Wednesday, August 08, 2007

மக்களைப் பெற்ற மகராசி!




ரோஜர்ஸ்: அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜிம் பாப் (42) - மிசெல்லி (41) தம்பதி சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. அது என்ன என்கிறீர்களா?

இவர்களுக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது. அதைத்தான் மடியில் வைத்துள்ளார் மிசெல்லி. படத்தில் வலமிருந்து மூன்றாவதாக இருப்பவர்தான் இந்த சாதனைக்கு காரணகர்த்தா ஜிம் பாப். மீதி நிற்கும் 16 குழந்தைகளும் இவர்கள் பெற்ற செல்வங்கள்தான்.

இவர்கள் அனைவருக்குமே 'ஜே' என்ற எழுத்தில்தான் பெயர் ஆரம்பமாகிறது. மூத்த குழந்தைக்கு 19 வயதாகிறது. அதில் இருந்து எல்லா வயதிலும் இவர்களுக்கு குழந்தை இருக்கிறது. 17 குழந்தைகளில் 7 பேர் பெண்கள்.

இந்த ஜோடிக்கு கல்யாணமாகி 24 ஆண்டுகள் ஆகிறதாம். முதல் 4 ஆண்டுகளுக்கு குழந்தையே கிடையாது. அதன் பிறகு ஆரம்பித்தது சாகசம்... இப்போது 17 குழந்தைகளை பெற்று விட்டார்கள். மிசெல்லி தன் வாழ்நாளில் 126 மாதங்களை (பத்தரை வருடம்) கர்ப்பிணியாகவே கழித்திருக்கிறார்.

ஜிம் பாப், ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பதால்தான் இத்தனை குழந்தைகளையும் சமாளிக்க முடிகிறதாம். 7 ஆயிரம் சதுர அடியில் உள்ள அவர்கள் வீட்டில், 9 பாத்ரூம் உள்ளது.

ஒவ்வொரு குழந்தையையும் கடவுளின் பரிசாக கருதும் இவர்கள், மேலும் குழந்தைகளை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

******************************

மக்களைப் பெற்ற மகராசிக்கும், மகராசனுக்கும் வாழ்த்துக்கள்!

5 comments:

Anonymous said...

//மக்களைப் பெற்ற மகராசிக்கும், மகராசனுக்கும் வாழ்த்துக்கள்!//

இரத்தவெறி கூட்டத்தின் கோமாளி பார்வையில் "பன்றிக்குட்டிகளை பெற்றெடுத்த பன்றிக்கும் பன்றிக்கும் வாழ்த்துக்கள்" எனக் கூறுங்கள்!

இறை நேசன்

முஸ்லிம் said...

இறை நேசன் உங்கள் வரவுக்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இறை நேசன்!
ஒரு நாட்டின் தவறை அந்த மக்கள் எல்லோர் மேலும் திணிப்பது தவறு.
அத்துடன் திருமணமாகிப் பல வருடம் குழந்தையில்லாத இந்தத் தம்பதியினருக்குக் குழந்தையின் அருமை புரியும்.
அதனால் தங்கள் எழுத்தில் பன்றிகள்,பன்றிக்குட்டிகள் என்பது
மிக வேதனை தருகிறது.
இவர்களும் உங்களைப்போல் ஆண்டவனின் குழந்தைகள் எனத் தான் என் மனம் எண்ணி மகிழ்கிறது.
பிரான்சின் 12 குழந்தைகளைப் பெற்றுவிட்டு மேலும் பெற ஆசைப்படும் குடும்பம் ஒன்று உண்டு.

முஸ்லிம் said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) உங்கள் வரவுக்கு நன்றி.

இறை நேசனை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு எழுதியிருக்கிறீர்கள். முஸ்லிம்கள் அதிகமாகப் பிள்ளைகள் பெறுவதை, பன்றி குட்டிகள் போடுவது போல பெற்றெடுக்கிறார்கள் என்று முன்பு ஒருவர் எழுதியிருந்தார். அவருக்குப் பதிலாகவே இறை நேசன் எழுதியிருக்கிறார்.

நீங்கள் முந்திய பதிவுகளைப் பார்க்காததால் உங்களுக்கு இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி 17 மக்களைப் பெற்றவர்களைப் பார்த்து இறை நேசன் பன்றிக் குட்டிகள் என்று சொல்லவில்லை. 5, 6 என்று மக்களைப் பெற்றுக் கொள்ளும் முஸ்லிம்களை பன்றிக் குட்டிகள் போடுவது போல் என்று சொன்னவருக்கு 17 மக்களைப் பெற்ற தம்பதியர் அந்த இந்து வெறியரின் பார்வையில் எப்படித் தோன்றுவார்கள் என்பதே இறை நேசனின் கோணம்.

Anonymous said...

என் பின்னூட்டத்தை தவறாக விளங்கிய சகோதரர் யோகன் பாரிஸ் அவர்களுக்கு என் சார்பாக பதிலளித்த சகோதரர் முஸ்லிம் அவர்களுக்கு மிக்க நன்றி.

சகோதரர் யோகன் பாரிஸ் அவர்களே, என் பின்னூட்டத்தில் "இரத்த வெறி கூட்டத்தின் கோமாளி பார்வையில்" எனத் தெளிவாக தானே குறிப்பிட்டிருந்தேன்.

தேவைக்கு சுட்டியையும் கொடுத்திருந்தேனே.

சகோதரர் யோகன் பாரிஸ் போன்று மற்றவர்களும் என் பின்னூட்டத்தை தவறாக விளங்காமல் இருக்க "பன்றிக்குட்டிகள்" சம்பவத்தை இங்கு எடுத்து வைக்கின்றேன்.

******************************

sreesharan said...

ஏன் இத்தனை வெறி
கண்டிப்பாக நீங்கள் ஒரு முஸ்லீம் தீவிரவாதி தான்
9/27/2006 11:34 AM

இறை நேசன் said...

//கண்டிப்பாக நீங்கள் ஒரு முஸ்லீம் தீவிரவாதி தான்//

மிக்க நன்றி ஸ்ரீசரண் - நீங்கள் யார் என்பதை வெளிக்காட்டியமைக்கு.

அன்புடன்
இறை நேசன்
9/27/2006 1:11 PM

sreesharan said...

இறைநேசன் அவர்களே,

நான் கேட்கின்ற இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
தான் வாழும் நாட்டின் மீது சிறிதும் அக்கறை இன்றி தன் மதத்தை சேர்ந்தவர் மட்டும் உலகெலாம் இருக்க வேண்டும் என்ற நோக்கோடு, இறைவன் கொடுப்பதை மறுக்க கூடாது என்று (பொய்)சித்தாந்தம் பேசி பன்றிகளை போல பெற்று போடும் முஸ்லீம்களிடம்
என்ன பெரிய சமூக உணர்வு இருக்க முடியும்?
9/28/2006 11:33 AM

இறை நேசன் said...

//நான் கேட்கின்ற இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.//

அட தீவிரவாதியிடம் கேள்வி எல்லாம் கேட்கிறீர்கள். சாதாரணமாக "உங்காள்" பார்வையில் முஸ்லிம் தீவிரவாதிகள் கருத்தை கருத்தால் எதிர் கொள்வதில்லையே? ஆனாலும் உங்களுக்கு பயங்கர தைரியம் தான் போங்கள்.

சரி உங்கள் கேள்விக்கு பதிலளிக்க நான் தயார். பதிலளிக்க மட்டுமல்ல அந்த பன்றி தலைப்பில் விவாதிக்கவே தயார்.

பன்றிகள் போல் பெற்று போட்டால் சமூக உணர்வு இல்லை என்று அர்த்தமா?

பன்றிகள் போல் பெற்று போட்டால் நாடு சீரழியுமா?

பன்றிகள் போல் பெற்று போட்டால் யாருக்கு நஷ்டம்?

உலகைப்பிடிக்கத்தான் பன்றிகள் போல் பெற்று போடுகிறார்களா?

நாட்டின் மேல் உள்ள அக்கறையை பெற்றுப்போடுவதில் காட்டவேண்டுமா? அல்லது அந்நியனுக்கு எதிராக போராடுவதில் காட்ட வேண்டுமா?

பிறந்த நாட்டின் மேல் அக்கறையில்லாமல் அந்நியனுக்கு அடிவருடிகளாக இருந்தது பன்றிகள் போல் பெற்று போடுபவர்களா? அல்லது வந்தேறி பார்ப்பன சங்க் கூட்டங்களா?

பிறந்த நாட்டின் மீது அக்கறையில்லாமல் நாட்டுக்காக போராடிய காந்தியை கொன்றது பன்றியை போல் பெற்றுப்போடுபவர்களா? அல்லது தேசவிரோத வந்தேறி பார்ப்பன சங்க்பரிவாரங்களா?

என அனைத்தைக் குறித்தும் விரிவாக விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

மானம், வெட்கம், ரோசம், சூடு, சுரணை இன்றி அவசரப்பட்டு வார்த்தைகளை கக்கிவிட்டு போனால் மட்டும் போதாது. அவை திரும்ப வரும் பொழுது ஆண்மையுடன் நின்று பதில் தரும் தைரியமும் வேண்டும்.

மேலே பாருங்கள். யாருக்கோ போட்ட பதிவிற்கு ஜிங்கி அடித்த ஜெயராமன் அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை தான் திருப்பிக் கேட்டேன்.

ஆளையே காணோம். மானம், ரோசம், சூடு, சொரணை, வெட்கம் யாருக்கு இல்லை என்பது இன்னுமா புரியவில்லை?

இறை நேசன்
9/28/2006 8:11 PM
*********************************

கூடுதல் ஒன்றும் விளக்கம் தேவையில்லை என நினைக்கின்றேன்.

அந்த தலைப்புக்கு யாதொரு தொடர்பும் இல்லாமல் இப்படி தன் மன வக்கிரத்தைக் கொட்டிய இதே "கோமாளி" இந்த பதிவரின் ஒரு பதிவிலும் இதே போன்று தன் மன வக்கிரத்தை கொட்டியிருந்தது. "இஸ்லாமோஃபோபியா" என்ற அந்த பதிவில் போட்டிருக்கும் பின்னூட்டங்களை படித்தால் இந்த ஜென்மம் உண்மையிலேயே சுத்த விவரம் கெட்டது தான் என்பது நன்றாக விளங்கும்.

வந்தேறி பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் இரத்தவெறிக் கூட்டத்திற்கு இது போன்ற கோமாளிகள் தான் உறுப்பினர்களாக கிடைப்பார்கள் போலும்.

குழந்தை பெறுவது பன்றி பிள்ளை பெறுவது போல் எனில், இந்த அரைகிறுக்கும் ஒரு பன்றியின்(அந்த தாய் மன்னிக்கட்டுமாக) வயிற்றிலிருந்து தான் பிறந்தது என்பதை ஏனோ மறந்து விட்டது.

இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு குழந்தைக்கும் இங்கு வாழ உரிமை இருக்கின்றது. அவ்வாறு உருவாகும் குழந்தையை இங்கு மக்கள் தொகை பெருக்கம், எனவே அதிகம் குழந்தைகள் வேண்டாம் எனத் தீர்மானிப்பதற்கு இங்கு எவனுக்கு உரிமை இருக்கின்றது?

இதே நினைப்பை இந்த அரைகிறுக்கு கோமாளிகளின் பெற்றோரும் நினைத்திருந்தால் இவன்களும் இந்த உலகையே பார்த்திருக்க மாட்டார்கள் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளட்டும்.

நாட்டில் வறுமை ஏற்படுவதற்கும், சமூக சீரழிவு ஏற்படுவதற்கும் மக்கள் தொகை பெருக்கம் தான் காரணம் என கேனத்தனமாக உளறுவதை விடுத்து நாட்டை முன்னேற்ற வேறு உபயோகமான வழிமுறைகளை குறித்து சிந்திக்கட்டும்.

கறுப்பு பண முதலைகள் பதுக்கி வைத்திருக்கும் வளங்களை வெளிக்கொண்டு வந்தாலே நாட்டின் பிரச்சனைகளில் 90 சதவீதம் சரியாகும். அதனை விடுத்து குழந்தைகள் அதிகம் பெறுவது தான் காரணம் என இன்னமும் கூறித் திரிவார்கள் எனில் இந்த அரை மூடர்கள் தான் முதலில் இவ்வுலகிலிருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டியவர்களாவர்.

பின்னூட்டம் நீண்டு விட்டதற்கு சகோதரர் முஸ்லிம் அவர்கள் மன்னிக்கவும்.

அன்புடன்
இறை நேசன்.