Friday, August 31, 2007

அவுரங்கசீப்பை கட்டியிழுத்த காவலர்கள் டிஸ்மிஸ்!

அவுரங்கசீப்பை கட்டியிழுத்த காவலர்கள் டிஸ்மிஸ்!

ஆகஸ்ட் 31, 2007

பாகல்பூர்: பீகார் மாநிலம், பாகல்பூரில் செயினை பறிக்க முயன்ற திருடன் அவரங்கசீப்பை மோட்டார் சைக்கிளில் கயிறு கட்டி இழுத்து சென்ற காவலர்கள் இருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgdcZA6_vuZaBAxFsv3Ska4O3IVQ2jKJYSbnOig3Pyoogun7LbYCHFdSPL2Msaqaii7c6eQKwVZyhGhvc67PS_xBZiG3tgFJ48Isn3whlRalj_WWS_Xy81RamZJzqu31BeEcE07/s1600-h/bihar.jpg">

பீகார் மாநிலம், பாகல்பூரில் உள்ள நாத்நகரில் கோவிலுக்கு வந்த பெண் ஒருவரிடம், ஒரு வாலிபர் சங்கிலியை பறிக்க முயன்றார். அந்த பெண் சத்தம் போட்டதை பார்த்த மக்கள் சங்கிலி திருடனை விரட்டி பிடித்தனர்.

திருட முயன்ற அந்த வாலிபர் பெயர் அவுரங்கசீப். பொது மக்களிடம் சிக்கிய அவரை, தெருவில் வருவோர், போவோர் எல்லாம் அடித்து உதைத்தனர்.

அப்போது அங்கு வந்த இரு போலீசார் தங்கள் பங்குக்கு அவுரங்கசீப்பை போட்டு மிதித்ததில் அவர் மயங்கினார்.



எழுந்து நடக்ககூட முடியாத நிலையில் இருந்த அவரை, போலீசார் காலை கயிற்றால் கட்டி மோட்டார் சைக்கிளில் தரதரவென இழுத்துச் சென்றனர்.

இந்த கொடூர தாக்குதல் நாடெங்கும் பயங்கர அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதற்கு மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பீகார் மாநில அரசுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் வந்ததால், அம்மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி, மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்த போலீஸ்காரர்கள் ராமச்சந்திர ராய் மற்றும் சிங் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்களிடம் கடந்த 3 தினங்களாக நடந்த விசாரணையில் அவர்கள் செய்த தவறு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதால் பீகார் மாநில உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட செய்யப்பட்ட இரு போலீஸ்காரர்களையும் டிஸ்மிஸ் செய்ய உத்தரவிட்டனர்.

காட்டுமிராண்டி தனமாக தாக்கப்பட்ட அவுரங்கசீப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. தாக்குதலில் அவருடைய இடுப்பு எலும்புகள் முற்றிலும் நொறுங்கி விட்டதால் இனிமேல் அவரால் எழுந்து நடப்பது கடினம் தான் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றிங்க

//காட்டுமிராண்டி தனமாக தாக்கப்பட்ட அவுரங்கசீப் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. தாக்குதலில் அவருடைய இடுப்பு எலும்புகள் முற்றிலும் நொறுங்கி விட்டதால் இனிமேல் அவரால் எழுந்து நடப்பது கடினம் தான் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.//

இதற்கு அவனை கொன்றே போட்டிருக்கலாம்!

Thursday, August 30, 2007

திருட முயன்றவர் மீது தாக்குதல்!

இந்தியா

10.திருட முயன்றவர் மீது தாக்குதல் சிறுபான்மை கமிஷன் நோட்டீஸ்

புதுடில்லி :பீகார் மாநிலம் பகல்பூரில், திருட முயற்சித்த முஸ்லிம் இளைஞர் மீது பொதுமக்களுடன் சேர்ந்து போலீசாரும் நடத்திய மிருகவெறி தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்கும் படி தேசிய சிறுபான்மையினர் கமிஷன் பீகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பகல்பூரில் நேற்று முன்தினம் முஸ்லிம் இனத்தை சேர்ந்த முகமது அவுரங்கசீப் என்ற இளைஞர், பெண்ணிடம் நகை பறிக்க முயன்றதாக, பொதுமக்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டார். அங்கு வந்த போலீசாரும் அவரை கடுமையாக தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்றனர். இச்செயலில் ஈடுபட்ட துணை சப்இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க, பீகார் மாநில அரசு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ஆலோசிக்க தேசிய சிறுபான்மையினர் கமிஷன் கூட் டம், ஹர்சரண் சிங் தலைமையில் நடந்தது. இதில் கமிஷனின் உறுப்பினர்கள் ஹசன் மற்றும் பங்லீ ஆகியோரும் கலந்து கொண் டனர். பின்னர் ஹர்சரண் சிங் கூறியதாவது:பகல்பூர் சம்பவத்தில் அவுரங்கசீப், பொதுமக்களுடன், போலீசாரும் சேர்ந்து கொண்டு, ஒரு மிருகத்தை போலவும் கொத்தடிமையைப் போலவும் நடத்தப் பட்டுள்ளார். போலீசாரின் நடவடிக்கை மிருகத்தனமாக உள்ளது. இது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்கும் படி பீகார் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.இவ்வாறு ஹர்சரண் சிங் கூறினார்.

நன்றிங்க dinamalar 30/08/07

"முஹம்மத் அவுரங்கசீப்" என்னும் பெயருடைய இந்த நபரை கேவலமாக அடித்துத் துவம்சம் செய்த கொடூரக் காட்சிகளும், போலீஸ் தனது பைக்கில் கட்டி இழுத்துச்சென்ற வீடியோவை மீடியாக்களில் மனதை உறைய வைக்கும் காட்சிகள்.

மேலும் செய்திகள்.
--------------------------------------

இசுலாமியன்

"பாக்கி சட்டைகள்"
பதம் பார்த்து பஞ்சாக்க,
காக்கிச்சட்டையும்
களம் இறங்கியது
இரக்கமும் ஏங்கிட,

பகல் பொழுதில்,
பகல்பூரில்
விரட்டி விரட்டி,
புரட்டி புரட்டி,
போவோர், வருவோர்,
கடை வீதியில்.

வாகனத்தில் அமர்ந்து,
உருட்டியது தெருவெங்கும்,
"காவல் நாய்",
ஆவலுடன்,
"சனாதன சரக்குடன்",
"மிடுக்குடன்",

உடல் தேய்ந்து,
உருக்குலைந்து,
உயிருக்கு போராடும்,
"திருடன்"
-இந்தியன் அல்ல?

நன்றிங்க

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு!

பெண்ணின் சம்மதத்தோடு செக்ஸ் உறவு
வைப்பது கற்பழிப்பு ஆகாது: சுப்ரீம் கோர்ட்


ஆகஸ்ட் 30, 2007

டெல்லி: திருமணம் செய்து கொள்வதாக கூறிய பின்னர் அந்தப் பெண்ணின் சம்மதத்தோடு உடலுறவு வைத்துக் கொண்டு பின்னர் அந்தப் பெண்ணை ஏமாற்றுவோர் மீது கற்பழிப்பு வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப்குமார். இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி, அவருடன் நெருங்கிப் பழகி செக்ஸ் உறவும் வைத்துக் கொண்டு விட்டு பின்னர் கம்பி நீட்டி விட்டார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் பிரதீப் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம், கற்பழிப்பு மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் பிரதீப்குமார் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பிரதீப் சார்பில் பீகார் மாநில உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இங்கும் அவரது தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் பிரதீப்.

