Wednesday, August 01, 2007

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு: மதானி விடுதலை

புதன், 01 ஆகஸ்ட் 2007

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி விடுதலை செய்யப்பட்டுள்ளார். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா, அவரது மகன் சித்திக் அலி உட்பட 153 பேரை குற்றவாளிகளாக தனி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் முதல் கட்ட தீர்ப்பு, இன்று (1/8/2007) வழங்கப்பட்டது. கோவை தனி நீதிமன்ற நீதிபதி உத்ராபதி தீர்ப்பை அறிவித்தார்.

இந்த வழக்கில், அப்துல் நாசர் மதானி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், ஒன்பது ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின் அவர் விடுதலை செய்யப்பட்டார். இவர் குற்றமற்றவர் என்று கேரள அரசு கடந்த 9 ஆண்டுகளில் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும் கேரள அரசின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

மதானிக்குக் கடும் சர்க்கரை நோய் பாதித்ததால் காலில் கேங்ரீன் எனும் கட்டி வந்திருந்தது. அதற்கான சிகிச்சை பெற பிணையில் வெளியில் வர நீதிமன்றத்தை அவர் தரப்பினர் அணுகியபோது அவர் வெளிவருவதற்குத் தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அல்-உம்மா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ. பாஷா, அவரது மகன் சித்திக் அலி உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிபதி உத்ராபதி அறிவித்தார்.

கேரள அரசு மட்டுமல்லாது பல்வேறு மனித உரிமைக் குழுக்களும் கோவை குண்டுவெடிப்பு தொடர்பான நீதி விசாரணையின் போது மதானியைக் குற்றமற்றவர் என்று வலியுறுத்தி வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

ஒரு நிரபராதி அநியாயமாக ஒன்பது வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்திருப்பது ரொம்ப ஜாஸ்தி தான். கிட்டதட்ட ஆயுள் தண்டனைக்கு நெருக்கமாக சிறை தண்டனையை அனுபவித்து விட்டார் மதானி.

நாம் என்ன குற்றங்கள் செய்தோம்? என்ன குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவிக்கிறோம்? என்பது கூட தெரியாமல் செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் - அனுபவித்த பலரில் மதானியும் ஒருவர்.

அரசு, நீதி, காவல் ஆகிய துறைகளின் பொடு போக்குத் தனத்தால் ஒருவரை குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்ய ஒன்பது ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.

மதானிக்கு, வாழ்க்கையில் இழந்த அந்த ஒன்பது ஆண்டுகள் போனது போனதுதானே!

ஒரு நிரபராதியை ஒன்பது ஆண்டுகள் சிறையிலடைத்துப் பராமறிக்க தேவையான செலவுகள், வழக்குகள் நடந்ததற்கான செலவுகள் மககளின் வரிப்பணத்திலிருந்து எடுத்து வீண் விரயமாக்கப்பட்டிருக்கிறது.

சோம்பேறிகள்!

6 comments:

Unknown said...

அவர் சிறையில் இருந்ததாலேயே வாய்க்கு/கைக்கு வந்த படியெல்லாம் எழுதிய புண்ணியவாண்கள் இப்போது மறுப்பு எழுத போகிறார்களா? அல்லது தாங்கள்தான் கேடிகள்! தீவிரவாதிகள்!! என்பதை யாரிடமும் சொல்லாமல் ஒப்புக் கொள்ள போகிறார்களா?

நண்பன் said...

// ஒரு நிரபராதி அநியாயமாக ஒன்பது வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்திருப்பது ரொம்ப ஜாஸ்தி தான். கிட்டதட்ட ஆயுள் தண்டனைக்கு நெருக்கமாக சிறை தண்டனையை அனுபவித்து விட்டார் மதானி. //

சுல்தான் சொன்னது போல, மதானியை ஒரு தீவிரவாதியாகவும், கெட்டவனாகவும் சித்தரித்துக் காட்டிய பத்திரிக்கைகள், தாங்கள் இது வரையிலும் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை, ஆதாரமற்றவை என மன்னிப்பு கோரப் போவதில்லை.

நிறையப் பேர், எப்பொழுதுமே போலிஸ் என்றதுமே அச்சப்படுவது இதற்குத் தான். இந்த போலிஸினர், கண்காணிப்புக்கு ஆளாகிவிட்டால், பின்னர் தாங்கள் நிரபராதிகள் என நிரூபித்து வெளிவருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். வாழ்க்கையின் மீட்டெடுக்க முடியாத அளவிற்கு காலத்தை இழக்க வேண்டி வரும்.

கல்லூரிக் காலத்தில் ஒரு மாணவன் இது போல் சிக்கி இருந்து, தன் வாழ்வில் ஒரு பத்து வருடங்களை இழந்து விட்டிருந்தானானால், அவன் கதி என்ன என எண்ணிப் பாருங்கள்!!!

இன்றைய மாணவ பருவத்தினர், மிகவும் ஜாக்கிரதையாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். அது போல, தங்களின் அரசியல் போராட்டத்திற்காக, 'தலைவர்கள்' மாணவர்களை தூண்டி விடவும் கூடாது.

சுய உணர்வு உள்ளவனிடம் நியாயம் பேச முடியும். ஒரு பைத்தியக்காரனிடம் உட்கார்ந்து நியாயம் பேசிக் கொண்டிருக்க முடியுமா? இந்தியாவின் காவல்துறை மனநிலை குன்றிய ஒரு துறை. அதனிடமிருந்து விலகி நிற்பதே நலம்.

பிறைநதிபுரத்தான் said...

அப்பாவி மதானியை 'ஒசாமாவாக' சித்தரித்து - சிறையிலடைத்ததில் - மதானியின் அரசியல் பிரவேசத்தால் ஆட்டம் கண்டுபோன சங்பரிவரிலிருந்து - முஸ்லிம் லீக் வரை அனைவருக்கும் பங்கு உண்டு.

கேரள முஸ்லிம்களுக்காக போராடவேண்டிய முஸ்லிம் லீக் - தனது கொள்கையை மறந்து - கீழ்த்தரமான அரசியல் கட்சியாக அவதரம் எடுத்தபோது- கேரள முஸ்லிம்களின் இருப்பை உணர்த்துவாதற்காக அவரால் உருவாக்கப்பட்டது இஸ்லாமிக் சேவக் சங்(ISS).

கேரள கடற்கரையோர பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் தனது 'மத துவேஷ' 'முஸ்லிம் அழிப்பு' சேவைகளை தொடங்கியபோது - அதை எதிர்த்து அவர்கள் பாணியிலேயே 'பதிலடி' கொடுத்தது மதானியின் அமைப்புதான்.

மதானியை போலிஸிலிருந்து விடுவிப்பதற்காக - நீதிமன்ற செலவுக்காக என்றெல்லாம் கூறி சில முஸ்லிம் அமைப்புகள் நிதி வசூல் பண்ணி 'வாயில்' போட்டுக்கொண்டது.

மதானியின் துணைவியர் மிகவும் மன உறுதி மிகவர் - செல்வி செயலலிதா ஆட்சியில், சிறையிலிருந்த துணைவரை பார்ப்பதற்காக சிறைச்சாலைக்கு போனபோதெல்லாம் -நடந்த போலீசாரின் மிரட்டல்-உருட்டலுக்கெல்லாம் பயப்படாமல் எதிர்த்து குரல் கொடுத்தவர்.

மதானியின் விடுதலையை - கேரள முஸ்லிம்களும் அவரது கட்சியினரும் கொண்டாடியிருப்பதிலிருந்தே - அவர் இன்னும் செல்வாக்கு பெற்றவராக இருக்கிறார் என்பதை காட்டுகிறது.

வழக்கம்போல பா.ஜ.க, மதானியின் விடுதலையை எதிர்த்து அப்பீல் பண்ணப்போவதாக கூறி - தனது 'முஸ்லிம் எதிர்ப்பை' காட்டிவிட்டது.

மதானிக்கு மருத்து சிகிச்சை அளிப்பதை எதிர்த்த செல்வி செயலலிதா..மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்த தலைமைசெயளர் ஹோதாவை தண்டித்த - செல்வி செயலலிதா இன்னும் ஏன் தனது 'திருவாயை' பொளந்து - தனது ஒன்றுவிட்ட சகோதரர் 'இராமகோபாலன்' வகையறாக்களுடன் சேர்ந்து 'பொய்-புரட்டு' கதைகளை விட்டு அறிக்கை விடப்போகிறாரோ..தெரியவில்லை...

அவர் மீண்டும் முழுமையான உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்

அஞ்சா நெஞ்சன் மதானிக்கு வாழ்த்துக்கள்..

முஸ்லிம் said...

