Wednesday, September 26, 2007

04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறல்!

04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறும் கிராமம் பாப்பாபட்டியில் தான் இந்த அவலம்



உசிலம்பட்டி :உள்ளாட்சி தேர்தலால் கடந்த சில ஆண்டுகளாக கலகலத்துப் போன பாப்பாபட்டி கிராம மக்களை, இப்போது ஒரு எண் பாடாய் படுத்துகிறது. ஒன்பது என்ற எண்ணைக் கண்டாலே அலறி அடிக்கின்றனர் கிராமவாசிகள்.

ஒன்பதாம் நம்பர் என்றால் பலருக்கு உற்சாகம். வீட்டு எண் உட்பட அன்றாட உபயோக எண்ணின் கூட்டுத்தொகையாவது ஒன்பது வந்துவிட வேண்டும் என வேண்டி விரும்புபவர்கள் உண்டு.உசிலம்பட்டியிலிருந்து பாப்பாபட்டிக்கு டவுன் பஸ் இயக்கிய போது அதன் தடம் நம்பர் "9' என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாப்பாபட்டி கிராமவாசிகளின் வெளியூர் உறவினர்கள் இந்த எண்ணை வைத்து, கிராமத்திலுள்ள அனைவரையும் அரவாணியாக குறிப்பிட்டு கிண்டல் செய்தனர். அவதிப்பட்ட கிராமத்தினர் போராடி, இந்த எண் வழித்தட பஸ்சை பேரையூருக்கு திருப்பி விட்டனர்.அந்த பிரச்னை முடிந்தாலும், கிராமவாசிகளுக்கு புதிய எண் தலைவலி ஏற்பட்டது.

உசிலம்பட்டி வத்தலக்குண்டு ரோட்டிலிருந்து பாப்பாபட்டி செல்லும் ரோடு பிரியும் இடத்தில், "பாப்பாபட்டி ஒன்பது கிலோ மீட்டர்' என நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை வைத்தது. ஓட ஓட விரட்டி வந்து ஒட்டிக் கொள்ளும் இந்த எண்ணை மாற்ற, கிராம மக்கள் கடும் பிரயாசம் எடுத்துக் கொண்டனர். கிராம இளைஞர்கள் ஒன்பது என்ற எண்ணை அறிவிப்பு பலகையில் அழித்து விட்டு 10 கி.மீ., என குறித்து வைத்துள்ளனர். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் படுத்திய பாட்டால் மனம் வெதும்பி புண்ணாகி போயிருந்த கிராம மக்கள், துரத்தும் நம்பர் ஒன்பதை தவிர்க்க பாடாய் படுகின்றனர்.

நன்றிங்க

அப்ப ஒன்பதாம் தேதியில் குழந்தை பிறக்காதா?

ஒன்பதாம் தேதியில் திருமணம் நடத்தமாட்டார்களா என்ன?

2 comments:

மரைக்காயர் said...

அடப்பாவமே.. அவிங்ய வீட்டு புள்ளைங்களோட பாட பொஸ்தவத்துல எட்டுக்கு அடுத்தது என்னா நம்பரு?

முஸ்லிம் said...

மரைக்காயர் உங்கள் வரவுக்கு நன்றி.

புஸ்தகத்தில எட்டுக்கு அடுத்து பத்துன்னு வாசிக்க வேண்டியதுதான்.