ஆகஸ்ட் 31, 2007
பாகல்பூர்: பீகார் மாநிலம், பாகல்பூரில் செயினை பறிக்க முயன்ற திருடன் அவரங்கசீப்பை மோட்டார் சைக்கிளில் கயிறு கட்டி இழுத்து சென்ற காவலர்கள் இருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdcZA6_vuZaBAxFsv3Ska4O3IVQ2jKJYSbnOig3Pyoogun7LbYCHFdSPL2Msaqaii7c6eQKwVZyhGhvc67PS_xBZiG3tgFJ48Isn3whlRalj_WWS_Xy81RamZJzqu31BeEcE07/s1600-h/bihar.jpg">

பீகார் மாநிலம், பாகல்பூரில் உள்ள நாத்நகரில் கோவிலுக்கு வந்த பெண் ஒருவரிடம், ஒரு வாலிபர் சங்கிலியை பறிக்க முயன்றார். அந்த பெண் சத்தம் போட்டதை பார்த்த மக்கள் சங்கிலி திருடனை விரட்டி பிடித்தனர்.
திருட முயன்ற அந்த வாலிபர் பெயர் அவுரங்கசீப். பொது மக்களிடம் சிக்கிய அவரை, தெருவில் வருவோர், போவோர் எல்லாம் அடித்து உதைத்தனர்.
அப்போது அங்கு வந்த இரு போலீசார் தங்கள் பங்குக்கு அவுரங்கசீப்பை போட்டு மிதித்ததில் அவர் மயங்கினார்.

எழுந்து நடக்ககூட முடியாத நிலையில் இருந்த அவரை, போலீசார் காலை கயிற்றால் கட்டி மோட்டார் சைக்கிளில் தரதரவென இழுத்துச் சென்றனர்.
இந்த கொடூர தாக்குதல் நாடெங்கும் பயங்கர அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பீகார் மாநில அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் வந்ததால், அம்மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி, மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்த போலீஸ்காரர்கள் ராமச்சந்திர ராய் மற்றும் சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்களிடம் கடந்த 3 தினங்களாக நடந்த விசாரணையில் அவர்கள் செய்த தவறு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் பீகார் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட செய்யப்பட்ட இரு போலீஸ்காரர்களையும் டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டனர்.
காட்டுமிராண்டி தனமாக தாக்கப்பட்ட அவுரங்கசீப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. தாக்குதலில் அவருடைய இடுப்பு எலும்புகள் முற்றிலும் நொறுங்கி விட்டதால் இனிமேல் அவரால் எழுந்து நடப்பது கடினம் தான் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
நன்றிங்க
//காட்டுமிராண்டி தனமாக தாக்கப்பட்ட அவுரங்கசீப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. தாக்குதலில் அவருடைய இடுப்பு எலும்புகள் முற்றிலும் நொறுங்கி விட்டதால் இனிமேல் அவரால் எழுந்து நடப்பது கடினம் தான் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.//
இதற்கு அவனை கொன்றே போட்டிருக்கலாம்!
14 comments:
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தாருக்கு போலீஸ் காரர்கள் தரப்பில் நஷ்ட ஈடு வழங்கப் பட வேண்டும்.
அந்தப் போலீஸ் காரர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப் படி தண்டிக்க வேண்டும்.
நல்ல பதிவு முஸ்லிம்.
மனித நேயமற்ற மிருகங்கள் காவல்துறையில் இருந்தால் என்ன? இல்லை செத்தால்தான் என்ன?
முஸ்லிம் என்பதற்காகவே ஒருவேளை இப்படி கோரமாக தாக்கப்பட்டாரோ?
பாவம் இப்போது இவரால் நடக்க முடியாதோ!
இது போல் அடாவடி செயல்களால் ஒருவர் இன்னொருவரை தாக்கி அதனால் இவருக்கு அன்றாட வாழ்க்கையை இயல்பான முறையில் வாழ முடியாமல் போனால், தாக்கியவரை தாக்கப்பட்டவரின் காலம் முடியும்வரை நஷ்ட ஈடு கொடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும்.
அப்போதுதான் இது போன்ற பீடைகள் சமுதாயத்தில் தலைதூக்குவதை தடுக்க முடியும்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி முஸ்லிம்.
ஔரங்கசீப் விரைவில் குணமுடைய அவர் வேண்டும் ஆண்டவர் அவருக்கு துணையாக இருப்பார் என நம்புவோம்.