சுல்தான் உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

//அவர் சிறையில் இருந்ததாலேயே வாய்க்கு/கைக்கு வந்த படியெல்லாம் எழுதிய புண்ணியவாண்கள் இப்போது மறுப்பு எழுத போகிறார்களா? அல்லது தாங்கள்தான் கேடிகள்! தீவிரவாதிகள்!! என்பதை யாரிடமும் சொல்லாமல் ஒப்புக் கொள்ள போகிறார்களா?//

அப்படியான யோக்கியர்கள் இருந்திருந்தால் இந்நேரம் மறுப்பு எழுதியிருப்பார்களே!

முஸ்லிமகள் என்றாலே தீவிரவாத - பயங்கரவாத முத்திரை குத்துவதற்காகவே இவர்கள் அவதாரமெடுத்தவர்கள்.

முஸ்லிம் said...

நண்பன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

//நிறையப் பேர், எப்பொழுதுமே போலிஸ் என்றதுமே அச்சப்படுவது இதற்குத் தான். இந்த போலிஸினர், கண்காணிப்புக்கு ஆளாகிவிட்டால், பின்னர் தாங்கள் நிரபராதிகள் என நிரூபித்து வெளிவருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். வாழ்க்கையின் மீட்டெடுக்க முடியாத அளவிற்கு காலத்தை இழக்க வேண்டி வரும்.//

போலீஸ் என்றால் குற்றம் செய்தவர்கள் பயப்பட வேண்டும். ஆனால் இதற்கு மாறாக போலீஸைக் கண்டால் குற்றமற்றவர்களும் - நல்லவர்களும் பயப்படுவதை நமது நாட்டிலேதான் பார்க்கிறோம். போலீஸின் மீது குண்டர்களுக்கு எவ்வித பயமுமில்லை. காரணம் குண்டர்கள் போலீஸுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.

போலீஸை விட்டு தூரமாக விலகியிருப்பது ஏதாவது கள்ள வழக்குப் போட்டு சிறையிலடைத்து விடுவார்கள் என்ற போலீஸின் அநியாயப் போக்குக்கு நல்லவர்கள் அஞ்சுகின்றனர். ஒரு மாநிலத்திலோர் இயக்கத்தைச் சார்ந்த அரசியல் பலம் பெற்ற மதானியின் கதியே இதுவென்றால் போலீஸில் சிக்கினால் மற்ற பாமரனின் கதி அதோ கதிதான்.
நல்லவர்கள் என்றுமே போலீஸை எதிரிகளாகவேப் பார்த்து வருகின்றனர்.
அதைத் தவிர்க்கத்தானோ, ''போலீஸ் உங்கள் நண்பன்'' என்று போலீஸ் துறை வெறும் வாயளவில் சொல்லிக் கொள்கிறது.

//சுய உணர்வு உள்ளவனிடம் நியாயம் பேச முடியும். ஒரு பைத்தியக்காரனிடம் உட்கார்ந்து நியாயம் பேசிக் கொண்டிருக்க முடியுமா? இந்தியாவின் காவல்துறை மனநிலை குன்றிய ஒரு துறை. அதனிடமிருந்து விலகி நிற்பதே நலம்.//

ஆமாம், வழக்கும் வேண்டாம் வம்பும் வேண்டாம் என போலீஸிடமிருந்து விலகியிருப்பதே நன்று.
 

முஸ்லிம் said...

பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

திமுக, அதிமுக ரெண்டுமே தமிழ்நாட்டில் தெண்டச் சோறுகள்.

//மதானிக்கு மருத்து சிகிச்சை அளிப்பதை எதிர்த்த செல்வி செயலலிதா..மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரை செய்த தலைமைசெயளர் ஹோதாவை தண்டித்த - செல்வி செயலலிதா இன்னும் ஏன் தனது 'திருவாயை' பொளந்து - தனது ஒன்றுவிட்ட சகோதரர் 'இராமகோபாலன்' வகையறாக்களுடன் சேர்ந்து 'பொய்-புரட்டு' கதைகளை விட்டு அறிக்கை விடப்போகிறாரோ..தெரியவில்லை...//

செல்வி ஜெயலலிதா,

''பெண்ணென்றும் பாராமல் எல்லோரும் என் மீது பழி சொல்வார்'' முகாரி பாடிக்கொண்டிருக்கிறார். அதனால் அடக்கி வாசியுங்கள்.