பிரதீப்குமார் தாக்கல் செய்த மனுவில், முழு சம்மதத்துடன் தான் அந்த பெண் என்னோடு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார். இதில் நம்பிக்கை மோசடிக்கோ அல்லது கற்பழிப்புக்கோ இடமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கே.ஜெயின், அரிஜித் பசாயத் அடங்கிய பெஞ்ச் அளித்த தீர்ப்பில்,

ஒரு பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஒரு ஆண் உறுதி அளித்து அந்த பெண்ணின் முழு சம்மதத்துடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட பின்பு, அவர் திருமணம் செய்து கொள்ளாமல் கொடுத்த வாக்குறுதியை மீறினாலும் அவர் மீது கற்பழிப்பு குற்றம் சுமத்த முடியாது.

அதே நேரத்தில் பலவந்தப்படுத்தியோ அல்லது பயமுறுத்தியோ அந்த பெண்ணின் சம்மதத்தை பெற்றிருந்தால் அதை கற்பழிப்பாக கருத முடியும்.

மேஜர் ஆன பெண் ஒருவர், திருமண வாக்குறுதியை நம்பி, கர்ப்பமாகும்வரை செக்ஸ் உறவுக்கு சம்மதம் கொடுத்திருந்தால் அதை அஜாக்கிரதையாக கருத வேண்டுமே தவிர, அந்த பெண் உண்மையை தவறாக புரிந்து கொண்டதாக கருத முடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பிரதீப்குமார் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றிங்க

முதலில், நீதிமன்றங்களின் இந்த இரட்டை தீர்ப்பு ஒழிய வேண்டும்!

மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய ஆசிரியை!

மாணவிகளை ஆபாச படம் எடுத்து விபச்சாரத்தில் தள்ளிய ஆசிரியை!

ஆகஸ்ட் 30, 2007

டெல்லி: டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகளை விபச்சாரத்துக்கு தூண்டியதுடன், ஆபாச படம் எடுத்த வக்கிர ஆசிரியை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மத்திய டெல்லியில் உள்ளது சர்வோதயா கன்யா வித்யாலயா. இப்பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியை அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு டியூசன் சொல்லித் தருவதாக வீட்டுக்கு அழைத்து, போதை மருந்து கொடுத்து அவர்களை மயக்கப்படுத்தி, நிர்வாணமாக்கி ஆண்களுடன் பலான போஸ்களில் இருக்க வைத்து வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அதைக் காட்டி மாணவிகளை மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியுள்ளார். அதையும் படம் எடுத்து மிரட்டி மீண்டும் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.

இந்த ஆசிரியையின் செயல்பாடுகளை ரகசியமாக வீடியோ படம் எடுத்த தனியார் சேனல் அதை ஒளிபரப்பியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஆசிப் அலி ரோட்டில் இருக்கும் அப்பள்ளி முன்பாக போராட்டத்தில் குதித்ததுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தினர். ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்த ஒரு வாகனத்தை எரித்தனர்.

நிலைமை மோசமடைவதை பார்த்த போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டீச்சரை கைது செய்தனர். பள்ளியை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நன்றிங்க

அடி சண்டாளி!

Monday, August 27, 2007

குரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்

குரங்கு வடிவத்தில் அருள் பாலித்த அனுமன்: சிறையில் நடிகர் சஞ்சய் தத்தின் கடவுள்

பக்தி புனே: புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகர் சஞ்சய் தத், துõங்கப் போகும் முன் "அனுமன் புராணம்' படித்து விட்டுத்தான் துõங்குவார். 101வது முறையாக, "அனுமன் சலிசா' படித்துவிட்டு தூங்கி எழுந்த மறுநாள், சஞ்சய் தத் பார்த்தது, சிறை அறையின் முன் இருந்த ஒரு மரத்தில் இருந்த குரங்கை.

அன்று தான், சுப்ரீம் கோர்ட் அவரை இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்ட செய்தியும் கிடைத்தது. சஞ்சய் தத், புனே எரவாடா சிறையில் அண்டா செல்லில் தான் அடைக்கப் பட்டார். பின்னர், அதற்கு எதிரில் உள்ள சிறை அறையில் அடைக்கப்பட்டார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சக கைதிகளுடன் உரையாட சஞ்சய் தத் விரும்பினாலும், அதிகாரிகள் அதற்கு மறுத்து விட்டனர். அண்டா செல் சிறையறையில் அடைக்கப்பட்டுள்ள யாகூப் மேமனுடன் மட்டும் தான் சஞ்சய் தத்தால் உரையாட முடிந்தது. பாதுகாப்பு தேவைப்படும் கைதி என்பதால், நடிகர் சஞ்சய் தத்துக்கு சிறைக்குள் சுதந்திரமாக நடமாட அதிகாரிகள் தடை விதித்து இருந்தனர். சஞ்சய் தத்தும், அவரது நண்பர் யூசுப் நுல்வாலாவும் சிறை வராந்தாவில் மட்டும் சற்று நேரம் உலாவ அனுமதிக்கப்பட்டனர். சஞ்சய் தத் ஒரு செயின் சுமோக்கர். அவரது உதடுகளில் எப்போதுமே, "மல் பரோ' சிகரெட் புகைந்து கொண்டே இருக்கும்.

ஆனால், சிறையில் இருக்கும் போது அவர் புகைத்தது, இந்தியாவில் தயாரான, "கோல்டு பிளேக்' சிகரெட் தான். அதுவும் குறிப்பிட்ட இடைவெளியில், கட்டுப்பாடுகளுடன் தான் அளிக்கப்பட்டது. சிறைக்கு சென்றதும், பானு என்ற முடி திருத்துனர், சஞ்சய் தத்துக்கு முடி வெட்டினார். ஆனால், அதில் சஞ்சய் தத்துக்கு விருப்பம் இல்லை. சிறையில் இருக்கும் போதே முடி அதிகமாக வளர்ந்த போது, நாளிதழில் வெளியான கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் படம் சஞ்சய் தத்துக்கு பிடித்து போனது. அவரைப் போல தனது முடியை திருத்திக் கொள்ள விருப்பப் பட்டார்.

இதை நண் பர் யூசுப்பிடம் கூறிய போது, "வேண்டாம்; இப்படியே இருக்கட்டும்' என்று கூறினார். ஆனாலும், முடி அதிமாக வளர்ந்து விட்டதால், முடி வெட்டிக்கொள்ள வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் கூறினார் சஞ்சய் தத். இதற்கு முன் வந்த முடி திருத்துனர் பானு வேண்டாம் என்றும், புதிய நபரை வரவழைக்கவும் கேட்டுக் கொண்டார். சிவா என்ற முடி திருத்துனர் வந்தார். சஞ்சய் தத்தின் விருப்பப்படி டேவிட் பெக்காம் ஸ்டைலில் அவரது முடியை திருத்தி அமைத்தார். நடிகர் சஞ்சய் தத், அனுமான் பக்தர். தூங்கப் போவதற்கு முன், "அனுமான் புராணம்' படிப்பது வழக்கம். சிறைக்கு சென்றதில் இருந்து 101வது முறையாக, "அனுமன் புராணம்' படித்து விட்டு தூங்கினார் சஞ்சய் தத்.

மறுநாள் காலை அவர் கண் விழித்ததும், அருகில் உள்ள ஒரு மரத்தில் குரங்கை பார்த்தார். இதை தன் நண்பர் யூசுப்பிடமும் கூறினார். அன்றே அந்த செய்தியும் அவருக்கு கிடைத்தது. சஞ்சய் தத், அவரது நண்பர் யூசுப் உட்பட ஐந்து பேரை இடைக்கால ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தான் அது. நல்ல செய்தி வரும் என்று அதிகாலையிலேயே குரங்கு வடிவில் அனுமன் வந்து காட்சி அளித்ததாக யூசுப்பிடம் கூறி மகிழ்ந்தார் சஞ்சய் தத்.பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் தத்துக்கு, சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் அதே சாப்பாடு தான் வழங்கப்பட்டது.

