போடும் பழக்கமும் அதை வைத்து பையனின் தாய் தந்தையரை அரெஸ்டு செய்வது விஷம் போல அதிகரித்து வருகிறது

இதை எதிர்த்து சில ஆண்டுகளாய் saveindian family என்ற எங்கள் அமைப்பு போராடி வருகிறது

இந்த வழக்கு மட்டுமல்ல இது போன்ற ஆயிரக்கணக்கான ஆண்களின் கண்ணீர் கதைகளை http://498a.blogspot.com/ சுட்டியிலும், என்னுடைய வலைப்பூ http://manithan.blogspot.com/
விலும் காணலாம்

இந்த அனியாயம் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை பெரிதும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது... (மனைவியை பிரிந்து வரும் போது ஏற்படும் சிக்கலக்ளை டவுரி என்று புனைந்து புகார் கொடுப்பதால்...)

இதை எதிர்த்து போரிடுவதாலாது வேரு வழியில்லை

அன்புடன்
விநாயக்

முஸ்லிம் said...

விநாயக் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.