32 வயதாகும் கீதாஞ்சலி நக்பால் ஒரு காலத்தில் முன்னணி விளம்பர நடிகை (Model) என்று பெயர் பெற்றவர். பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னின் தோற்றத்தையொத்த கீதாஞ்சலி, குடும்பத்தினரால் கை விடப்பட்டவர்.
வாரப்படாத தலை, அழுக்கான ஆடைகளுடன் தெற்கு தில்லியின் சந்தை;அங்காடிப்பகுதிகளில் ஒரு பிச்சைக்காரியாகத் திரிந்த அவரை கண்ட ஒரு ஒளிப்படச்செய்தியாளர் தில்லி பெண்டிர் ஆணையத்திடம் ஒப்படைத்துச்சென்றார்.
மனநிலை குழம்பியிருந்த அவரை VIMHANS (வித்யாசாகர் மனநல ஆராய்ச்சி நிறுவனம்) வசம் சேர்ப்பித்து சிகிச்சையளித்து வருகின்றனராம். முன்னதாக, இது தொடர்பாக, மாநகர குற்றவியல் நடுவர் மன்றத்திடம் ஒரு வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாம்.
நன்றிங்க
என்னதான் முண்ணனி நடிகையென்றாலும் அவருக்குள்ளும் ஒரு மனம் உண்டு. அந்த மனம் நலமில்லாமலும் போகலாம் என்பதற்கு நடிகை கீதாஞ்சலி ஓர் ஊதாரணம்.
நடிகையில்லாத எத்தனையோ பெண்கள் வாரப்படாத பரட்டை தலையுடனும், அழுக்கான ஆடைகளுடனும் பிச்சை எடுக்கவில்லையா என்ன...? அவர்களின் முந்திய சரித்திரம் நாம் அறியாததால் அவர்களின் மீது பாதிப்பான அனுதாபம் ஏற்படுவதில்லை!
ஆனால்..
நம் கண் முன்னே பிரபலமாக இருந்த ஒருவர், நம் கண்ணெதிரே அவல நிலைக்கு தள்ளப்பட்டதை பார்க்கும்போது நெஞ்சில் பரிதாபம் மேலோங்கத்தானே செய்கிறது!
15 comments:
இதே போன்ற ஒரு செய்தி இங்கிருக்கிறது, பாருங்கள்:http://neetheinkural.blogspot.com/2007/06/blog-post.html
மல்லிகை மணம் உங்கள் வரவுக்கு தசவலுக்கும் நன்றி.
இதே செய்தியை இங்கேயும் பதிவு செய்திருக்கிறார்கள் பாருங்கள்:
http://www.chittarkottai.com/general/nisha.htm
சுஷ்மிதா சென்னோடு இவரும் மாடலாக பணி புரிந்திருக்கிறார்.
மனநலமில்லாமல் போனதற்கு காரணம் போதைப் பழக்கமாம்.
நேற்றைய 'ஹெட்லைன்ஸ்'ல் காட்டினார்கள்.
மாடலாக இருப்பதால் நிறைய பார்ட்டிகளும்/போதைகளும் சாதாரணமாகி விடுகிறதாம். உலகத்தில் நிறைய மாடல் அழகிகள் இந்த மாதிரி அவதிப்பட்டவர்கள் என்று அவர்களின் படத்தோடு காட்டினார்கள். அமெரிக்காவின் பிரபலமான முதல் பெண் ஹெச் ஐ வி/எய்ட்ஸ் கேஸ் இது போன்ற மாடல்தானாம்.
சுல்தான் உங்கள் வரவுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.
எடுப்பெடுத்து, கட்டுப்பாடு இல்லாமல் அலைந்தால் இறுதியில் குடும்பத்தினரும் கைவிட்டுவிடுவார்கள் என்பதற்கு விளம்பர நடிகை கீதாஞ்சலி ஓர் எடுத்துக்காட்டு!
பிறைநதிபுரத்தான் has left a new comment on your post "4.பிச்சைக்காரியான விளம்பர நடிகை!":
இதிலிருந்து பெறும் படிப்பினை என்னவென்றால்..இது போன்றவர்களை 'மாடலாக' அதாவது முன்மாதிரியாக கொண்டு அவர்கள் செய்யும் அத்தனையும் செய்தால்..அதோ கதிதான்..
பதிவுக்கு சம்பந்தமில்லாத செய்தி ஒன்று:
பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கு நன்றி.
இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத தகவலை இதில் சேர்க்க நான் விரும்பவில்லை. அது பற்றிய உங்கள் கருத்துக்களையும், என் பதிலையும் தனிப்பதிவில் எழுதுகிறேன்.
பிச்சை எடுக்கும் நிலையில் மாடல் அழகி!
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 4, 2007
டெல்லி:
ஒரு காலத்தில் முன்னணி மாடல் அழகியாக கேட் வாக் செய்து கொண்டிருந்த பெண், போதைப் பொருளுக்கு அடிமையானதால் குடும்பத்தாரால் கைவிடப்பட்டு டெல்லி தெருக்களில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அந்த பரிதாபத்துக்குரிய அழகியின் பெயர் கீதாஞ்சலி நாக்பால். மாடல் அழகியான அவருக்கு தற்போது வயது 32. இப்போதைய அவரது நிலை மிகவும் அவலமானது.
ஆனால் முன்னொரு காலத்தில் அவர் டெல்லியின் முன்னணி மாடல்களில் ஒருவர். சுஷ்மிதா சென்னும், இவரும் சம காலத்தில் மாடலிங்குக்கு வந்தவர்கள். சுஷ்மிதா சென்னும், இவரும் சேர்ந்து பல மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால் கீதாஞ்சலியின் இன்றைய நிலை என்ன? தெற்கு டெல்லியின் தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் கீதாஞ்சலி. பிச்சை எடுத்து கிடைப்பதை சாப்பிடுகிறார். தெருவோரக் கடைவாசல்களில் இரவு நேரங்களில் தூங்கி எழுகிறார்.
ஏன் இந்த அவலம்? மாடலிங்கில் கொடி கட்டிப் பறந்தபோது, போதைப் பழக்கத்திற்கு அடிமையானார் கீதாஞ்சலி. இதனால் தேவையில்லாத பல பழக்கங்கள் வந்து சேர்ந்தன. இதையடுத்து குடும்பத்தினர் கீதாஞ்சலியை புறக்கணித்து விட்டனர்.
குடும்பத்தார் கைவிட்டதாலும், மாடலிங் வாய்ப்புகள் அடியோடு நின்று போனதாலும், நண்பர்கள் யாரும் கை கொடுக்க முன்வராத காரணத்தாலும் அனாதையாக மாறினார் கீதாஞ்சலி.
இதனால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அழுக்கு உடையுடன், சிக்குப் பிடித்த தலையுடன், அலங்கோலமான முகத்துடன் காணப்பட்ட கீதாஞ்சலியைப் பார்த்த ஒரு புகைப்பட செய்தியாளர், அவரது நிலையைக் கண்டு மனம் இரங்கி, டெல்லி மகளிர் ஆணையத்திற்குத் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து விரைந்து வந்த மகளிர் ஆணையத்தினர் கீதாஞ்சலியை மீட்டு விமான்ஸ் மன நல மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மன நல ஆலோசனை மற்றும் சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
அதற்கு முன்பாக கீதாஞ்சலியை ஹாஸ் காஸ் காவல் நிலையத்திற்கு மகளிர் ஆணையத்தினர் கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது காரிலிருந்து இறங்க மறுத்தார் கீதாஞ்சலி. அவரை டாக்டர்கள் சமாதானப்படுத்தி மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்றனர்.
கீதாஞ்சலிக்கு மனச் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு சில காலம் சிகிச்சை அளித்தால் அவர் நலமடைந்து விடுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.
கீதாஞ்சலியின் நிலை குறித்து அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தங்களது மகளைப் பார்க்க விருப்பவில்லை என்று கூறி விட்டார்களாம். போதைப் பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டால்தான் அவளை நாங்கள் பார்ப்போம் என்று கூறி விட்டனராம்.
கீதாஞ்சலியின் இன்றைய நிலை நாடு முழுவதும் உள்ள மாடல் அழகிகள், பேஷன் டிசைனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நன்றிங்க
விளம்பர அழகி கீதாஞ்சலியின் இன்றைய அவல நிலை, மற்ற விளம்பர அழகிகளுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்.