அரிசி சோறுடன், ஒரு நாளுக்கு 13 சப்பாத்திகள் மட்டுமே வழங்கப்பட்டன. காலையில் மூன்று சப்பாத்திகளும், மதியம் மற்றும் இரவில் தலா ஐந்து சப்பாத்திகளும், "டால்' மற்றும் "முலலி கி பாஜி'யுடன் வழங்கப்பட்டது. பாலிவுட்டில் கோடிக் கணக்கில் சம்பளம் பெறும் நடிகர் சஞ்சய் தத்துக்கு, 23 நாட்களும் சிறையில் மூங்கில் பிணைந்ததற்காக கிடைத்த சம்பளம் ரூ.25.70 மட்டுமே. அந்த சம்பளப் பணத்தையும் பவ்வியமாக வாங்கிக் கொண்டு தான் சிறையில் இருந்து வெளியில் வந்தார் சஞ்சய் தத்.

நன்றிங்க, dinamalar 27/08/07

23 நாட்கள் பாலிவுட்டில் பணியாற்றியிருந்தால் கணிசமாக சில லகரங்களை பெற்றிருப்பார், ஆனால் ஜெயிலில் உழைத்து பெற்ற 25.70 ரூபாயை வாழ்நாளில் அவரால் மறக்கவே முடியாது.

ஐதராபாத்தில் பலி வாங்கிய ரசாயன குண்டு.

இந்தியா

ஐ.எஸ்.ஐ., தலிபான், அல்குவைதா உதவியுடன் செயல்படும் "ஹூஜி'* ஐதராபாத் பயங்கரவாத அமைப்பின் பின்னணி!

ஹர்கத் உல் ஜிகாத் இஸ்லாமி (ஹூஜி) எனும் பயங்கரவாத அமைப்புதான், ஐதராபாத் குண்டு வெடிப்பு சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானுடன் ரஷ்யா போர் புரிந்த நேரத்தில், ரஷ்யாவை எதிர்த்த பயங்கரவாத முஜாகிதீன்களின் முகாம் புனரமைப்புப் பணிகளுக்காக 1980ம் ஆண்டில் துவக்கப்பட்டதுதான் ஹூஜி.ஜமாத் உல் உலமா இ இஸ்லாமி (ஜுல்) மற்றும் தப்லிக் இ ஜமாத் (திஜ்) ஆகிய இரு பாகிஸ்தான் அமைப்புகள்தான், "ஹூஜி'யை நிறுவிய மத அமைப்புகள். அப்போது, மவ்லவி இர்ஷாத் அகமது என்பவர், "ஹூஜி'யின் தலைமைப் பொறுப்புகளை கவனித்து வந்தார். அடிப்படையிலேயே, "ஹூஜி'க்கு பாகிஸ்தான் தொடர்பு இருந்த போதிலும், ஆப்கனில் ரஷ்ய படைகளுக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஹூஜிக்கு தாராளமாக உதவ முன்வந்தது. ஹூஜி அமைப்புக்குத் தேவைப்படும், பயங்கரவாதிகளை தேர்வு செய்யவும், அவர்களுக்கு பயிற்சி அளித்து ஆப்கனுக்கு அனுப்பும் வேலையையும் மனம் உவந்து ஐ.எஸ்.ஐ., செய்தது. இது இப்போதும் தொடர்கிறது.

ஹிஸ்ப் இ இஸ்லாமி யூனஸ் காலிஸ் (ஹெல்கே) ஆப்கன் பயங்கரவாத அமைப்புடன், "ஹூஜி' தொடர்பு வைத்திருந்தது. 1985ம் ஆண்டில் மவ்லவி இர்ஷாத் மறைவுக்குப் பின்னர், "ஹூஜி' மூன்றாக பிரிந்தது. புதிய அமீர் (தலைவர்) காசி சைபுல்லா அக்தர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஹர்கத் உல் முஜாகிதீனை (காஷ்மீரில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு காரணமான அமைப்பு) தலைமை கமாண்டர் பஷல் உர் ரஹ்மான் காலில் துவக்கினார். மவ்லானா மசூத் காஷ்மீரி என்பவர் ஜமாத் உல் முஜாகிதீன் எனும் பிரிவுக்குத் தலைமையேற்றார்.

கடந்த 1991ம் ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்னை அதிகரித்த போது, இந்த மூன்று அமைப்பும் ஒன்றாக வேண்டும் என்று இஸ்லாமிய உலமாக்கள் கருதியதால், ஹர்கத் உல் அன்சார் எனும் புதிய அமைப்பு பாகிஸ்தானில் தோற்றுவிக்கப்பட்டது. வங்கதேசத்துக்கு ஒரு கிளை பயங்கரவாத அமைப்பு தேவைப்பட்ட போது, அதற்கு அல்குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் உதவினார். சவுகத் உஸ்மான் என்ற ஷேக் பாரித் என்பவர் வங்கதேச, "ஹூஜி' பிரிவுக்கு பொறுப்பேற்று பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு காரணமாக அமைந்தார். இன்றும், அங்கு இந்த அமைப்பு பயங்கரவாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ஹூஜி பிரிவுக்கு தலைமையேற்ற மவுலானா மசூத் அசார், போர்ச்சுக்கீசிய பாஸ்போர்ட் உடன், இந்தியா வந்து 1994 பிப்ரவரியில் காஷ்மீர் சென்று சேர்ந்தார். அங்கு, பிப்ரவரி 10ம் தேதி, பிளவுபட்ட மூன்று அமைப்புகளுக்கான ஒரு கூட்டத்தை கூட்டி, காஷ்மீர் பிரிவினையே தனது குறிக்கோளாக அறிவித்தார். இதற்காக அடுத்து செய்ய வேண்டிய விஷயங்களையும் தீர்மானித்தார். இந்திய பாதுகாப்புப் படையினர் இவரை கைது செய்த போதும், 1999ம் ஆண்டில் இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கனில் உள்ள காந்தகாருக்கு கடத்தி சென்று பயணிகளை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக்கினர். பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று தலிபான்கள் கோரிய பயங்கரவாதிகளில் மசூத் அசாரும் ஒருவர். அதன்படியே இந்தியாவும் விடுவித்தது. விடுதலை ஆன மசூத் உடனே, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை (2001 பார்லிமென்ட் தாக்குதலில் தொடர்புடைய அமைப்பு) துவக்கினார். ஹூஜி அமைப்புக்கு முகமது அப்துல் ஷாகித் என்ற பிலால் தலைமையேற்றார். இவர், கடந்த பிப்ரவரியில் டில்லி லாகூர் இடையேயான சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர். காஷ்மீரில் மட்டும் தாக்குதல் நடத்துவதைவிட, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தும் தாக்குதல்கள் தான், தங்கள் மீது கவனம் பெறும் என்ற அடிப்படையில் இந்த பயங்கரவாத அமைப்பினர் தற்போது செயல்பட்டு வருகின்றனர். இதுவே, ஐதராபாத் குண்டு வெடிப்புக்கு காரணம். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச பயங்கரவாத தொடர்பு உள்ளது என்று கூறியிருப்பது சம்பவத்தில், "ஹூஜி' மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளின் பின்னணியை உறுதிப்படுத்துகிறது. கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த அமைப்பு தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்திய அரசு பயங்கரவாத முறியடிப்புக்கு என தனித் துறையை உருவாக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் காட்டுகிறது.

