Saturday, August 04, 2007

கோர்ட் தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டு.



கோர்ட் தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டு : பத்திரிகையாளர்களுக்கு மிரட்டல்

காளையார்கோவில் : சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில், காளையார் கோவில் அருகே சவுமியநாராயணபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. அதை படம் எடுத்த பத்திரிகை போட்டோகிராபர்கள் மிரட்டப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு நிகழ்ச்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தடை விதித்தது. கொல்லங்குடி ஊராட்சி சவுமியநாராயணபுரம் ஆத்தியடி முனீஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு விழா நேற்று நடந்தது. விழாவில் ஜல்லிக்கட்டு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது.

200க்கும் மேற்பட்ட காளைகள் தொழுவத்தில் அடைக்கப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டி, மேப்பலை சேர்ந்த சின்னமெய்யன் காயம் அடைந்தார். அவரை பத்திரிகை போட்டோகிராபர்கள் படம் எடுத்த போது, கிராமத்தினர் சிலர் கேமராவை பிடுங்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படத்தை கேமராவில் இருந்து அழித்தால் தான் இங்கிருந்து போக முடியும் என சிறை வைத்தனர். பிறகு, படத்தை வெளியிடக் கூடாது என சத்தியம் பெற்றுக் கொண்டு அனுப்பி வைத்தனர். ஜல்லிக்கட்டில் பையூர், விஜயமாணிக்கம் கிராமத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டது. பிறகு, இரு தரப்பினரும் சமரசம் அடைந்தனர்.

நன்றிங்க, DINAMALAR 04/08/07

படத்தைப் பார்த்தால் ஜல்லிக்கட்டு மாதிரி தெரியலயே, மாட்டுச் சந்தை மாதிரில்லா இருக்கு!

No comments: