Wednesday, August 22, 2007

ஜமாத் தலைவர் மலேசியாவில் கைது?

தவ்ஹீத் ஜமாத் தலைவர் மலேசியாவில் கைது?:
ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம்!


ஆகஸ்ட் 22, 2007

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியாவில் கைது செய்யப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியா சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு பொதுக் கூட்டம் எதிலும் பேசக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து சுற்றுலா விசாவில் அவர் மலேசியா சென்றார்.

இந் நிலையில் கோலாலம்பூரில் நடந்த ஒரு இஸ்லாமிய அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் ஜெய்னுலாப்தீன். அவரது பேச்சு அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையடுத்து ஜெய்னுலாப்தீனை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். உடனடியாக ஜெய்னுலாப்தீனை நாடு கடத்துமாறு மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்தத் தகவல் நேற்று நள்ளிரவில் சென்னையில் பரவியது. இதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஏராளமானோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.

போலீஸார் விரைந்து வந்து அவர்களை அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இன்று காலையும் ஜமாத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று மலேசிய துணைத் தூதரகம் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே ஒருமுறை இலங்கை சென்றபோதும் ஜெய்னுலாப்தீன் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

பொதுவானவை.

5 comments:

சுல்தான் said...

ஒரு நாட்டுக்குப் போனால் அந்த நாட்டு சட்டத்தை மதிக்கணும் என்று ஊருக்கு சொல்லித் தருபவர்கள் தனக்கென்று வரும்போது அதை மறந்து விடுவதேனோ?

தடையை உடைத்து பேசி விட்டு வந்தோம் என்று பத்திரிக்கையில் போட்டுக்கொள்ள..... பின் வேறெதற்கு?

இப்போது அவர் ஆதரவாளர்கள் போராட்டம்
"தடை எனத் தெரிந்த பிறகாவது போகாமல் இருந்திருக்கலாமே", "சரி போனீர்கள் பேசாமல் இருந்திருக்கலாமே" என்று யாராவது கேட்பார்களா?.
ஐயோ பாவம் தனி மனித..........

அல்லாஹ்தான் நம் எல்லோருக்கும் நல்லறிவைத் தர வேண்டும்.

மல்லிகை மணம் said...

சுல்தான் சொல்வது போல தான் சொன்னதை ஞாபகமாக மறந்துவிடுகிற ஜமாத் தலைவர் ஒரு புறம்...என்றால்

இன்னொருபுறம் வரும் நினைப்போ..

வேறு மதத்து குழுமத்தலைவரை இதே மலேசியா இதே காரணத்துக்காக கைது செய்திருந்தால்.. எல்லா ஊடகங்களும் மறக்காமல் போட்டி போட்டுக்கொண்டு மதப்பிரச்னையாக்கி குளிர் காய்வார்களே.. என்பதும் தான்..

புதுச்சுவடி said...

தலைவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி த.த.ஜ.வினர் சென்னை மலேஷியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடாது மழை பெய்த போதிலும் விடாது ஆர்ப்பாட்டம் நடத்தி, நடுச் சாலையில் தொழுகை நடத்தினர். திரளாகக் கூடிய ஆண்களும் பெண்களும் ஒருவரோடொருவர் கலந்து, பொ.செ.அலாவுத்தீன், மலேஷிய அரசைச் "சிந்தனையற்ற , கேடுகெட்ட" என்றெல்லாம் புகழ்ந்து பேசிய வீர உரயை(?)க் கேட்டு "அல்லாஹு அக்பர்" முழங்கினர். பின்னர் தலைவர் விமானம் ஏறிய தகவல் உறுதி செய்யப் பட்டதால் கலைந்து செல்வதாக அறிவித்துவிட்டுப் புறப்பட்டனர்.

இது த.த.ஜ சொந்தச் செலவில் ஒளி பரப்பிய தொலைக் காட்சி நிகழ்ச்சியில் கண்டு நொந்தது.

நோவிற்கு ஏது யாது?

தர்காக்களில் அந்நிய ஆடவரும் பெண்டிரும் ஒருவரோடொருவர் கலந்து, நெருங்கிப் புகுந்து புறப்பட்டு வருவதால் அங்கு தப்பு நிகழ வாய்ப்புண்டு.. ஆணும் பெண்ணும் இப்படிக் கலப்பது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு மாற்றமானது என்றெல்லாம் ஊருக்குச் சொன்னவர்கள் ,...

பேருந்தில் அடுத்த இருக்கையில் பெண்ணொருத்தி அமர்ந்ததற்காகத் தம் இயக்கப் பொதுச் செயலாளரையே பதவி நீக்கிப் பின்னர் மீண்டும் சேர்த்ததைப் போல் இதற்கும் புது விளக்கம் தரலாம்.


காலம்தான் இதற்கு விடை தரும்; காத்திருப்போம்..

koothanalluran said...

துபாயிலும் இதே கதைதான். எங்கேயும் பேசக்கூடாது என்ற நிபந்தனையில் வந்து சும்மா சுற்றி பார்த்து விட்டு கிளம்ம்பி விட்டார்.

பிறைநதிபுரத்தான் said...

பி.ஜெ. அண்ணன் 'ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபி போதம் இருக்கையில் நமக்கென்ன கவலை' என்று தேணாவெட்டாக எண்ணி - மலேசிய அரசின் சட்டதிட்டங்களை மதிக்காது - சுற்றுலா அனுமதியில் சென்று வரம்பு மீறி செயல்பட்டதற்காக கிடைத்த தண்டனையை வரவேற்போம்.

விடுதலையாகி வந்து சென்னை விமான நிலையத்தில் பி.ஜெ மற்றும் பாக்கர் ஆற்றிய உரையை கேட்டு 'அல்லாஹ் அக்பர்' என்று கூட்டம் போட்ட கூச்சலை கேட்டு நொந்துபோனேன். அல்லாஹ் அக்பரை த.த.ஜ.வினர் அரசியல்வாதிகள் போடும் 'வாழ்க' 'ஒழிக' - கோசங்களுக்கு இணையாக்கிவிட்டார்கள்.

அவரது கட்சியினரால், மார்க்க நூல்களை கரைத்துக்குடித்தவராக கருதப்படும் பி.ஜெயின் கைதை தொடர்ந்தாவது..அவரை பின்பற்றுபவர்கள் கொஞ்சம் சிந்தித்து செயல்படட்டும்...

பி.ஜெ & கோஒ விற்கு வல்ல இறைவன் நல்லறிவை தரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.