-------------------------------------------------------------

ஐதராபாத்தில் 42 பேரை பலி வாங்கியது பயங்கர ரசாயன குண்டு.

ஐதராபாத்: "ஐதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் "நியோஜெல்90' என்ற ரசாயனத்தை அடிப்படையாக கொண்ட நவீன குண்டுகளை பயங்கரவாதிகள் பயன்படுத்தி உள்ளனர்' என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு படையை சேர்ந்த தலைமை அறிவியல் அதிகாரி டி.சுரேஷ் கூறியதாவது:

ஐதராபாத்தில் மே 18ம் தேதி மசூதியில் நடந்த குண்டு வெடிப்பும், நேற்று முன்தினம் நடந்த இரட்டை குண்டு வெடிப்பும் வெவ்வேறு வகையில் நடத்தப்பட்டுள்ளன. மசூதி குண்டு வெடிப்பில் ஆர்.டி.எக்ஸ்., மற்றும் டி.என்.டி., வெடிமருந்துகளின் கலவை பயன்படுத்தப்பட்டு இருந்து. நேற்று முன்தினம் நடந்த குண்டு வெடிப்பில் அமோனியம் நைட்ரேட் என்ற ரசாயனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மசூதி குண்டு வெடிப்பில், வெடிமருந்து பைப்களில் அடைக்கப் பட்டு இருந்தன.நேற்று முன்தினம் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த பிறகு பல இடங்களில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். மாலாபாடா என்ற இடத்தில் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. அந்த குண்டில் "நியோஜெல்90' என்ற அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. ரசாயனத்துடன் சிறிய இரும்பு குண்டுகள் கலக்கப்பட்டு இருந்தன. அலாரம் கடிகாரம் மற்றும் டெட்டனேட்டர்கள் ஆகியவை ஒரு பேட்டரியுடன் இணைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் "கோகுல் சாட்' என்ற உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர்.

இங்கு ஐஸ் கிரீம் இயந்திரம் மீது, தரையில் இருந்து ஐந்து அடி உயரத்தில் குண்டு மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோல செய்துள்ளனர்.இவ்வாறு சுரேஷ் கூறினார். வெடிகுண்டில் பயன்படுத்தப் பட்ட "நியோஜெல்90' என்ற ரசாயனத்தை நாக்பூரில் உள்ள "அமின் கெமிக்கல்ஸ்' என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதை உள்ளூரிலேயே பயங்கரவாதிகள் வாங்கியுள்ளனர். இரும்பு பெட்டியில் வெடிமருந்தை நிரப்பி, அதை ஒரு பையில் போட்டு மறைத்து வைத்துள்ளனர். பிரின்ஸ் நிறுவனம் தயாரித்த அலாரம் கடிகாரம் குண்டுகளில் இணைக்கப்பட்டுள்ளன. "லும்பினி பார்க்' பகுதிக்கு நேற்று காலை ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் ஆனாம் ராமநாராயணன ரெட்டியும் வந்து இருந்தார். அவர் கூறுகையில்,"சுற்றுலா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை. இது கண்டனத்துக்கு உரியது. பயங்கரவாதத்தை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். எதிர்காலத்தில் "லும்பினி பார்க்' எந்த வகையான பாதுகாப்பு அளிப்பது என்பது குறித்து சுற்றுலாத் துறையும், ஐதராபாத் நகர மேம்பாட்டுத் துறை அதிகாரிகளும் கலந்து ஆலோசித்து முடிவு செய்வர்' என்றார்.

"நியோஜெல்90' தயாரிப்பது எப்படி?:ஐதராபாத்தில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய குண்டு, "நியோஜெல்90' எனும் அமோனியம் நைட்ரேட்டால் ஆன வெடிபொருள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலந்து இந்த வெடிபொருளை தயாரிக்கின்றனர். அமோனியம் நைட்ரேட் குவாரி மற்றும் சுரங்கப் பகுதியில் வெடி பொருளாகப் பயன்படுத்தப்படுவதாலும், டீசல் அல்லது மண்ணெண்ணெய் சாதாரணமாக கிடைக்கக்கூடியது என்பதால், யாரும் சந்தேகப்படாத வகையில் குண்டுகளை தயாரிக்க பயங்கரவாதிகள் இப்போது இவ்வகை குண்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஜெலட்டின் மற்றும் டைனமைட்டை பெற்று குண்டுகள் தயாரிப்பதில் உள்ள சிக்கல் இதில் இல்லை. அமோனியம் நைட்ரேட் உடன் அலுமினிய பவுடர் சேர்த்து அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றனர். அமோனியம் நைட்ரேட் வெடிபொருளின் வெடிக்கும் வேகம் பொதுவாக வினாடிக்கு 10 ஆயிரத்து 700 அடி வேகத்தில் சிதறடிக்கும்.அயர்லாந்தில் செயல்படும் பயங்கரவாதிகள் இந்த வகை வெடிபொருட்களை பயன்படுத்துகின்றனர். 1995ம் ஆண்டில் அமெரிக்காவில் ஒக்லஹாமா வெடிகுண்டு சம்பவத்திலும்கூட இந்த வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது.போரில் பயன்படுத்தப்படும் சில வகை குண்டுகளில் கூட அமோனியம் நைட்ரேட் கலக்கப்படுகிறது. தரைக்கு மேலே வெடித்து தரையில் உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படுத்தக்கூடிய "டெய்சி கட்டர்' குண்டுகளிலும் அமோனியம் நைட்ரேட் பயன்படுகிறது. ஆப்கன் போரின் போது அமெரிக்கா இதைப் பயன்படுத்தியது.

ஒரே குடும்பத்தினர் நான்கு பேர் பலி: ஐதராபாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். ஐதராபாத்தில் ஹூமாயூன் நகரில் உள்ள கோல் கண்டா அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முகமது சலீம்(40); ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி பரீதா நாஸ்(36), மகன்கள் அமர்(9), அலி(6). நேற்று முன்தினம், "கோகுல் சாட்' என்ற உணவகத்தில் குண்டு வெடித்து ஏராளமானவர்கள் கொல்லப் பட்டனர். சம்பவம் நடந்த போது முகமது சலீம் குடும் பத்தினரும் அங்கு சென்றிருந்தனர். அவர்கள் நான்கு பேரும் குண்டு வெடிப்பில் இறந்து விட்டனர். முகமது சலீமின் சகோதரர் சமீர் கூறுகையில், ""குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து விட்டது என்று கேள்விப் பட்டதும் முகமது சலீமை தொடர்பு கொள்ள முயன்றேன், முடியவில்லை. உடனடியாக அங்கு சென்று பார்த்தோம். யாரும் கிடைக் கவில்லை. பின்னர் தேடிப் பார்த்ததில் நான்கு பேரின் உடல்களையும் ஓஸ்மேனியா மருத்துவமனையில் கண்டு எடுத்தோம்,'' என்றார்.

நன்றிங்க, dinamalar 27/08/07

பொதுவானவை.

Sunday, August 26, 2007

தமிழகம் முழுவதும் உஷார் நிலை.

தமிழகம் முழுவதும் உஷார் நிலை
முன்னெச்சரிக்கையாக 700 பேர் கைது


ஆகஸ்ட் 26, 2007

சென்னை: ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வட மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.

இதேபோல கோவையிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர மற்றும் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

மேலும் தமிழத்தின் இதர பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள், ரயில் நிலையங்ள், கோவில்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜாமீனில் வெளியே இருக்கும் குற்றவாளிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றிங்க

பொதுவானவை!

ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு, பயங்கரம்.

ஹைதராபாத்தில் பயங்கரம்: 2 குண்டுவெடிப்புகளில்
47 பேர் பலி - 100 பேர் படுகாயம்


ஆகஸ்ட் 26, 2007

ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேச தலைநகர் ஹைதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த இரட்டை வெடிகுண்டு சம்பவங்களில் 47 பேர் உடல் சிதறி பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சதிச் செயலாக இது கருதப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆந்திரத் தலைநகரில் பெரும் பதட்டம் நிலவுகிறது.



நேற்று இரவு லும்பினி பார்க் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் லேசர் காட்சி நடந்து கொண்டிருந்தது. 500க்கும் மேற்பட்டோர் அதைக் காண கூடியிருந்தனர். அப்போது இரவு 7.40 மணிக்கு முதல் குண்டு வெடித்தது.

இந்த பயங்கர குண்டுவெடிப்பினால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கு விழுந்து கிடந்தன. தரையெல்லாம் ரத்த வெள்ளமாக காணப்பட்டது. இந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் பலியானார்கள்.

2வது குண்டு கோடி என்ற இடத்தில் உள்ள கோகுல்சாட் என்ற பிரபல ஹோட்டலில் வெடித்தது. லும்பினி பார்க்கிலிருந்து இது 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குதான் உயிரிழப்பு அதிகம். 32 பேர் இங்கு மட்டும் உயிரிழந்துள்ளனர்.

லும்பினி பார்க் அருகே தான் ஆந்திர மாநில தலைமைச் செயலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இரு குண்டுவெடிப்புகளிலும் 47 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாவு எண்ணிக்கை 50 இருக்கும் என கூறப்படுகிறது.



குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து விரைவு அதிரடிப்படையினர், விரைந்து வந்து அந்தப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மீட்புப் படையினர் துரித கதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்து துடித்துக் கொண்டிருந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் 35 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி பார்வையிட்டார். முதல்வர் ராஜசேகர் ரெட்டி லும்பினி பார்க் பகுதிக்கு விரைந்து சென்று சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.

குண்டுவெடிப்பு நடந்த இரு இடங்களிலும் துயரக் காட்சிகள் காண்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது. தங்களது உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் குண்டுவெடிப்பில் என்ன ஆனார்கள் என்பதை அறிய அவர்கள் அலறி அடித்தபடி அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தனர்.

படுகாயமடைந்த பலர் வலியால் துடித்தபடி ரத்தம் சிந்தியபடி வேதனையில் முணகியபடி இருந்தனர். அவர்களை போலீஸாரும், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் மீட்டு ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர்.

இறந்தவர்களில் 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து வந்திருந்த மாணவர்கள் சிலரும் பரிதாபமாக பலியாகி விட்டனர்.

2 குண்டுகள் கண்டுபிடித்து செயலிழப்பு:

இந்த நிலையில், வேறு எங்கும் குண்டுள் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, தில்சுக்நகர் பகுதியில் பாலத்தின் கீழ் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு 9.35 மணிக்கு வெடிக்கும் வகையில் டைம் செட் செய்து வைக்கப்பட்டிருந்தது. இந்தக் குண்டை பத்திரமாக மீட்ட பாதுகாப்புப் படையினர் அதை பின்னர் செயலிழக்கச் செய்தனர்.

இந்த குண்டு பிளாஸ்டிக் பையில் வைக்கப்பட்டிருந்தது. செல்போன் மூலம் இதை இயக்கும் வகையில் அந்தக் குண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இதேபோல, தியேட்டர் ஒன்றின் அருகே வைக்கப்பட்டிருந்த இன்னொரு வெடிகுண்டையும் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர்.

வெடிகுண்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து ஹைதரதாபாத்தில் நேற்று இரவு சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. அனைத்து தியேட்டர்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறதா என்று தீவிர சோதனை நடத்தப்பட்டது.

ஐஎஸ்ஐ சதி:

வங்கதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற ஹூஜி ஜிஹாதிஸ் என்ற தீவிரவாத அமைப்பே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் கடந்த மே 18ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் குண்டுவெடிப்பை நிகழ்த்தினர்.

இதுகுறித்து ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் ஜனா ரெட்டி கூறுகையில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயின் சதியாகவே இதை நாங்கள் நினைக்கிறோம்.

குண்டுவெடிப்புச் சம்பவங்களில் பாதுகாப்புத் துறையின் குளறுபடி எதுவும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. அப்படி இருந்திருந்தால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும்.

ஆந்திராவில் எட்டரை கோடி பேர் உள்ளனர். அனைவரையும் உஷார்படுத்துவது என்பது இயலாத காரியம். காயமடைந்துள்ளவர்களுக்கு அரசு சார்பில் நல்ல சிகிச்சை அளிக்கப்படும் என்றார் ஜனா ரெட்டி.

திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிப்பு:

ஹைதராபாத் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து திருப்பதியில் பாதுகாப்பு பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

திருச்சானூர் பத்மாவதி கோவில், ஸ்ரீகாளஹஸ்தி கோவில், கனிபாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர திருப்பதி கோவில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை - கொல்கத்தா பிரிவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு வாகனச் சோதனைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பிரதீபா பாட்டீல், மன்மோகன் சிங் கண்டனம்:

ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவங்களை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், துணை குடியரசுத் தலைவர் முகம்மது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் மாளிகை இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். மத ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் குலைக்க நினைப்போரின் செயல் தான் இது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.

சிவராஜ் பாட்டீல் இன்று ஹைதராபாத் வருகிறார். ஆந்திர அரசுக்கு தீவிரவாதிகளை ஒடுக்கும் செயலில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என உறுதியளித்துள்ளது.

பலியானோருக்கு ரூ.5 லட்சம் பணம், அரசு வேலை:

ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியான ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கு ஆந்திர அரசின் சார்பில் ரூ. 5 லட்சம் நிவாரண நிதியுதவியும், அக்குடும்பத்தில் உள்ள தகுதியான ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும்.

காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரண நிதியாக கொடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இன்று கூட்டிய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

நன்றிங்க

கண்டிக்கத்தக்கது, :(((

Thursday, August 23, 2007

ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியலாம்

ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரியலாம்

மெல்போர்ன், ஆக. 23: டாக்டர் முகமது ஹனீப் ஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பினால் மீண்டும் பதிவு செய்து கொள்ளலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்சன் புதன்கிழமை தெரிவித்தார்.

ஹனீபின் விசா ரத்து செய்யப்பட்டது செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், சுகாதார அமைச்சரின் கருத்து ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிபுரிவதற்கான வாய்ப்பை அதிகரித்திருக்கிறது.

லண்டன் தீவிரவாதச் சதிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி கடந்த மாதம் 2-ம் தேதி டாக்டர் ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோதும், அவரது விசா ரத்து செய்யப்பட்டதால், அவர் 25 நாள் தனிமைச் சிறையில் இருக்க நேர்ந்தது.

அதன்பிறகு, ஹனீப் மீதான குற்றச்சாட்டை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டு, அவரை வலுக்கட்டாயமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

இதற்கிடையே, விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஹனீப் தொடர்ந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ஹனீபின் விசாவை ரத்து செய்த குடியமர்வுத்துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸின் உத்தரவு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், "ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பணிக்குத் திரும்பினால் மகிழ்ச்சியடைவேன். அவரை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்' என அமைச்சர் ஸ்டீபன் ராபர்ட்ஸ்ன் தெரிவித்துள்ளார்.

அடுத்தமாதம் இதற்காக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறையில் ஹனீப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ராபர்ட்ஸன் கூறியுள்ளார்.

