Tuesday, August 14, 2007

2. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல்.

தமிழ்நாடு

11. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்.

கோயம்பேடு : ஜெ.ஜெ., நகரில் குரூப் செக்சில் ஈடுபட்டு கைதானவர்கள் ஆபாச "சிடி' படப்பிடிப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டதும், அவர்களுடன் சிக்கிய புரோக்கர், "தொழிலில்' ஜூனியர் கன்னட பிரசாத் என்று பெயரெடுத்தவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, ஜெ.ஜெ.,நகர் மற்றும் முகப்பேர் பகுதிகளில் அரசு உயர் அதிகாரிகள் மட்டுமின்றி தொழிலதிபர்களும், ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் வசித்து வருகின்றனர். உயர் வருவாய் பிரிவினரான இவர்களில் "சபல' பிரியர்களை குஷிபடுத்துவதற்காக இப்பகுதிகளில் உள்ள சில வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் விபசார தொழில் களைகட்டியுள்ளது. இது குறித்து போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து திருமங்கலம் உதவி கமிஷனர் அழகு சோலைமலை தலைமையில் ஜெ.ஜெ.,நகர் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர், அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

கோல்டன் ஜார்ஜ் நகர் சுடுகாடு பகுதியில் குரூப் செக்ஸில் ஈடுபட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் பஷீர்(22) சயனுதீன்(33), சமீர்(22) ஆகியோரும் அவர்களுடன் விபசார பெண்கள் ஆயிஷா(19), ரஷீயா(18), பூஜா மற்றும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த விபசார புரோக்கர் சாகுல் ஹமீது(44) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் விபசார புரோக்கர் சாகுல் ஹமீது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட கன்னட பிரசாத்தைப் போலவே சாகுல் ஹமீதும் தமிழகம் முழுவதும் விபசார தொழிலை நடத்தி வந்துள்ளார். இவன் கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அழகான ஏழை பெண்களை வேலை தருவதாக தமிழகம் அழைத்து வந்து பல இடங்களில் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும் கோல்டன் ஜார்ஜ் நகர் சுடுகாட்டில் கைது செய்யப்பட்டபோது அவர்கள் ஆபாச "சிடி' படப்பிடிப்பிற்கான ஒத்திகையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இரவு நேரங்களில் "தொழில்' நடத்தும் இந்த கும்பல் பகலில் ஆள் நடமாட்டமற்ற சுடுகாட்டுப் பகுதியில் மறைந்து இருப்பார்களாம். ஏற்கனவே, இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் விபசார வழக்குகளும் பதிவாகியுள்ளது. பிற மாநில பெண்களை "சப்ளை' செய்வதில் சாகுல் ஹமீது பிரபலமானவர் என்பதால் அவரை "ஜூனியர் கன்னட பிரசாத்' என்று அவர்களது வட்டாரத்தில் பட்டப் பெயர் வைத்து அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஜெ.ஜெ.,நகர் போலீசார் சாகுல் ஹமீதை, தங்களது பாதுகாப்பில் எடுத்து விசாரித்தால் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதனிடையே அவரை பெயிலில் எடுக்க வக்கீல்கள் மனு செய்துள்ளதாக தெரிகிறது. இவ்வழக்கு அம்பத்துõர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

நன்றிங்க, DINAMALAR 14/08/07

அட மானங்கெட்ட ஜென்மங்களா...!

2 comments:

மாசிலா said...

தற்போதைய மாறிவரும் சமூக சூழல்களில் இதுபோன்ற அநியாயங்கள் இனி நிறையவே நடக்கும். பணம் நிறைந்த நடுத்தர வர்க்கத்தினர், முதலாளிகள் இவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் இது போன்ற அடாவடி செயல்களில் அதிகமாகவே ஈடுபடுவார்கள்.

ஏழ்மை இல்லாமல் செய்தால் இது தானாகவே மறைந்துவிடும்.

அனைத்திற்கும் ஏழ்மையே காரணம்.

ஏழைகளை அழிக்காமல் வைத்திருப்பதில் இதுபோன்ற பேடிகளுக்கு மிகுந்த ஈடுபாடு. அவர்கள்தானே இவர்கள் காம களியாட்டங்களுக்கு மூளப்பொருள். எனவே அறியாமை, ஏழ்மை, வறுமை இதில் இப்பெண்களை போன்றவர்களை வைத்து பேணி காப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

பதிவிற்கு நன்றி முஸ்லிம்.

முஸ்லிம் said...

மாசிலா உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

அறியாத ஏழைப் பெண்களே விபச்சாரத்தில் வற்புறுப்புறப்படுகிறார்கள்.