Monday, August 13, 2007

தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உதயம்!

தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உதயம்!

ஆகஸ்ட் 14, 2007

சென்னை: தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அமைத்துள்ள தனி நிறுவனத்துக்கு தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

கேபிள் டிவி ஒளிபரப்பை அரசே மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரி வந்தார். இதையடுத்து கேபிள் டிவி ஒளிபரப்பை அரசே மேற்கொள்வது குறித்து முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி எல்காட் (எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் தமிழ்நாடு) அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் அடிப்படையில் முதல்வரிடம் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து புதிய கேபிள் டிவி கட்டமைப்பு உருவாக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது இந்த கட்டமைப்புக்கு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கம்பி வட தொலைக்காட்சி சேவையை வழங்குவது சம்பந்தமாக 11.8.2007 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்ற புதிய அரசு பொதுத்துறை நிறுவனம் தொடங்கப்படும்.

இந்த நிறுவனத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இருப்பார். இவர் தவிர நான்கு இயக்குநர்களும் இருப்பார்கள். நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்திரமெளலி, எல்காட் நிர்வாக இயக்குநர் உமாசங்கர், தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோரே அவர்கள்.

இந்த பொதுத் துறை நிறுவனத்தில் தனியார் நிறுவனம் எதுவும் சேர்க்கப்பட மாட்டாது. முழுக்க முழுக்க அரசு பொதுத் துறை நிறுவனமாகவே இது செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிங்க

அப்படியே டாடா நிறுவனத்துக்கும் டாடா சொல்லிட்டு அந்தத் திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தலாமே! என்ன நாஞ்சொல்றது...?

6 comments:

SurveySan said...

டாடாக்கு டாடா சொல்லணுமா? ஏனுங்க?

TBCD said...

//*செயல்பத்தலாமே! *//

same blood

Guru Prasath said...

Can somebody tell me why DMK stopped the same plan initiated by ADMK government. If the Sun TV and DMK patch up, will they abolish this Corporation?

முஸ்லிம் said...

//*செயல்பத்தலாமே! *//

tbcd-2 நன்றிங்க!

தட்டச்சுல L அடிக்கடி சிக்கிக் கொள்கிறது, மாத்தனும் கீ போர்டை.

பத்தலாமே - படுத்தலாமேன்னு திருத்தியாச்சுங்கோ.

முஸ்லிம் said...

SurveySan உங்கள் வரவுக்கு நன்றி.

//டாடாக்கு டாடா சொல்லணுமா? ஏனுங்க?//

அது ஒன்னுமில்லீங்க
''தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன்'' மாதிரி 'தமிழ்நாடு டைட்டானியம் வாரியம்'னு தொடங்கலாமேன்னுதான்.

மேலும்,
இத் திட்டத்தால் 1,000 பேருக்கு நேரடியாகவும் 3,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை கிடைக்கும். இது டாடா ஸ்டீல் நிறுவன தலைவர் முத்துராமன்.

இதனால் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது அமைச்சர் பொன்முடி

இப்படி மாத்தி மாத்தி ஆசை வார்த்தைகளை அள்ளி விடுவதாவது இல்லாமலிருக்கும்.

ம்ஹும்... பெருமூச்சுங்க.

முஸ்லிம் said...

Guru Prasath உங்கள் வரவுக்கு நன்றி.

அதிமுக துவங்கிவைத்த திட்டத்தை திமுக ஏன் நிறுத்தியது என்று நாளை யாரும் சொல்ல முடியாது?

ஒருவேளை திமுகவோடு சன் டிவி இணைந்துவிட்டால், விழுங்கி ஏப்பம் விட்டு...

அப்புறம் கடலில் பெருங்காயத்தை கரைத்த கதைதான்.