விசாரணை விவரம் வெளியீடு:இதற்கிடையே, ஹனீபிடம் ஆஸ்திரேலிய போலீஸôர் நடத்திய விசாரணையின் விவரங்களை அவரது வழக்கறிஞர் பீட்டர் ரூசோ புதன்கிழமை வெளியிட்டார்.

ஹனீப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த விசாரணையில் சில குறிப்பிட்ட தகவல்களை வெளியிட்டுள்ளதாக பீட்டர் ரூசோ கூறினார்.

"தன்மீது ஆஸ்திரேலிய போலீஸôர் சுமத்திய குற்றச்சாட்டுகளும் அதற்கு தான் அளித்த விளக்கங்களும் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும் என ஹனீப் விரும்பினார். அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து நடக்கும் முயற்சிகளை முறியடிப்பதற்கு இது உதவும் என அவர் கருதுகிறார்.

தனது சகோதரருடன் இணைய அரட்டை அறை (சாட் ரூம்) வழியாக பேசியது குறித்து விசாரணை முடிவடையும் நிலையில்தான் ஹனீபிடம் கேட்கப்பட்டுள்ளது.

இணைய அரட்டையில் பேசிய தகவல்களின் மொழி மாற்றத்தை திருத்த முயன்றதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என போலீஸôரே ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்த இணைய அரட்டை ஜூலை 2-ம் தேதி மாலை 4.13 மணிக்குத் தொடங்கியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் ஹனீப் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.

சபீல் அகமதுவிடம் கொடுத்த சிம் கார்டு குறித்து தெரிந்து கொள்வதற்காக லண்டனில் உள்ள துப்பறியும் நிபுணர் டோனி வெப்ஸ்டரிடம் ஹனீப் 3 முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்திருக்கிறார். அவரைத் தொடர்பு கொள்ள முடியாததால் ஜூலை 2-ம் தேதி மாலை 4.32 மணிக்கு சபீலுடன் பேசும்போது இது பற்றிக் கேட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் தன்னுடைய நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்பதால்தான இந்தத் தகவல்களையெல்லாம் போலீஸôரிடம் ஹனீப் கூறியிருக்கிறார். ஆனால் இணைய அரட்டையின் சில தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு போலீஸôர் ஹனீப் மீது குற்றம்சாட்ட முற்பட்டிருக்கின்றனர்.

உண்மையில் விசாரணையில் போலீஸாருக்கு உதவவே ஹனீப் எல்லா நேரத்திலும் முயற்சி செய்திருக்கிறார். இந்த விசாரணைத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதால், ஹனீப் எதையும் மறைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது' என்றார் ரூசோ.

நன்றிங்க

ஆஸ்திரேலியா அரசும், நீதிமன்றமும் எவ்வளவு துரிதமாக செயல்படுகின்றன. நம்மூரிலும் இருக்கே, ம்ஹும்...

Wednesday, August 22, 2007

ஜமாத் தலைவர் மலேசியாவில் கைது?

தவ்ஹீத் ஜமாத் தலைவர் மலேசியாவில் கைது?:
ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம்!


ஆகஸ்ட் 22, 2007

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியாவில் கைது செய்யப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாப்தீன் மலேசியா சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு பொதுக் கூட்டம் எதிலும் பேசக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. இதையடுத்து சுற்றுலா விசாவில் அவர் மலேசியா சென்றார்.

இந் நிலையில் கோலாலம்பூரில் நடந்த ஒரு இஸ்லாமிய அமைப்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் ஜெய்னுலாப்தீன். அவரது பேச்சு அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதையடுத்து ஜெய்னுலாப்தீனை மலேசிய போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். உடனடியாக ஜெய்னுலாப்தீனை நாடு கடத்துமாறு மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

இந்தத் தகவல் நேற்று நள்ளிரவில் சென்னையில் பரவியது. இதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஏராளமானோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய துணைத் தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.

போலீஸார் விரைந்து வந்து அவர்களை அமைதிப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இன்று காலையும் ஜமாத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று மலேசிய துணைத் தூதரகம் முன்பு பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஏற்கனவே ஒருமுறை இலங்கை சென்றபோதும் ஜெய்னுலாப்தீன் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

பொதுவானவை.

சிலிக்கான் சென்னைக்கு வயது 368!

'சிலிக்கான்' சென்னைக்கு வயது 368!
ஆகஸ்ட் 22, 2007

- எம். ஹூஸைன் கனி

பட்டணம் என்று செல்லமாக அழைக்கப்படும், சென்னை, இன்று தனது 368வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.



பழைய கருப்பு - வெள்ளை சினிமா படங்களில் சென்னையைக் காண்பிக்கும்போது சென்டிரல் ரெயில் நிலையத்தையும், அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தையும் காட்டுவார்கள். பிறகு வந்த படங்களில் அண்ணா சமாதியின் அழகுமிகு ஆர்ச் காட்டப்படும் அல்லது கடற்கரை உழைப்பாளர் சிலை காட்டப்படும்.



இன்று எல்.ஐ.சி. கட்டிடத்தை விட உயரமான பெரிய பெரிய கட்டிடங்களையும், கண்களைக் கவரும் வகையிலான கலர் கலர் கம்ப்யூட்டர் நிறுவன வளாகங்களையும், வழுக்கிக் கொண்டு ஓடும் அதி நவீன கார்களையும், வாகன நெரிசல்களையும் கொண்டு, நீண்டு விரிந்து பரந்து போய்க் காணப்படுகிறது சென்னை மாநகரம்.



குதிரை வண்டிகளும், டிராம்களும், கை வண்டி ரிக்ஷாக்களும் ஓடிய அண்ணா சாலையில் இன்று விதவிதமான வெளிநாட்டு சொகுசு கார்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன.



வானளாவிய உயர்ந்த கட்டிடங்களையும், நவீன வசதிகளையும் கொண்டுள்ள சென்னை நகரம் உருவான வரலாறு நெடியது. தென்னிந்தியாவின் முதன்மையான நகராகவும், இந்தியாவின் நான்காவது பெருநகரமாகவும் திகழும் சென்னைக்கு இன்றுடன் 368 வயது ஆகிறது.



எப்படி பிறந்தது சென்னை:

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் ஆகிய இருவரும்தான் சென்னையை உருவாக்கியவர்கள். இப்போதைய சென்னை அந்த காலத்தில் 'சென்னப்பட்டினம்' என்றும், 'மெட்ராஸ்பட்டினம்' என்றும் அழைக்கப்பட்டு வந்தது.



மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், சிறு சிறு குறு நகர்களாகவும் காணப்பட்டது அந்தக்கால சென்னைப்பட்டினம். புதர்கள், காடுகள், மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் பாய்ந்து ஓடின.



ஆங்கிலேயர்கள் வருகை:

சென்னப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுக்கீசியர்களின் வருகைக்குப் பின்னரே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி. 1552-ம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.



சென்னப்பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதை குறிவைத்து இங்கு கால்பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி பிரான்சிஸ் டே, ஆண்ட்ரு கோகன் என்ற 2 வியாபாரிகளை சென்னப்பட்டனத்திற்கு அனுப்பி வைத்தது. சென்னப்பட்டினத்துக்கு வந்த அவர்கள் இருவரும் வணிக மையம் கட்டுவதற்காக இடம் பார்த்தனர்.



ஜார்ஜ் கோட்டை:

அதற்காக பூந்தமல்லி நாயக்கர் மன்னரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை வாங்கினார்கள். அந்த இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் 22.8.1639-ல் கட்டினர். இதுதான் சென்னை உருவாக முதல் அடிக்கல் எனலாம்.



பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறைய பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றிலும் வீடு கட்டி குடியேறினர். அந்த பகுதி வெள்ளை பட்டினம் என்று அழைக்கப்பட்டது. அதற்கு வெளிப்புற பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்பு பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்த பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுண் ஆனது.



கைமாறியது:

செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸ் பட்டனம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டணங்களையும் ஒன்றுசேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸ் பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னப்பட்டினம் என்றும் அழைத்தனர்.




1653-ல் சென்னப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702-ல் முகலாயர்களாலும், 1741-ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1746-ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது.




பெயர் மாற்றம்:

பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்கு போனது. 1758-ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், 2 மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் திரும்பவும் மீட்டனர். அன்றுமுதல் 1947-ம் ஆண்டுவரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.




சென்னை மாகாணம் 1968-ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

அதுபோல, மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997-ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது.

30 ஆயிரம் மக்கள்தொகையுடன் உருவான சென்னை நகரின் மக்கள்தொகை தற்போது 1 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சென்னை நகரின் பரப்பும் விரிவடைந்து கொண்டே போகிறது. இன்னும் கொஞ்ச நாளில் தெற்கே செங்கல்பட்டு வரையிலும், வடக்கே திருவள்ளூர் வரையிலும் சென்னை நகரமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

'மெட்ராஸ் டே':

1639-ம் ஆண்டு உருவான சென்னை நகரின் பிறந்த நாளையொட்டி சென்னை நகரில் பல்வேறு நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றிங்க

சென்னைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Tuesday, August 21, 2007

நள்ளிரவில் கதவைத் தட்டி...

நள்ளிரவில் கதவைத் தட்டி சோறு கேட்கும்
குழந்தை - மதுரையில் புது பீதி!


ஆகஸ்ட் 21, 2007

மதுரை: மதுரையில் நள்ளிரவில் குழந்தை ஒன்று கதவை தட்டி சோறு கேட்பதாக தகவல் வெளியானதை அடுத்து மக்கள் பீதியில் உள்ளனர்.

மதுரை மதிச்சியம், செனாய் நகர், கரும்பாலை, ராமராயர் மண்டகப்படி, வைகை வடகரை ஆகிய வைகை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் நள்ளிரவில் குழந்தை ஒன்று ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி சோறு கேட்பதாக பரபரப்பான தகவல் பரவியுள்ளது.

'சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு வீட்டில் குழந்தைக்கு அம்மை வந்தபோது அந்தக் குழந்தையை அவர்கள் எரித்து விட்டார்களாம். அந்தக் குழந்தைதான் தற்போது நள்ளிரவில் வீடு வீடாக வருவதாக' குழந்தையை 'நேரில் பார்த்தவர்கள்' கூறி வருகின்றனர்.

இந்தப் புதிய வதந்தியால் இப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.

பெரும்பாலான வீடுகளில் விடிய விடிய மின்சார விளக்கு எரிந்த நிலையிலே காணப்படுகின்றது. இரவு சினிமாவுக்கு செல்வதை கூட மக்கள் தவிர்த்து வருகின்றனர். தங்கள் இஷ்ட தெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூசை செய்து ஆறுதல் பெறுகின்றனர். வீடு, கடைகளில் வேப்பிலைகளும் கட்டியுள்ளனர்.

நன்றிங்க, thatstamil 21/08/07

நோ கமெண்ட்

வகுப்பறையில் செக்ஸ் டார்ச்சர் அதிகரிப்பு.

வகுப்பறையில் செக்ஸ் டார்ச்சர் அதிகரிப்பு பள்ளியை விட்டு வெளியேறிய மாணவியால் பரபரப்பு

ஈரோடு: "பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அடிக்கக் கூடாது' என்று முதல்வர் அறிவித்த உத்தரவை, பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் வாசித்த, மாணவியை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக, ஆசிரியர்கள் மீது கடும் புகார் கூறப்பட்டுள்ளது. ஈரோடு, மொடக்குறிச்சி அடுத்த கல்யாணிபுரம் பி.கே.பி., மெட்ரிக்., பள்ளி கணக்கு ஆசிரியர் இளையராஜா. பாடம் நடத்தும் போது மாணவிகளிடம் சில்மிஷம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவிகளின் புகாரை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. தொல்லை தாங்க முடியாமல் இந்தப் பள்ளி பிளஸ் 2 மாணவி ரேவதி, கடந்த 16ம் தேதி பள்ளி விடுதியில் இருந்து தப்பி காட்டுக்குள் ஓடி மூன்று நாட்களுக்குப்பின் உறவினருடன் ஈரோடு வந்தார். போலீசார் மாணவியை மீட்டு, ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொடுமுடி மாஜிஸ்திரேட் முன் மாணவியை ஆஜர்படுத்த ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவிக்கும் பாதுகாப்பு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் ரேவதி கூறியதாவது: நான் சிறந்த சாரணருக்கான விருதை கவர்னரிடம் பெற்றுள்ளேன். பல்வேறு கலைகளில் 117 விருதுகள் எனக்கு கிடைத்துள்ளன. சிறப்பாக படிப்பேன். பள்ளியில் கணக்கு ஆசிரியர் இளையராஜா. அனைத்து மாணவிகளுக்கும் செக்ஸ் தொல்லை கொடுத்தார். மாணவிகள் அருகே உரசிக் கொண்டு நிற்பார். தள்ளி அமர்ந்தால், "ஏன் தள்ளி தள்ளி போற?' எனக் கன்னத்தைக் கிள்ளி இழுப்பார். "பின்னால் தட்டுவது, இடுப்பை கிள்ளுவது,' என தொல்லை கொடுப்பார். இவரது தொல்லையால் பல மாணவிகள் வெளியேறியுள்ளனர். நிர்வாகத்திடம் புகார் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தினமும் பத்திரிகையில் வெளியாகும் ஓரு செய்தியை வழிபாட்டுக் கூட்டத்தின் போது வாசிக்க வேண்டும். "மாணவர்களை அடித்து துன்புறுத்தக் கூடாது என்று முதல்வர் அறிவித்த உத்தரவு செய்தியை நான் வாசித்தேன். இந்த செய்தியை ஏன் வாசித்தாய் என்று மிரட்டினர். அன்றிலிருந்து தொல்லை அதிகமானது. எனது அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். எனது அப்பா 16 ம் தேதி ஏ.ஓ., லட்சுமணனிடம் கடிதத்தை காட்டி பேசினார். அதன் பிறகு லட்சுமணன், இளையராஜா இருவரும் என்னை மிகவும் கேவலமாக பேசி அடித்தனர். இதனால் தான் பள்ளியை விட்டு வெளியேறினேன். இவ்வாறு ரேவதி கூறினார்.

நன்றிங்க, DINAMALAR 21/08/07

வேலியே பயிர்களை மேயப் பார்க்கிறதா...?

Monday, August 20, 2007

முடிந்தால் என்னை கைது செய்யலாம்!

'முடிந்தால் என்னை கைது செய்யலாம்':
தமிழக அரசுக்கு உமா பாரதி சவால்


ஆகஸ்ட் 20, 2007

சென்னை: முடிந்தால் என்னை தமிழக அரசு கைது செய்து பார்க்கட்டும் என முன்னாள் பாஜக மூத்த தலைவரும் பாரதீய ஜன் சக்தி கட்சியின் தலைவருமான உமா பாரதி சவால் விட்டுள்ளார்.

