Tuesday, August 14, 2007

செல்போன், வாக்மேனுடன் பிச்சைக்காரர்!

செல்போன், வாக்மேனுடன் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்

வத்தலகுண்டு, ஆக. 15: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் செல்போன், வாக்மேன் சகிதம் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார்.

வத்தலகுண்டு பஸ் நிலையத்தில், சித்தி விநாயகர் கோயில் உள்ளது. அக்கோயில் முன்பு 35 வயது மதிக்கத்தக்க பிச்சைக்காரர், வாக்மேனில் பாட்டு கேட்டவாறும், அவ்வப்போது செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டும் பிச்சை எடுத்து வருகிறார்.

பலர் எப்போதும்போல, அவருக்கு பிச்சை போட்டுச் செல்கின்றனர்.

நன்றிங்க

தொழிற்நுட்பத்தில் வளர்ந்துள்ளதாகச் சொல்லிக்கொண்டே வல்லரசுகளிடம் கையேந்தும் இந்தியாவின் குறியீடா இவர்?

பிச்சைக்காரர் கைத்தொலைபேசியில் 9440000000 தட்டி அழைப்பைச் சொடுக்குகிறார். எதிர்முனையின் அழைப்பு மணி ஒலிக்கிறது. அழைப்பையேற்று எதிர்முனையில் ஹலோ... என்றகிறார் ஒரு அம்மா.

பிச்சைக்காரர்: நாந்தாம்மா பிச்சைக்காரன் பேசுறேன்.

அந்த அம்மா: ஹலோ பிச்சைக்காரன் எப்படியிருக்கே?

பிச்சைக்காரன்: ஒங்க புண்ணியத்திலே நல்லாயிருக்கேம்மா, ஏதாவது பிச்சை போடுங்கம்மா?

அந்த அம்மா: சரி சரி வீட்டு நம்பர் 00/1111 முதலாளித் தெரு என்ற முகவரிக்கு வா!

பிச்சைக்காரர்: சரிங்கம்மா! என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டு, பிச்சையை கன்ஃபாம் செய்ய கைத் தொலைபேசியில் வேறு எண்களை தட்டுகிறார் மிஸ்டர் பிச்சைக்காரர்.

வாழ்க சுதந்திரம்!

வாழ்த்துக்கள்!!

3 comments:

மாசிலா said...

நல்ல வேளை, கைபேசியில் வந்த பிச்சையை ஊர்ஜிதம் பண்ண ஒரு குறுஞ்செய்தி கேக்காம போனாறே!

ஹா! ஹா!

போறாத காலமடா சாமி.

நன்றி முஸ்லிம்.

பாபு said...

தல..
அவரோட படம் கெடச்சா 'இன்றைய இந்தியா'ன்னு கேப்ஷன் கொடுத்து போட்டுடலாம் போல.

எனிஹவ், சுதந்திரதின நல்வாழ்த்து(க்)கள்.

முஸ்லிம் said...

மாசிலா மற்றும் மல்லிகை மணம் உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றிகள்.

பிச்சைக்காரர்களின் கைத்தொலை தூரப் பேசிகள் சில நேரங்களில் நடமாடும் பூத்தாவும் உதவுகிறது அதுக்காக நன்றியும் சொல்லனும்.