Sunday, August 05, 2007

வி.ஐ.பி. போல அனீபை சித்தரிப்பதா?

வி.ஐ.பி., போல அனீபை சித்தரிப்பதா? காங்கிரஸ் மீது ஆர்.எஸ்.எஸ்., பாய்ச்சல்

புதுடில்லி :பெங்களூரு டாக்டர் முகமது அனீபுக்கு கர்நாடக அரசு ஆதரவு தெரிவித்ததை பா.ஜ., வரவேற்றுள்ள நிலையில், அனீபின் விடுதலை குறித்து ஆர்.எஸ்.எஸ்., பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரிட்டன் விமான நிலையத்தை, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஜீப் மோதி பயங்கரவாதிகள் தாக்க முயன்றனர். ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வந்த டாக்டர் முகமது அனீபுக்கு இச்சம்பவத்தில் தொடர்புள்ளது என்று கூறி, ஆஸ்திரேலிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். ஆனால், அனீப் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாததால் அவர் விடுவிக்கப்பட்டார். மீண்டும் ஆஸ்திரேலியாவில் தங்கி பணியாற்ற அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, பெங்களூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய அவருக்கு அரசு வேலை தருவதாக, கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி அளித்துள்ளார்.

இதனை கூட்டணி கட்சியான பா.ஜ., வரவேற்றுள்ளது. இருப்பினும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ்., வெளியிடும் ஆர்கனைசர் பத்திரிகையில் வெளியான செய்திக்குறிப்பின் விவரம்:அனீப் நாடு கடத்தப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி, அவருடைய விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் உளவுத்துறையினர் கண்டுபிடித்த தகவல்படி, பிரிட்டனில் நடந்த பயங்கரவாத செயலில் அனீபுக்கு தொடர்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத சதியில் அவர் நேரடியாக ஈடுபடவில்லை.

இதனால் தான், ஆஸ்திரேலிய எதிர்க்கட்சிகள் மற்றும் இந்திய அரசு அளித்த நெருக்கடிகளால் அனீபை ஆஸ்திரேலிய அரசு அவரை விடுவித்து விட்டது. தற்போது அனீபை ஒரு பிரபல வி.ஐ.பி., போல காங்கிரஸ் மாற்றிவிட்டது. தினமும் அவர் பேட்டி அளித்து கொண்டிருக்கிறார். தேசிய ஊடகங்கள் பலவும் இந்த பேட்டிகளை மிகவும் பொறுப்புடன் வெளியிட்டு வருகின்றன.இவ்வாறு ஆர்.எஸ்.எஸ்., செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றிங்க, dinamalar 05/08/2007

டாக்டர் முஹம்மது அனீஃப் பற்றிய செய்திகளைப் படிக்க, கேட்க ஆர்.எஸ்.எஸ் ன் காதிலே ஈயத்தைக் காய்ச்சி உத்தின மாதிரி இருக்கோ என்னவோ?

1 comment:

Unknown said...

பின்னே என்ன! ஒரு முஸ்லீமை தீவிரவாதி இல்லையென்று சொன்னால் அவங்களுக்கொல்லாம் பின்னால் மிளகாய் வைத்தது போல் எரியாதா?