Thursday, August 09, 2007

குர்ஆனைத் தடைசெய்யவேண்டும், டச்சு நாடாளுமன்ற உறுப்பினர்.

குர்ஆனைத் தடைசெய்யவேண்டும் : டச்சு நாடாளுமன்ற உறுப்பினர்

வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007
முஸ்லிம்களின் வழிகாட்டியாக இறைவனின் வார்த்தைகள் என முஸ்லிம்களால் நம்பப்படும் திருமறை குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கியர்ட் வில்டர்ஸ் கூறியுள்ளார். 150 உறுப்பினர்கள் கொண்ட டச்சு நாடாளுமன்றத்தில் 9 உறுப்பினர்கள் கொண்ட கட்சியைச் சேர்ந்த இவர் இதை நேற்று (8/8/2007) AFP நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

ஹிட்லரின் Mein Kampf என்ற புத்தகம் வன்முறையை வலியுறுத்துவதால் தடைசெய்யப்பட்டது போன்றே முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனையும் தடை செய்ய வேண்டும் என அவர் கூறினார். இதற்கான காரணமாக குர்ஆன் முஸ்லிம் அல்லாதவர்களுடன்முஸ்லிம்களைப் போரிடச் சொல்வதாக அவர் தெரிவித்தார். முஸ்லிம்களாலும் அவர்களின் அல்லாஹ், முஹம்மத் என்ற சொற்களாலும் சலிப்பு அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முஸ்லிம்கள் எவரையும் நெதர்லாந்தில் குடியேற அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் மேலும் கூறினார்.

வில்டர்சின் இந்தக் கருத்தை நெதர்லாந்து அரசு உடனடியாகக் கண்டித்துள்ளது. வில்டர்சின் இது போன்ற பேச்சுக்கள் டச்சு சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பதாக இருப்பதாக அரசின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அரசின் மூத்த அமைச்சர் எல்லா வொகேலா இது குறித்துக் கருத்து கூறிய போது வில்டர்சின் இப்பேச்சு டச்சு சமூகத்தின் மதச் சகிப்புத் தன்மையை உலக அரங்கில் கேவலப் படுத்துவது போல் உள்ளது என்றும் அமைதியை விரும்பும் பெரும்பான்மை முஸ்லிம்களின் மனதை இது புண்படுத்துவது போல் அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இஸ்லாமோஃபோபிஸ்டுத் தனமாக இருக்கும் இவ்வகைப் பேச்சுக்கள் தொடர்ந்து பேசிவரும் வில்டர்ஸ் மீது எல்ஸ் லூக்காஸ் எனும் பொதுநல வழக்கறிஞர் வழக்குத்தொடர்ந்துள்ளார். இவ்வழக்கில் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வில்டர்சின் நச்சு நோக்கம் நிரூபிக்கப்பட்டால் அவர் மீது 23 ஆயிரம் டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். இதற்கான பூர்வாங்க வேலைகளை டச்சு அரசு வழக்குத் தொடுப்புப் பிரிவு (Dutch Public Prosecution) ஏற்கனவே தொடங்கியுள்ளது.

நன்றிங்க

சில அரை வேக்காடுகள் இஸ்லாத்தை விளங்கியிருக்கிற மாதிரி, இந்த டச்சு நாடாளுமன்ற உறுப்பினர் கியர்ட் வில்டர்ஸும் அரைகுறையாக அல்குர்ஆனை விளங்கியிருக்கிறார். அல்லது அல்குர்ஆனை நேரடியாக படிக்காமேலேயே கேள்விப் பேச்சைக் கேட்டு டச்சு நாடாளுமன்ற உறுப்பினர் உளறியிருக்கிறார். எல்லாம் இஸ்லாமோஃபோபியா!

7 comments:

மறத்தமிழன் said...

இப்படி கேவலமாக நடந்துகொண்ட வில்டர்சை தண்டிக்க டச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால் சவுதியில் பைபிள் கொண்டு போனால் ஏர்போர்டிலேயே கிழித்து குப்பைதொட்டியில் போட்டுவிடுவார்களமே? இது என்ன கிறிஸ்துவபோபியாவா? இது குறித்த உங்கள் கருத்து என்ன?

முஸ்லிம் said...

மறத்தமிழன் உங்கள் வரவுக்கு நன்றி.

