Thursday, August 09, 2007

கணினிப் பைத்தியம்!

கணவரின் கம்ப்யூட்டரின் 'பைத்தியம்'!:
மனமுடைந்த மனைவி தற்கொலை!!

ஆகஸ்ட் 07, 2007

சென்னை: எந்த நேரமும் கம்ப்யூட்டரே கதி என்று கணவர் இருந்ததால், மனமுடைந்த மனைவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி (25) என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

வானிலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறார் ரமேஷ். அவருக்கு வானிலை ஆராய்ச்சி குறித்து ஆர்வம் அதிகமாம். இதுதான் இன்டர்நெட் காலமாச்சே.

இதனால் சதாசர்வ நேரமும் இன்டர்நெட்டில் புகுந்து கால நிலை மாற்றம், வானிலை, தட்பவெப்பம் குறித்த பல தகவல்களைத் தேடிப் பிடித்துப் படிப்பார்.

இந்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகமாகி எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரும், இன்டர்நெட்டுமாக இருக்க ஆரம்பித்துள்ளார். மனைவி, குழந்தைகள் இருப்பதையே மறந்து போனவராக மாறினார் ரமேஷ்.

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந் நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை கணவரும், குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தபோது, புவனேஸ்வரி, சேலையால் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் விழித்தெழுந்த ரமேஷும், குழந்தைகளும் புவனேஸ்வரி தூக்கில் தொங்குவதைப் பார்த்து கதறி அழுதனர். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். புவனேஸ்வரி சாவதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.

அதில், மனக் குழப்பத்துடன் வாழ்ந்து வந்தேன். இந்த மனக் குழப்பத்துடன் என்னால் தொடர்ந்து வாழ முடியாது. பல கஷ்டங்களைப் பட்டு விட்டேன். என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நானாகவே தற்கொலை செய்து கொள்கிறேன். குழந்தைகளைப் பார்த்துக் ெகாள்ளவும் என்று எழுதி வைத்துள்ளார்.

நன்றிங்க thatstamil, 07.08.2007

கணினியில் நேரம் போவது தெரியாமல் அமர்ந்திருக்கும் கணவன்மார்களே பத்திரமய்யா!

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அளவுக்கு மிஞ்சினால்...

கணவன் மனைவியின் உணர்வையும், தாய் அந்தப் பிள்ளைகள் பற்றியும் சற்றுச் சிந்தித்திருக்கலாம்.

முஸ்லிம் said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

மரைக்காயர் said...

அடடா!