
ரோஜர்ஸ்: அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஜிம் பாப் (42) - மிசெல்லி (41) தம்பதி சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. அது என்ன என்கிறீர்களா?
இவர்களுக்கு 17வது குழந்தை பிறந்துள்ளது. அதைத்தான் மடியில் வைத்துள்ளார் மிசெல்லி. படத்தில் வலமிருந்து மூன்றாவதாக இருப்பவர்தான் இந்த சாதனைக்கு காரணகர்த்தா ஜிம் பாப். மீதி நிற்கும் 16 குழந்தைகளும் இவர்கள் பெற்ற செல்வங்கள்தான்.
இவர்கள் அனைவருக்குமே 'ஜே' என்ற எழுத்தில்தான் பெயர் ஆரம்பமாகிறது. மூத்த குழந்தைக்கு 19 வயதாகிறது. அதில் இருந்து எல்லா வயதிலும் இவர்களுக்கு குழந்தை இருக்கிறது. 17 குழந்தைகளில் 7 பேர் பெண்கள்.
இந்த ஜோடிக்கு கல்யாணமாகி 24 ஆண்டுகள் ஆகிறதாம். முதல் 4 ஆண்டுகளுக்கு குழந்தையே கிடையாது. அதன் பிறகு ஆரம்பித்தது சாகசம்... இப்போது 17 குழந்தைகளை பெற்று விட்டார்கள். மிசெல்லி தன் வாழ்நாளில் 126 மாதங்களை (பத்தரை வருடம்) கர்ப்பிணியாகவே கழித்திருக்கிறார்.
ஜிம் பாப், ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பதால்தான் இத்தனை குழந்தைகளையும் சமாளிக்க முடிகிறதாம். 7 ஆயிரம் சதுர அடியில் உள்ள அவர்கள் வீட்டில், 9 பாத்ரூம் உள்ளது.
ஒவ்வொரு குழந்தையையும் கடவுளின் பரிசாக கருதும் இவர்கள், மேலும் குழந்தைகளை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
******************************
மக்களைப் பெற்ற மகராசிக்கும், மகராசனுக்கும் வாழ்த்துக்கள்!