பத்திரிகை அலுவலகம் சூறை
மும்பை : சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை வில்லனாக சித்தரித்த, "அவுட்லுக்' ஆங்கில வார இதழின் மும்பை அலுவலகத்தை, சிவசேனா கட்சியினர் சூறையாடினர்.
"அவுட்லுக்' வார இதழின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. இந்த இதழில், வில்லன்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் அசாருதீன் ஆகியோருடன் சிவசேனா தலைவர் பால் தாக்கரே பெயரும், கேலிச் சித்திரமும் வெளியிடப்பட்டு இருந்தது. ஹிட்லர் போன்ற தோற்றத்தில், பால் தாக்கரே சித்தரிக்கப் பட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள், "அவுட்லுக்' இதழின் அலுவலகத்துக்குள் நேற்று புகுந்தனர். அங்கிருந்த பொருட் களை சூறையாடினர்.
நன்றிங்க, DINAMALAR 15/08/07
அப்ப கருத்துச் சுதந்திரம் காவிகளுக்கு மட்டும்தானா...?
மற்றவர்களுக்கில்லையா...?
4 comments:
இந்த மடையர்கள் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதில் வல்லவர்கள்.
அவர்களுக்கு, பத்திரிகைகாரர்களை முறைத்துக் கொண்டு இனிமேல் எதுவும் புடுங்க முடியாது என்று இந்த முண்டங்களின் சின்ன புத்திக்கு என்றுதான் உறைக்குமோ?
பாவம்! இதுகளுக்கும் மட்டிகளாக இருக்க இந்த சுதந்திர இந்தியாவில் உரிமை உண்டல்லவோ?
பதிவிற்கு நன்றி முஸ்லிம்.
முஸ்லிம் அய்யா,
//அப்ப கருத்துச் சுதந்திரம் காவிகளுக்கு மட்டும்தானா...?
மற்றவர்களுக்கில்லையா...?//
ஒரு பதிவில் படித்த ஞாபகம்..
கருத்துச் சுதந்திரம் என்பது எனக்குப் பிடிச்ச கருத்துகளைச் சொல்ல உனக்கு உள்ள சுதந்திரம்...
அந்தப் பதிவு யாரோடது கேக்குறீங்களா?
அடப்போங்கய்யா..
மாசிலா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அப்புறம் உங்களிடம் ஒரு சந்தேகம், ஒன்றல்ல இரண்டு.
சூன்யமா? சூனியமா?
மட்டின்னா மண்ணுதானே?
தி. ராஸ்கோலு உங்கள் வரவுக்கு நன்றி.
//அந்தப் பதிவு யாரோடதுன்னு கேக்குறீங்களா?//
சும்மா சொல்லுங்க தெரிஞ்சிக்கிலம்லா...
Post a Comment