01. வங்கி ஏஜென்ட்கள் சித்ரவதை : கடன் வாங்கியவர் தற்கொலை
மும்பை : மும்பையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஊழியர்களின் சித்ரவதையை தாங்க முடியாததால், வங்கியிலிருந்து கடன் வாங்கிய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
மும்பை, எம்.ஐ.டி.சி.,பகுதிக்கு உட்பட்ட மால்பா டோங்கிரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் சர்வாங்கர்(38). இவர் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியிலிருந்து கடந்த ஜனவரி மாதம் தனி நபர் கடன் வாங்கியிருந்தார். கடன் வாங்கிய ரூ.50 ஆயிரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர் திருப்பி செலுத்திவிட்டார். மீதமுள்ள தொகை திருப்பிச் செலுத்தப்படவில்லை.
கடந்த 13ம் தேதி, கடன் மீட்பு ஏஜென்ட்கள் பிரகாஷ் சர்வாங்கர் வீட்டுக்கு வந்து, "பணத்தை திருப்பி செலுத்தா விட்டால் கடும் விளைவுகள்' ஏற்படும் என எச்சரித்தனர். மன வேதனையடைந்த பிரகாஷ் சர்வாங்கர், திங்கள் கிழமை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக வங்கியின் கடன் மீட்பு ஏஜென்ட்களான நிஷாந்த் உத்தம்ராவ் நக்ராலே, ஹிரேன் வைத்யா, கைலாஷ் சவுத்ரி, துஷார் பட்னாகர் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.போலீஸ் துணை கமிஷனர் கே.எம்.பிரசன்னா கூறுகையில், "ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கியின் கடன் மீட்பு ஏஜென்ட்களின் தொடர் சித்ரவதையை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக பிரகாஷ் சர்வாங்கர் சாவதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார்' என்று கூறினர்.
ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கியின் செய்தி தொடர்புத் துறை தலைவர் சாருதத்தா தேஷ்பாண்டே கூறுகையில், "பிரகாஷ் சர்வாங்கர் வங்கியிலிருந்து கடன் வாங்கிய தொகையில் ஐந்து தவணைகளை தொடர்ந்து செலுத்தவில்லை. அதற்காக வாடிக்கையாளர்களை ஏஜென்ட்கள் துன்புறுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.
நன்றிங்க
பொதுவானவை.
No comments:
Post a Comment