/இதிலிருந்து பெறும் படிப்பினை என்னவென்றால்..இது போன்றவர்களை 'மாடலாக' அதாவது முன்மாதிரியாக கொண்டு அவர்கள் செய்யும் அத்தனையும் செய்தால்..அதோ கதிதான்../
பிறைநதிபுரத்தான்,
அப்படியானால், ஆப்கானிஸ்தானிலே முஜாஹிதீன், தலிபான் வரமுன்னர் வைத்தியர்கள், பொறியியலாளர், சட்டத்தரணிகளாக முன்மாதிரியாக இருந்த பெண்கள் இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்ததற்கு யார்/என்ன காரணம்?
பெயரிலி உங்கள் வரவுக்கு நன்றி.
//பிறைநதிபுரத்தான்,
அப்படியானால், ஆப்கானிஸ்தானிலே முஜாஹிதீன், தலிபான் வரமுன்னர் வைத்தியர்கள், பொறியியலாளர், சட்டத்தரணிகளாக முன்மாதிரியாக இருந்த பெண்கள் இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்ததற்கு யார்/என்ன காரணம்?//
பிறைநதிபுரத்தான் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும்போது சொல்லட்டும்.
பின்னூட்டமிட வேண்டுமென்பதற்காக எது வேண்டுமானலும் எழுதிடக்கூடாது.
ஒருவர் தனக்குத்தானே செய்வினை செய்து கொள்வதற்கும்,
ஒருவர் மற்றவருக்கு செய்வினை செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
முந்தியது விளம்பர அழகி தனக்குத்தானே கேடு விளைவித்து கொண்டது.
பிந்தியது மற்றவர்களால் கேடு விளைவிக்கப்பட்டது. இந்த இரண்டையும் போட்டு குழப்ப வேண்டாம்.
பெயரிலிக்கு உங்கள் பதில் அருமை, ஆனால் உங்கள் வரி, "பின்னூட்டமிட வேண்டுமென்பதற்காக எது வேண்டுமானலும் எழுதிடக்கூடாது. " என்பது கொஞ்சம் ஓவர். பின்னூட்டம் போடனும்-கிறதுக்காக யாரும் பின்னூட்டமிடுவதில்லை.
பெயரிலி சொல்ல விரும்பினது, பிறைநதி புறத்தான் கடவுளோட தண்டனைநு சொல்ல வர்ரார்னு நினைச்சிட்டார். ஏன்னா, நீங்க வலைப்பதிய வரதுக்கு முன்னாடி, சில ஞானிங்க சுனாமியை அல்லாஹ்-வுடைய தண்டனைனு சொன்னிச்சுங்க. அந்த கோணத்துல அவர் பிறைநதியோட ஸ்டேட்மென்டை எடுத்துக்கிட்டார்னு எனக்குத் தோனுது.
ஓகே, கோ அஹெட்
/பின்னூட்டமிட வேண்டுமென்பதற்காக எது வேண்டுமானலும் எழுதிடக்கூடாது./
அடடா! அப்படியா நடந்தது? ;-)
/முந்தியது விளம்பர அழகி தனக்குத்தானே கேடு விளைவித்து கொண்டது/
விளம்பர அழகிகளிலே எத்தனை வீதமானோர் இப்படியாக நிற்கின்றார்கள் என்று சொல்வீர்களா? ஸுஸ்மிதா ஸென்னோடு அறிமுகமானவர் என்று எல்லாச்செய்திகளிலுமே சொல்லப்படுகிறதே? ஸென்னும் பிச்சையெடுத்துக்கொண்டா நிற்கிறார்?
பிறகு,
/இதிலிருந்து பெறும் படிப்பினை என்னவென்றால்..இது போன்றவர்களை 'மாடலாக' அதாவது முன்மாதிரியாக கொண்டு அவர்கள் செய்யும் அத்தனையும் செய்தால்..அதோ கதிதான்../ என்பதிலே என்ன அர்த்தம்? மெய்யாகவே குழம்பித்தானிருக்கிறேன். பிநபு பின்னூட்டத்தை வாசித்து.
எத்தைத் தின்றால், இப்பித்தம் தெளியும்? :-(
A Critic உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்.
//இதிலிருந்து பெறும் படிப்பினை என்னவென்றால்..இது போன்றவர்களை 'மாடலாக' அதாவது முன்மாதிரியாக கொண்டு அவர்கள் செய்யும் அத்தனையும் செய்தால்..அதோ கதிதான்..//
பிறைநதிபுரத்தான் இதிலே கடவுளின் தண்டனை என்று சொல்ல வந்தார்னு நீங்க சொல்றது உங்களுக்கே ஜாஸ்தியா தெரியலியாங்க...?
