Wednesday, August 08, 2007

2. தமிழக இலவச டிவி கள் கேரளாவில் விற்பனை.

2. தமிழக இலவச டிவி கள் கேரளாவில் விற்பனை

கோழிக்கோடு : தமிழகத்தின் இலவச கலர் டிவி கள் கேரளாவில் மும்முரமாக விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழக அரசு இலவசமாக வினியோகித்துள்ள கலர் டிவி கள், கேரளாவில் விற்பனைக்கு வருகின்றன. ஏஜென்டுகள் மூலமாக மிக மலிவான விலைக்கு வாங்கப்படும் இந்த கலர் டிவி கள், கேரளாவில், குமுளி, வண்டிப் பெரியாறு, வெங்கலப்பாறை, வட்டப்பாறை, முண்டியெருமை, பாம்பனாறு, குட்டிக்கானம், கோட்டயம் முதலிய இடங்களில் இருக்கும் கடைகளில் மிகவும் சாதாரணமாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதிப்படி முதல் கட்டமாக மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 25 லட்சம் குடும்பங்களுக்கு டிவி வழங்கப்பட்டது. அடுத்த கட்டமாக நவம்பர் மாதம் மேலும் 30 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

ஏற்கனவே டிவி வைத்திருப்பவர்கள், மின்சார இணைப்பு இல்லாதவர்கள், பணக் கஷ்டத்தில் இருப்பவர்கள் இலவச டிவி யை விற்று விடுகின்றனர். ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை இவற்றை விலைக்கு வாங்கும் ஏஜென்டுகள், கேரளாவுக்கு கொண்டு சென்று, நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரை விலை வைத்து விற்று விடுகின்றனர்.

நன்றிங்க

ஆக, இலவச கலர் டெலிவிஷன் திட்டம் பலபேருக்கு பிழைப்பைக் கொடுக்கிறது என்று சொல்லுங்க!

No comments: