Friday, September 07, 2007

ஆந்திராவில் கண்ணிவெடி தாக்குதல்.

ஆந்திராவில் கண்ணிவெடி தாக்குதலில்: 3 பேர் பலி, உயிர் தப்பினார் முன்னாள் முதல்வர்

ஐதராபாத் : ஆந்திராவில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் முன்னாள் முதல்வர் உயிர் தப்பினார். ஆந்திராவில் நெல்லூர் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜனார்தன் ரெட்டி தனது மனைவி ராஜ்யலட்சுமியுடன் காரில் திருப்பதி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது நடத்தப்பட்ட கண்ணி வெடி தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். அவருடன் 4 கார்கள் சென்றன. இதில் ஒரு கார் கண்ணி வெடியில் சிக்கியது. இதில் 3 பேர் பலியானார்கள். இந்த செயல் நக்சல் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றிங்க, dinamalar 07/09/07

இந்த சம்பவத்துக்கு ஏதாவது இயக்கத்தை சார்ந்தவர்கள் பொறுப்பேற்பார்கள் என உளவுத்துறையின் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்.

1 comment:

அட்றா சக்கை said...

//இதில் 3 பேர் பலியானார்கள். இந்த செயல் நக்சல் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.//

1) தவறான தகவல்!!! அல்பஸ்கர் ஏ பய்பா என்ற புதிய இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பே இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் லொள்துறை அமைச்சர் பத்வானி தெரிவித்தார்.

2) ஏண்டா வெங்கய்யா! இதுக்காக ஆந்திராவில் வீடுவீடாகச் சோதனையிடச் சொல்வியா?

3) சற்றுமுன்: ஏற்கனவே பல பொறுப்புகள் இருப்பதால் நக்சல் தீவிரவாதிகள் இதற்கு தற்போதைக்கு பொறுப்பு ஏற்க முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள். அதனால் வேறு ஏதாவது இஸ்லாமிய தீவிரவாதிகள் பொறுப்பேற்பார்கள் என்று மத்திய அரசு நம்பிக் காத்திருக்கிறது.