Critic அண்ணாச்சி
/பெயரிலி சொல்ல விரும்பினது, பிறைநதி புறத்தான் கடவுளோட தண்டனைநு சொல்ல வர்ரார்னு நினைச்சிட்டார்./
என்ரை சைக்கிள் பெடலை நானே மிதிச்சுக்கொள்கிறேனே? எதுக்கு நீங்க ரிமோட் கொன்ரோல் போடப்பாக்கிறியள்?
நான் கடவுளைப் பற்றியோ தண்டனை பற்றியோ எதுவும் சொல்லவில்லை (இவ்விளக்கமும் விளங்கிக்கொண்டே ஹாண்டிலைத் திருப்பின உங்களுக்கில்லை; உங்களின் பதிலிலேயிருக்கும் உட்குத்தை விளங்காத பேர்வழிகளுக்குத்தான் :-))
நான் சொன்னது ஒரே காரணமே; மொடலிங் என்பது ஏதோ கெட்ட சங்கதிபோலவும் அதன் விளைவுக்கு இது பாடம் என்பது போலவும் பிநபு, "இதிலிருந்து பெறும் படிப்பினை என்னவென்றால்..இது போன்றவர்களை 'மாடலாக' அதாவது முன்மாதிரியாக கொண்டு அவர்கள் செய்யும் அத்தனையும் செய்தால்..அதோ கதிதான்.."
என்பதை எழுதியதாகத் தோன்றியது. மாடலிங் செய்பவர்களை மாடல்களாக வைத்துக் கொள்கின்றவர்கள் இப்படியான நிலையை அடைபவர்கள் எத்தனை பேர்? முஜாஷிதீன், தலிபான் போன்றோர் ரோல்மாடலாக ஆனதால், தள்ளப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? அப்படியாகப் பார்த்தால், மதங்களைப் பின்பற்றுகின்ற தலிபான்களை மாடல்களாக வைத்துக்கொள்ளும் எல்லோரும் பெண்களை இழிவுநிலைக்கா தள்ளியிருக்கின்றார்கள். இந்த மதமாடல்களை வேண்டுமானால், சங்கராச்சாரி, பிரேமானந்தா, ஜிம் ஜோன்ஸ் வரைக்கும் தாராளமாக நீட்டிக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான் நான் சொல்லவந்தது. என் சைக்கிளை நானே கொண்டு போகிறேன். வாடகைவண்டி வேண்டாம். சொந்த சைக்கிளிலேயோ பிளேனிலேயோகூடத் தாராளமாக ஊர்ந்தோ பறந்தோ கொள்ளுங்கள்
பிறைநதிபுரத்தான்,
அப்படியானால், ஆப்கானிஸ்தானிலே முஜாஹிதீன், தலிபான் வரமுன்னர் வைத்தியர்கள், பொறியியலாளர், சட்டத்தரணிகளாக முன்மாதிரியாக இருந்த பெண்கள் இப்போது பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்ததற்கு யார்/என்ன காரணம்?-பெயரிலி
நன்றி பெயரிலி,
நான் சுட்டிக்காட்டியது கீதாஞ்சலியின் போதைப்பழக்கததைதானே தவிர அவர் செய்து வந்த 'மாடலிங்' தொழிலை அல்ல.
கீதாஞ்சலி செய்த 'மாடலிங்' தொழிலை செய்யலாம் ஆனால் அவர்செய்த 'அத்தனையும்' (போதைப்பழக்கம் உட்பட) செய்தால்தான் இந்த கதி ஏற்படும் என்றுதான் கூறினேன்.
வாதத்திறனை காட்ட வேண்டுமென்றே நான் எழுதியதை தவறாக புரிந்துக்கொண்டீர்களா-அல்லது தவறுதலாக தவறாக புரிந்துகொண்டிர்களா?.
மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்
'வாத'ப்பித்தம் தானாக குறையும்
நன்றி, பிறைநதிபுரத்தான் உங்கள் மெளனம் கலைந்ததற்கு.
என்னையும் சேர்த்தே, யானைத் தொட்டு பார்த்து புரிந்து கொண்ட குருடர்களை போல இருந்தது உங்கள் மறுமொழியைப் படித்து விமர்சித்தது.
Post a Comment