பெண்ணின் சம்மதத்தோடு செக்ஸ் உறவு
வைப்பது கற்பழிப்பு ஆகாது: சுப்ரீம் கோர்ட்
ஆகஸ்ட் 30, 2007
டெல்லி: திருமணம் செய்து கொள்வதாக கூறிய பின்னர் அந்தப் பெண்ணின் சம்மதத்தோடு உடலுறவு வைத்துக் கொண்டு பின்னர் அந்தப் பெண்ணை ஏமாற்றுவோர் மீது கற்பழிப்பு வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார். இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, அவருடன் நெருங்கிப் பழகி செக்ஸ் உறவும் வைத்துக் கொண்டு விட்டு பின்னர் கம்பி நீட்டி விட்டார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பிரதீப் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதீப்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து பிரதீப் சார்பில் பீகார் மாநில உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இங்கும் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் பிரதீப்.
பிரதீப்குமார் தாக்கல் செய்த மனுவில், முழு சம்மதத்துடன் தான் அந்த பெண் என்னோடு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். இதில் நம்பிக்கை மோசடிக்கோ அல்லது கற்பழிப்புக்கோ இடமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கே.ஜெயின், அரிஜித் பசாயத் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில்,
ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஒரு ஆண் உறுதி அளித்து அந்த பெண்ணின் முழு சம்மதத்துடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட பின்பு, அவர் திருமணம் செய்து கொள்ளாமல் கொடுத்த வாக்குறுதியை மீறினாலும் அவர் மீது கற்பழிப்பு குற்றம் சுமத்த முடியாது.
அதே நேரத்தில் பலவந்தப்படுத்தியோ அல்லது பயமுறுத்தியோ அந்த பெண்ணின் சம்மதத்தை பெற்றிருந்தால் அதை கற்பழிப்பாக கருத முடியும்.
மேஜர் ஆன பெண் ஒருவர், திருமண வாக்குறுதியை நம்பி, கர்ப்பமாகும்வரை செக்ஸ் உறவுக்கு சம்மதம் கொடுத்திருந்தால் அதை அஜாக்கிரதையாக கருத வேண்டுமே தவிர, அந்த பெண் உண்மையை தவறாக புரிந்து கொண்டதாக கருத முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
பிரதீப்குமார் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நன்றிங்க
முதலில், நீதிமன்றங்களின் இந்த இரட்டை தீர்ப்பு ஒழிய வேண்டும்!
5 comments:
தஸ்லிமா சொன்ன - கர்ப்பப்பை சுதந்திரத்திற்கு 'வக்காலத்து' வாங்குகிற மாதிரியல்லவா இருக்கிறது இந்த தீர்ப்பு.
ஆனால், ஆணும்-ஆணும் சம்மதத்தோடு 'குடும்பம்+குடித்தனம்' புரியலாம் என்று 'ராக்கெட்' ரேஞ்சுக்கு முன்னேறி வருகிற மேற்கத்திய நாடுகளோடு - ஒப்பிடும்போது- நமது நீதிபதியின் தீர்ப்பு 'சும்மா ஜுஜுபி'..கண்டுகாதீங்க!
என் கருத்துப்படி தீர்ப்பு சரியானதாகவே தோன்றுகிறது.
திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததன் பேரில், வெறும் வாக்குறுதியை நம்பி அவனோடு உடன்பட்டு உடலுறவு கொண்டதை எவ்வாறு கற்பழிப்பென சொல்ல முடியும்.
அதன்பின் அவன் திருமணம் செய்யாமல் விட்டதைதான் நம்பிக்கை மோசடி என்று சொல்ல வேண்டும்.
கற்பழிப்பு என்பதே பெண்ணின் சம்மதம் இல்லாமல் பலவந்தமாக நடத்தப்படுவது என்னும் போது நீதிபதிகள் சொல்வது சரியாகவே இருக்கிறது.
நம்பிக்கை மோசடி என்று சொல்வதே சரியாக இருக்கலாம்.
பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
சுல்தான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
மஞ்சூர் ராசா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
//நம்பிக்கை மோசடி என்று சொல்வதே சரியாக இருக்கலாம்.//
இருவருமே ஒரு கருத்தை சொல்லியுள்ளீர்கள்.
முதலிரண்டு நீதிமன்றங்களில் கற்பழிப்பு நம்பிக்கை மோசடி பிரிவுகளில் அவரை குற்றவாளியென தீர்ப்பு கூறியது. ஆனால் உச்ச நீதிமன்றம் அவரை குற்றவாளி இல்லை வழக்கை மீண்டும் விசாரியுங்கள் என்கிறது.
முதலில் நீதிமன்றங்களில் நிலவும் இந்த இரட்டைத் தீர்ப்புகள் மாறவேண்டும். அடுத்து...
திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்களித்துவிட்டு உடலுறவு கொண்டபின் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றால் இதுவும் கற்பழிப்புதான் பலவந்தப்படுத்தாத கற்பழிப்பு. இதற்கு கயவன் கையாண்டது திருமணம் என்ற நம்பிக்கை மோசடி.
Post a Comment