Wednesday, August 01, 2007

தென்கொரியர்களை மீட்க அமெரிக்காவிடம் வலியுறுத்தல்

தென்கொரியர்களை மீட்க அமெரிக்காவிடம் வலியுறுத்தல்

காஸ்னி : ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தென்கொரியர்களை மீட்க உதவுமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த 23 பேர் கொண்ட உதவிக்குழு, ஆப்கனுக்கு சென்றிருந்தது. இவர்களில் 16 பேர் பெண்கள். இவர்கள் கடந்த மாதம் 19ம் தேதி காந்தகாரில் இருந்து காபூலுக்கு பஸ்சில் சென்று கொண்டு இருந்த போது, தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அதற்கு முதல்நாள் ஜெர்மனி இன்ஜினியர் ஒருவரையும் பிணைக்கைதியாக தலிபான் பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்தனர்.

இவர்களை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் எட்டு பேரை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். இதற்கு முன் இது போன்று தலிபான் பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டு இருந்தாலும், இம்முறை அவர்களை விடுவிப்பது இல்லை என்று ஆப்கன் அரசு உறுதியாக உள்ளது.

தலிபான் பயங்கரவாதிகளில் விடுவிக்க கோருவோரில் பெரும்பாலானோர் அமெரிக்காவின் முகாம் அமைக்கப்பட்டுள்ளள பக்ரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் அடுத்தடுத்து கெடு விதித்து வருகின்றனர். முதல் இரண்டு கெடுக்கள் முடிந்த போது, தென்கொரியர்கள் இருவர் கொல்லப்பட்டனர். அடுத்து, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் நாட்டு மக்களை மீட்க உதவ வேண்டும் என்று அமெரிக்காவை வலியுறுத்தி உள்ளது தென்கொரியா.

நன்றிங்க

தாலிபான் இயக்கம் பொது மக்களை பிடித்து வைத்துக்கொண்டு,அரசுக்கு கோரிக்கை வைப்பதும், கோரிக்கையை அரசு செவி மடுக்கவில்லையென்றால் பிடித்து வந்த பொதுமக்களைக் கொல்லும் இந்த ஈனச்செயல் முஸ்லிம்கள் வெட்கமும், வேதனையும் படவேண்டிய விஷயம்.

அட சண்டாளர்களா!

2 comments:

Unknown said...

நிராயுதபாணிகளாய் உள்ள குற்றமற்றவர்களை தண்டிப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.
ஈனச்செயல்தான்

முஸ்லிம் said...

சுல்தான் உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

பறிபோன பதவியைக் கைப்பற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விட்டார்கள் தாலிபான்கள்.

(ஈனச்செயல் என்று எழுதாமல் இனச்செயல் என்று தவறாக எழுதி விட்டேன். எழுத்துப் பிழை என்றாலும் பொருள் மாறுகிறது என்பதால் திருத்தி விட்டேன். சுட்டியதற்கு நன்றி)