தஸ்லீமாவைத் தாக்கிய போது பர்தா அணிந்து பதுங்கியவர்கள்
இப்போதாவது முழித்திருக்கிறார்களே
மற்ற படி பீகார் விசயம் கண்டிக்கத்தக்கது தான்
ஆனால் தயவு செய்து இதற்கு மதச்சாயம் பூசாதீர்கள்
(முன்னாள்) காவலரை டிஸ்மிஸ் செய்தால் மட்டும் போதாது. அவர் கைது செய்யப்பட்டு தண்டனை பெற வேண்டும்.மேலும் அவர்களிடம் அபராத தொகை வசூலித்து பாதிக்கப்பட்டவரிடம் சிகச்சைக்காக அளிக்க வேண்டும்.
//முஸ்லிம் என்பதற்காகவே ஒருவேளை இப்படி கோரமாக தாக்கப்பட்டாரோ? //
என்ன பத்த வைச்சுவுடறீங்க போல?
இந்துக்களை மட்டும் இந்திய போலிஸ் என்ன மரியாதையாவா நடத்துது? எல்லாம் காலனி ஆதிக்க மனப்பான்மைதான் காரணம்.
வெங்கட்ராமன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்கள் வரவுக்கும் கருத்துதுக்கும் நன்றி.
//முஸ்லிம் என்பதற்காகவே ஒருவேளை இப்படி கோரமாக தாக்கப்பட்டாரோ?//
யாராக இருந்தாலும் இப்படி தாக்கியது கண்டிக்கத்தக்க செயல். திருடனை பொது மக்கள் பிடித்து அடித்தாலும், அவர்களிடமிருந்து அவனை காப்பாற்றி சட்டத்தின் முன் நிறுத்துவதுதான் காவல்துறையின் கடமை.
ஆனால் காவல்துறையே அவனை வன்மையாக போட்டு சாத்தியிருப்பது இது மதத்துவேஷமாய் இருக்குமோ என்ற எண்ணத்தையே தோற்றுவிக்கிறது.
சிரீ சரண் மற்றும் மறத்தமிழன் உங்கள் வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.
தஸ்லீமா கேஸை நீங்கதான் பதியணும். நாங்க வேடிக்கை பார்ப்போம். இந்த மாதிரி கேஸை நாங்கதான் பதியணும் நீங்க வேடிக்கை பார்க்கணும் அதானே சரி என்ன நாஞ்சொல்றது? :)
சிரிசரன் என்ன சொல்ல வர்றார்னா
தஸ்லீமா மேட்டர்ல சற்றுமுன்ல கும்மி அடிச்சோம்.
இந்த விவகாரத்துல வீடியோவே சிக்கிட்டதால பம்மிப் பதில் போடவேண்டிய நெலம ஆயிடுச்சு..
என்ன பன்றது... ஐபிஎன் காரனுங்க போய் அந்த சம்பவத்தப் படமா எடுத்துத் தொலச்சிட்டானுவ...!!
வேற வழியில்லாம இப்படி பொலப்புறாரு..
இந்தியப் போலீஸ் பொதுமக்களை விட்டு ரொம்பவே விலகிப் போய் விட்டது. வீணாப் போன போலீஸ் என்று சொல்லலாம். மானங்கேட்ட மூடர்கள்.
http://muslimpage.blogspot.com/2007/08/blog-post_31.html
இந்தியப் போலீஸ் பொதுமக்களை விட்டு ரொம்பவே விலகிப் போய் விட்டது. வீணாப் போன போலீஸ் என்று சொல்லலாம். மானங்கேட்ட மூடர்கள்.
வசதியற்ற ஏழைகள் அதிகம் புழங்கும் இதுபோன்ற பகுதிகளில் வீண்வீராப்பு, வரட்டு கவுரவம் மற்றும் பணத் திமிர் பெண்கள் வேண்டுமென்றே இதுபோல் தங்களது உயர் மதிப்பு ஆபரணங்களை அனைவரது கண்படும்படியாக அணிந்து, தனது நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்க தெரியாமல் திருட்டை தூண்டியதற்காகவும் இவள் மீது போலீஸ் தடியடி நடத்தி தண்டித்து இருக்கவேண்டும். அந்த பீடை அடக்கமாக இடத்திற்கு ஏற்றாற்போல் ஆபரணங்கள் அணிந்து வந்திருந்து இருந்தால் இது போல் நடந்து இருக்காது.
அந்த பெண் கழுதையையும் தண்டிக்க வேண்டும். இது நியாயம்.
தயவு செய்து இதற்கு மதச்சாயம் பூசாதீர்கள் -ஸ்ரீசரன்
சகோதரர் ஸ்ரீசரன் அவர்களே!தங்களின் மேற்கண்ட வேண்டுகோளுக்கு அர்த்தம் என்ன என்று சற்று புரியும்படியாக சொல்ல்ல்ல்ங்களேன்?
Post a Comment