
முகம் முழுக்க முடி.. துயரத்தில் சிறுவன்
ஜூலை 16, 2007
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் ஒரு சிறுவனுக்கு முகம் முழுவதும் முடி வளர்ந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள சாங்கிலிவாடி கிராமத்தைச் சேர்ந்தவன் பிருத்விராஜ் பாட்டீல்(11). பிறவியிலேயே எல்லோருக்கும் தலையில் தான் முடியிருக்கும். ஆனால் இந்த சிறுவனுக்கு தலையில் மட்டுமல்லாது முகம் முழுவதும் முடியாக இருந்தது.
இது நாளடைவில் சரியாகிவிடும் என பெற்றோர்கள் எண்ணினார்கள். ஆனால் வித்தியாசமாக பிருத்விராஜூக்கு முகத்தில் முடி தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது.
சிகிச்சைக்காக பெற்றோர்கள் அலையாத டாக்டர்கள் இல்லையாம். ஆனால் பாவம் டாக்டர்களுக்கே இந்த பிரச்சனை சவாலாக அமைந்து விட்டது. இதுவரை இதற்கான தீர்வு காண முடியாமல் டாக்டர்கள் தங்கள் சோதனையில் தோல்வி அடைந்துவிட்டனர்.
சமீபத்தில் சாங்கிலி கிராமத்தில் வித்தியாசமான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் சிகிச்சை பெறுவதற்காக பெற்றோருடன் பிருத்விராஜ் பாட்டீல் வந்திருந்தான்.
டாக்டர்கள் முயற்சி வெற்றி பெறுமா? காத்திருந்து பார்ப்போம்
நன்றிங்க, தட்ஸ் தமிழ் ஜுலை 16,2007
அதிசயம் ஆனால் உண்மை!
2 comments:
http://www.msnbc.msn.com/id/5114929/?GT1=10252
இங்கு கின்னஸ் சாதனை பற்றிய ஒரு படத் தொகுப்பு இருக்கிறது. அதில் 18ஆவது படம் இவரைப் போன்ற ஒருவரைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.
Congenital Generalized Hypertrichosis என்ற ஒரு வியாதியே இதற்குக் காரணம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.
இலவசக்கொத்தனார் உங்கள் வரவுக்கும் தகவலுக்கும் நன்றி.
Post a Comment