இன்னொருமுறை நீங்கள் விவரம் கெட்டவர் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.

சவூதி அரபிய நாட்டில் எல்லா குடிமக்களும் முஸ்லிம்கள். மாற்று மதத்தினர் எவரும் அங்கு குடியுரிமைப் பெற முடியாது.

ஏன்? அடுத்த நாட்டு முஸ்லிம்கள் விரும்பினாலும் அங்கு குடியுரிமைப் பெற்றுக்கொள்ள முடியாது. சவூதி
அரபியா தன்னை ஒரு முஸ்லிம் நாடு என்று அறிவித்துக்கொண்டு, முஸ்லிம்களுக்கு மட்டுமுள்ள சட்டங்களை வகுத்துக்கொண்டு ஆட்சி செய்து வருகிறது.

அயல் நாட்டிலிருந்து பணி செய்வதற்காகச் செல்பவர்கள், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், வேறுமதத்தினராக
இருந்தாலும், இவர்கள் கொண்டு செல்லும் அனைத்துப் புத்தகங்களும் (எப்பவாவது) சோதிக்கப்படும். அப்படி சோதிக்கும்பொழுது சவூதி அரபியாவின் கொள்கைக்கு எதிரான புத்தகங்களை அந்நாட்டிற்குள் அனுமதிப்பதில்லை.

முதன் முறையாக சவூதி செல்லும் முஸ்லிம்கள் தமிழ் நாட்டில் வணக்கமாக படித்து வரும் மவ்லுது எனும் அரபு புத்தகத்தைக் கொண்டு வருவார்கள். சோதிக்கும் பொழுது சோதிப்பவரின் கண்ணில் பட்டால் அதையும் அகற்றி விடுவார்கள். நன்கொடை கேட்டு வசூல் செய்வதற்காக நன்கொடை ரசீது புத்தகத்தைக் கொண்டு சென்றாலும்
அதையும் அனுமதிக்க மாட்டார்கள்.

அது போலத்தான் சவூதி அரசாங்கத்தின் கொள்கைக்கும், அந்நாட்டின் அனைத்து குடிமக்களின் கொள்கைக்கும் எதிரானது என்பதால் பைபிளை அவர்கள் அனுமதிப்பதில்லை.

உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமோ? இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்தால் எந்த நாட்டிற்குச்
சென்றாலும் இந்தியாவின் சட்டங்களையே அனுஷ்டிக்க வேண்டும் என்று கருதக்கூடாது. எந்த நாட்டிற்குச் செல்கிறோமோ அந்நாட்டின் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லையேல் அந்த நாட்டுக்குச் செல்லக்கூடாது.

இப்போ, அல்குர்ஆனை அனுமதிக்காத நாடு இருந்தால், அந்த நாட்டுக்கு அல்குர்ஆனை எடுத்துச் செல்வது கூடாது. அப்படி எடுத்துச் சென்றால், அது அந்த நாட்டின் கொள்கைக்கு எதிரானது.

டச்சு அரசின் கொள்கை என்ன?

வில்டர்ஸின் அல்குர்ஆன் எதிர்ப்புக்கு, எதிரானக் கொள்கை!

டச்சு அரசு கொள்கைக்கு எதிராக குரல் கொடுக்கிறார் கியர்ட் வில்டர்ஸ்.

சவூதி அரசு கொள்கைக்கு எதிராக அந்த நாட்டுக்கு சம்பந்தமில்லாத நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள்!

இரண்டு பேருமே விவரம் கெட்டவர்கள்!

மறத்தமிழன் said...

ஐயா விவரமுள்ளவரே,

டச்சு நாட்டு சட்டத்தை என்ன கடவுளா இயற்றினார்??? உம்முடைய வாதப் படி எடுத்துக்கொண்டாலும், நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கியர்ட் வில்டர்ஸ், மக்கள் பிரதிநிதி, சட்டபூர்வமாக குரானை நெதர்லான்டில் தடைசெய்ய சொன்னால் என்ன தவறு??? உமக்கு ஏன் பற்றிக் கொண்டு எரிகிறது. அந்த ஆளை நீர் ஏன் உளறுவாயன் என்கிறீர்?? அவர் உம்முடைய நாட்டில் தடை செய்ய சொன்னாரா?

