Saturday, September 29, 2007

2.கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்.

'கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்' அமைச்சர் பேச்சால் சலசலப்பு!

சனிக்கிழமை, செப்டம்பர் 29, 2007

கரூர்:

கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட வணிக வரித்துறை அமைச்சர் எஸ்.எம்.உபையதுல்லா, கட்சி தான் முக்கியம். எம்.எல்.ஏ, அமைச்சர் பதவி எல்லாம் பிறகுதான் என்று பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

கருரில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், வணிகவரித் துறை அமைச்சர் உபயதுல்லா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்தார். இதுகுறித்து தனது பேச்சின்போது கூறுகையில், என்னைப் பொறுத்தவரை இயக்கப் பொறுப்பு, கட்சிப் பணிதான் முதலில் முக்கியம்.

எம்.எல்.ஏ., அமைச்சர் பதவி எல்லாம் அதற்குப் பிறகுதான். நான் நகர செயலாளராக இருப்பதால் எங்கள் பகுதிக்கு வந்த அமைச்சர் முக ஸ்டாலினை வழி அனுப்பி வைத்துவிட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இதுதான் நான் நிகழ்ச்சிக்கு தாமதமாக வரக் காரணம் என்றார்.

ஏழைகளுக்கு இலவச நிலப் பட்டா வழங்கும் விழாவுக்கு தாமதமாக வந்ததற்கு அமைச்சர் உபையதுல்லா கூறிய இந்தக் காரணம், கூடியிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

நன்றிங்க

பொறுப்பில்லாத அமைச்சர்,
ஏழைகளுக்கு இலவச நிலப் பட்டா வழங்கும் விழாவை தாமதப்படுத்தியது இல்லாமல் எனக்கு ஏழைகளை விட கட்சிக்கு மணியாட்டுவதுதான் ரொம்ப முக்கியம்னு தெனாவட்டான பேச்சு வேறயா..?

எல்லாம் அவரை தேர்ந்தெடுத்த மக்களைச் சொல்லனும்..!

No comments: