Sunday, August 19, 2007

பாராளுமன்றத்தில் சச்சார் அறிக்கை!

பாராளுமன்றத்தில் சச்சார் அறிக்கை நடப்பு கூட்டத்தொடரில்!

இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்நிலையை விளக்கி வரையப்பட்ட நீதிபதி சச்சார் குழு அறிக்கை நடப்பு கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இத்தகவலை மாநிலங்களவை உறுப்பினரும், தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளருமான தாரிக் அன்வர் மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் இதைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி ஒரு கடிதத்தில் இவ்வாறு உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார். கருத்தரங்கில் கலந்து கொள்ள விழைந்த அமைச்சர் வெள்ளம் காரணமாகத் தன் தொகுதிக்குச் சென்றுவிட்டதாகவும் திரு. அன்வர் கூறினார்.

"முஸ்லிம்கள் சிறப்புச்சலுகை கோரவில்லை, மாறாக உரிய பங்கையே கோருகின்றனர்" என்ற தாரிக் அன்வர், "அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட்டாலேயே வலிமையான இந்தியா என்கிற கனவு சாத்தியப்படும்" என்றார்.

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியும், தனி இடஒதுக்கீடு இல்லாமல் முஸ்லிம்கள் தமது உரிமைகளை அடைய இயலாது என்று சுட்டி இருப்பதாக தாரிக் அன்வர் எடுத்துரைத்தார்.

மும்பையின் 1992-93 கலவரங்கள் மீதான ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் குறித்து 'நீதி நிலைநாட்டப்படும் என்று உணரப்படும் வரை இதை முன்னெடுத்துச் செல்ல முடியாது' என்றார்.

நன்றிங்க

பொதுவானவை.

2 comments:

பாபு said...

//மும்பையின் 1992-93 கலவரங்கள் மீதான ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் குறித்து 'நீதி நிலைநாட்டப்படும் என்று உணரப்படும் வரை இதை முன்னெடுத்துச் செல்ல முடியாது' என்றார்.//

உண்மைதான். மும்பை கலவரங்களின் சூத்ரதாரி பால்தாக்ரேவையோ, திரிசூலத்தின் ஒரு முனை முஸ்லிம்களை அழிக்க, இரண்டாம் முனை கிறிஸ்தவர்களுக்கு, மூன்றாவது தலித்களுக்கு என்று பேசிய தொகாடியாவையோ தொட்டுப்பார்க்க நமது சட்டங்களுக்கு திராணி இல்லைதான். நமது நாட்டு மதச்சார்பின்மையின் இலட்சணமான கேவலம் இது.

முஸ்லிம் said...

மல்லிகை மணம் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.