Sunday, August 26, 2007

தமிழகம் முழுவதும் உஷார் நிலை.

தமிழகம் முழுவதும் உஷார் நிலை
முன்னெச்சரிக்கையாக 700 பேர் கைது


ஆகஸ்ட் 26, 2007

சென்னை: ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

இதேபோல கோவையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர மற்றும் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

மேலும் தமிழத்தின் இதர பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்ள், கோவில்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாமீனில் வெளியே இருக்கும் குற்றவாளிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றிங்க

பொதுவானவை!

5 comments:

மஞ்சூர் ராசா said...

ஆமாம். நாலு நாட்கள் இப்படி உஷார் நிலையில் வேலைகள் நடக்கும். பிறகு மீண்டும் பழைய நிலை திரும்பிவிடும்.அப்புறம் எங்கேனும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கும் மீண்டும் உஷார் நிலை...

இது இப்பொழுது ஒரு தொடரும் சம்பவம் ஆகிவிட்டது....

முஸ்லிம் said...

மஞ்சூர் ராசா உங்கள் வரவுக்கு நன்றி.

என்ன செய்ய கள்ளன் பெருசா, காப்பான் பெருசா என்றால் கள்ளன் தான் பெருசு.

உஷார்படுத்தும் நாலு நாட்களுக்காவது பயங்கரவாதி பதுங்குவான். குண்டு வெடிக்காமல் இருக்குமே...

மாசிலா said...

மஞ்சூர் ராசா : //ஆமாம். நாலு நாட்கள் இப்படி உஷார் நிலையில் வேலைகள் நடக்கும். பிறகு மீண்டும் பழைய நிலை திரும்பிவிடும்.அப்புறம் எங்கேனும் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கும் மீண்டும் உஷார் நிலை...//

வணக்கம் தோழர் மஞ்சூர் ராசா. உங்கள் கருத்து என்னை கொஞ்சம் சிந்திக்க வைத்தது.

நாமும் அரசாங்கத்தின் மீதும் பாதுகாப்பு துறையின் மீதும் மட்டும் அனைத்து சுமைகளை போட்டுவிட்டு கம்மென்றும் இருந்துவிட கூடாது. இது சமுதாய பொதுப்பிரச்சினை. நாம் ஒவ்வொருவரும் கவனமாக இருந்து காவல் துறைக்கு உதவ வேண்டும்.

அராஜக தீவிரவாதிகளின் இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு எனது வன்மையான கண்டனங்கள்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள்.

பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி முஸ்லிம் அய்யா.

முஸ்லிம் said...

மாசிலா உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

மஞ்சூர் ராசா said...

நாம் ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கமே... வேறொன்றும் இல்லை. எவ்வளவு தான் கண்டனம் தெரிவித்தாலும் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படும் இது போன்ற தாக்குதல்களை வேரோடு அறுக்க இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். (எடுத்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள் என்றாலும் சில சிறிய அலட்சியங்களே பெரும் ஆபத்தை விளைவித்துவிடுகின்றன).