அந்த ஆள் சொன்னார் ""This is not a law for Saudi Arabia, this is a law for the Netherlands," he said. "I couldn't care less what people in the Middle East think about it.".
இன்னுமொரு விஷயம், பலதடவை அவரின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகளால் குறி வைக்கபட்டது. ஏதோ ஆண்டவன் அருளால் அந்த ஆள் பிழைத்து கொண்டார்.அவர் நான் நிம்மதியா தூங்கியே பலநாள் ஆச்சு என புலம்புகிறார்.அதனால் டச்சு அரசு சிறப்பு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

பிகு:நான் சொல்லவந்ததை புரிந்துகொண்டு பின் நான் விவரங் கெட்டவன் என எழுதும்.(ஒரு வேளை உமது பதிவில் பின்னூட்டமிட்டதால் அப்படி எழுதினீரா?) சவுதியோ டச்சோ மதச்சுதந்திரம் வேண்டும் என நினைப்பவன் நான்.சவுதியில் எவனும் பைபிள் படிக்க கூடாது என் அல்லா சொன்னாரா என்ன?

மறத்தமிழன் said...

ஐயா நீர் தான் விவரங்கெட்டவர்.
வில்ட்ர்ஸ் ஒரு நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்,மக்கள் பிரதிநிதி. அவர் சட்டத்தை மாற்றி குரானை நேதர்லாந்தில், அவர்கள் நாட்டில் தடை செய்ய சொல்கிறார். உம் நாட்டிலா தடை செய்ய சொல்கிறார்.உம்க்கு ஏன் எரிகிறது.அவரை ஏன் 'உளறியிருக்கிறார்'அரை வேக்காடு' என எழுதுகிறீர்?.

அந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவருமே குடியேறிகள்.சவுதி போன்ற நாடுகளில் அடிப்படை உரிமையான மதச்சுதந்திரம் உட்பட, எந்த உரிமையும் குடியேறிகளுக்கு வழங்காது. ஆனால் கிரிஸ்தவ நாட்டில் உரிமைமறுப்பு கோரிக்கை விடுப்பவன் உளறுவாயன் இல்லையா?

சவுதி சட்டத்தை என்ன ஆண்டவனா எழுதி கொடுத்துவிட்டு போனான்? சட்டத்தை மாற்ற நீர் குரல் கொடுக்க தயாரா? முஸ்லிமான நீர் ஏன் முஸ்லிம் நாடுகளில் மதசுதந்திரம் கேட்டு குரல் கொடும்.பின்பு (மிகுந்த மதசுத்ந்திரமுள்ள)இந்தியாவையும் கிரிஸ்துவ நாடுகளையும் திருத்த கிளம்பும்.

முஸ்லிம் said...

At 2:37 PM, மறத்தமிழன் said...
நன்றி ஐயா,

என் ஞானகண்ணை திறந்து விட்ட அறிவின் ஊற்றே நீர் வாழி!

--விவரங்கெட்டவன்
-----------------------

மறத்தமிழன், வாழ்க பாரதம் என்ற பதிவில் இந்தப் பின்னூட்த்தை எழுதியது நீர்தானே?

மறத்தமிழன் said...

திருத்தம்;

முஸ்லிமான நீர் முதலில் முஸ்லிம் நாடுகளில் மதச்சுதந்திரம் கேட்டு குரல் கொடும்.பின்பு (மிகுந்த மதச்சுதநதிரமுள்ள)இந்தியாவையும் கிறிஸ்துவ நாடுகளையும் திருத்த கிளம்பும்.

மறத்தமிழன் said...

ஹய்யே ஹய்யே சின்னபுள்ளதனமாயில்ல இருக்கு.

அறியாமையில் எழுதுவதாக நீர் என்னைப் பற்றி எழுதியதால் நான் சொன்ன வஞ்சப் புகழ்ச்சி வரிகளய்யா அவை.
நீர் விதண்டவாதம் செய்ததால் நான் விவரங்கெட்டதனமாய் பின்னூட்டமிட்டு மாட்டிகொண்டேன் என சூசமாக எழுதினேன்,
அதைப் புரிந்து கொள்ளமல் இந்த பதிவில் உமது கருத்து குறித்து கேட்டால் என்னை விவரங்கெட்டவன் எனகிறீர்.