Saturday, September 22, 2007

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு!

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு-விஎச்பி

சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007

அயோத்தி:

முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என பாஜக முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.

அயோத்தியில் அவர் பேசுகையில்,

ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.

இவர் வேதாந்தி விஎச்பியின் மார்க்தர்ஷக் மண்டல் தலைவராக உள்ளார். 2 முறை பாஜக எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

தஸ்லீமாவின் தலைக்கு விலை வைத்த ஹைதராபாத் இமாமுக்கும், இந்து பரிஷாத் தலைவர் ராமவிலாஸ் வேதாந்திக்கும் வித்தியாசம் எதுவுமில்லை!

மத உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானது.

தஸ்லீமா விஷயத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள், இப்போது கூரைக்கும் பூமிக்குமாவது குதிப்பாங்களா?

ஏனென்றால். அது பயங்கர வாதம் என்றால் இதுவும் பயங்கர வாதம்தானே! கருத்துச் சுதந்திரம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதானே! என்ன நாஞ்சொல்றது? :)

8 comments:

M Poovannan said...

செருப்பால அடிக்கிற போல ஒரு கேள்வி. இதற்கு பின்னூட்டம் அதிகம் வராது

முஸ்லிம் said...

M Poovannan உங்கள் வரவுக்கு நன்றி.

அன்பு said...

//தஸ்லீமாவின் தலைக்கு விலை வைத்த ஹைதராபாத் இமாமுக்கும், இந்து பரிஷாத் தலைவர் ராமவிலாஸ் வேதாந்திக்கும் வித்தியாசம் எதுவுமில்லை! //

இதெல்லாம் அந்த மடச் சாம்பிராணிகளுக்கு புரியாது

முஸ்லிம் said...

தமிழ் மார்க்ஸ் உங்கள் வரவுக்கு நன்றி.

அபூ ஸாலிஹா said...

இஸ்லாத்திற்கெதிரான சிந்தனையைத் தூவி முழு மனித சமுதாயத்தை சீரழிக்கும் "எவரின் விந்தைத் தான் சுமக்க வேண்டும் என்ற சுதந்திரம் பெண்களுக்கு வேண்டும்!" போன்ற கருத்துக்களை நாக்கூசாமல் வெளிப்படையாகப் பேசிய ஒரு விபச்சாரிக்கெதிராக, முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்கியபோது இது "தீவிரவாதம்" என்று உலகமே ஒன்று திரண்டு அரற்றியது. தமிழ்ப் பதிவுலகமோ அல்லோலகல்லோலப் பட்டுப்போனது.

இன்று ஹிந்துத்துவாவிற்கு எதிராக (கவனிக்க: ஹிந்துக்களுக்கு அல்ல) யாரும் பேசிவிட்டால், நாட்டின் மிகப்பெரிய பொறுப்பு வகிக்கும் அரசியல் தலைவர் கூட, தன்னிலை இழந்து வன்முறையைத் தூண்டி நாட்டைத் துண்டாட முயல்வதைக் கண்டு "கருத்துச்சுதந்திரம்" என்று கூறிவிட்டு மறந்துவிடுவோம் வாருங்கள்.

இத்தனை வெறியாட்டத்திற்குப் பிறகும் ஆளும்கட்சியினரும் தமிழர்களும் அமைதியுடன் இருப்பது பாராட்டத்தக்கது.

அட்றா சக்கை said...

காலணா பெறாத பத்துவா இருவதுவா ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி எதாவது உளறினா, வக்கிரம்பிடித்த, கால்மாறிய, நாசம் விளைவிக்கும், குண்டாக நீலமாக இருக்கும் விலங்குகள் ஊளையிடும். இப்போது எங்கேயோ போய்விட்டன.

என்னத்த சொல்றது செலக்டிவ் அம்னீசியா தான்.

முஸ்லிம் said...

அபூ ஸாலிஹா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

முஸ்லிம் said...

அட்றசக்கை உங்கள் வரவுக்கு நன்றி.