சேது சமுத்திர திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் உமா பாரதி மீது, மதக் கலவரத்தைத் தூண்டிய வகையில் பேசியதாக ராமேஸ்வரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய உமா,

என் மீது ராமேஸ்வரம், திருச்சி காவல் நிலையங்களில் வன்முறையைத் தூண்டியதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்குகளில் நான் முன் ஜாமீன் கோரவில்லை. காரணம், நான் அப்படிப் பேச மாட்டேன் என்று எழுதித் தந்தால் தான் முன் ஜாமீன் தருவார்கள்.

ராமர் சேது பாலத்தைக் காக்க என் வாழ்க்கையை அர்ப்பணிக்க நான் தயாராக இருக்கிறேன். ராமர் பாலத்தை உடைப்பதை எதிர்த்து என் போராட்டம் தொடரும். என்னை தூக்கில் போட்டாலும் கூட பரவாயில்லை. தமிழ்நாட்டில் சிறைகள் குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை.

முடிந்தால் என்னை முதல்வர் கருணாநிதி கைது செய்யட்டும். நான் இந்தத் திட்டதையே எதிர்ப்பதாக சொல்வதாக தவறு. ஆனால், இதனால் மீனவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அரசு தர வேண்டும். இதனால் சுனாமி ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தர வேண்டும். (சுனாமிக்கு எப்படி உத்தரவாதம் தருவது).

விடுதலைப் புலிகள் நடமாட்டம் நிறைந்த இப் பகுதியில் இத் திட்டத்தால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற உறுதிமொழியைத் தர வேண்டும். அதே போல ராமர் பாலத்தை இடிக்க மாட்டோம் என்ற உறுதிமொழியையும் தந்தாக வேண்டும்.

இந்த உத்தரவாதங்கள், உறுதிமொழிகள் தரப்படும் வரை சேது சமுத்திரத் திட்டப் பணிகளை நிறுத்த வேண்டும். நாளை நான் ரமேஸ்வரம் செல்கிறேன். அங்கு போனவுடன் எனது அடுத்தகட்ட திட்டத்தை அறிவிப்பேன்.

மேதா பட்கர், அருந்ததி ராய் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.

ராமர் பாலம் இருந்ததற்கான அறிவியல் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. பிரதமர் அலுவலகத்திலும் அது தொடர்பாக கடிதங்கள் உள்ளன.

இத் திட்டத்தால் நாட்டுக்கு கேடு தான் விளையும், குறிப்பாக தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும். இந்தத் திட்டமே மிக மிக அவசர கோலத்தில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை இடதுசாரிகள் உண்மையிலேயே எதிர்த்தால் மத்திய அரசுக்கு தந்து வரும் ஆதரவை உடனே வாபஸ் பெற வேண்டும் என்றார் உமா பாரதி.

நன்றிங்க

அடேங்கப்பா... ஆட்டம் பலம்மாயிருககே, உறுதிமொழி பட்டியல் ரொம்ப நீளந்தான்.

Sunday, August 19, 2007

பாராளுமன்றத்தில் சச்சார் அறிக்கை!

பாராளுமன்றத்தில் சச்சார் அறிக்கை நடப்பு கூட்டத்தொடரில்!

இந்தியாவில் முஸ்லிம்களின் வாழ்நிலையை விளக்கி வரையப்பட்ட நீதிபதி சச்சார் குழு அறிக்கை நடப்பு கூட்டத்தொடரில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இத்தகவலை மாநிலங்களவை உறுப்பினரும், தேசியவாத காங்கிரஸின் பொதுச்செயலாளருமான தாரிக் அன்வர் மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் இதைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி ஒரு கடிதத்தில் இவ்வாறு உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார். கருத்தரங்கில் கலந்து கொள்ள விழைந்த அமைச்சர் வெள்ளம் காரணமாகத் தன் தொகுதிக்குச் சென்றுவிட்டதாகவும் திரு. அன்வர் கூறினார்.

"முஸ்லிம்கள் சிறப்புச்சலுகை கோரவில்லை, மாறாக உரிய பங்கையே கோருகின்றனர்" என்ற தாரிக் அன்வர், "அனைவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட்டாலேயே வலிமையான இந்தியா என்கிற கனவு சாத்தியப்படும்" என்றார்.

நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியும், தனி இடஒதுக்கீடு இல்லாமல் முஸ்லிம்கள் தமது உரிமைகளை அடைய இயலாது என்று சுட்டி இருப்பதாக தாரிக் அன்வர் எடுத்துரைத்தார்.

மும்பையின் 1992-93 கலவரங்கள் மீதான ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் குறித்து 'நீதி நிலைநாட்டப்படும் என்று உணரப்படும் வரை இதை முன்னெடுத்துச் செல்ல முடியாது' என்றார்.

நன்றிங்க

பொதுவானவை.

ஓ.பி. தலைமையில் சிறப்புப் பூஜை!

மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்க
ஓ.பி. தலைமையில் சிறப்புப் பூஜை!


ஆகஸ்ட் 19, 2007

நெல்லை: திமுக ஆட்சி அகன்று, மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டி தட்சிணாமூர்த்தி கோவிலில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது.

தென்னகத்தின் திரிகூடமலை அடிவாரமான திருநெல்வேலி மாவட்டம் புளியரையில் அருள்மிகு தட்சிணாமூர்த்தி ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் புகழ்பெற்ற குருஸ்தலமாகும்.

கடந்த 8-ந் தேதி சனி பெயர்ச்சி முடிந்துள்ளது. நவம்பர் மாதம் குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக தேரத்ல் பிரிவு செயலாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக பிரமுகர்கள் இன்று அதிகாலை இக்கோவிலுக்கு வந்தனர்.

இக்குழுவில் கே.ஏ.செங்கோட்டையன், தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் கோவிலில் சிறப்புப் பூஜை நடத்தினர்.

இந்த திடீர் சிறப்பு பூஜை குறித்து அதிமுக தரப்பில் கேட்டபோது, குரு பெயர்ச்சியால் தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அகன்று, அ.தி.மு.க ஆட்சி மலர வேண்டும். அதை வேண்டித்தான் இந்த சிறப்பு பூஜை என்றனர்.

நன்றிங்க, THATSTAMIL 19/08/07

பூஜை செய்து விட்டால், ராவோடு ராவாக தி.மு.க ஆட்சி அகன்று அ.தி.மு.க ஆட்சி வந்துருமா என்ன பன்னீர் சார்?

கலாட்டா கல்யாணம்.

காதலித்து ஏமாற்றிய வக்கீலை நள்ளிரவில் நடுரோட்டில் மணம் முடித்தார் இளம்பெண், தேனியில் நடந்த "கலாட்டா கல்யாணம்'

தேனி: திருமணம் செய்வதாக கூறி காதலித்து ஏமாற்றிய வக்கீலை, நள்ளிரவில் நடுரோட்டில் இளம்பெண் திருமணம் செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த மொக்கையாதேவர் மகள் விமலா (27). வருஷநாடு வாலிப்பாறையை சேர்ந்த வக்கீல் கணேசன் (33) என்பவர் 6 மாதங்களுக்கு முன்பு பெண் பார்த்து நிச்சயம் செய்தார். அதன்பிறகு இருவரும் நெருங்கி பழகினார். கணவராக வரப்போகிறவர் என்பதால், இந்த பழக்கத்தை விமலா செல்போன் மற்றும் சி.டி.,யில் பதிவு செய்திருந்தார்.இந்நிலையில் கணேசன் திடீரென விமலா தொடர்பை துண்டித்து விட்டு, வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்தார். இதனை அறிந்த பெண்ணின் உறவினர்கள் கணேசன் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டனர். கணேசன் உடனே சுதாகர் எஸ்.பி.,யிடம் புகார் செய்தார்.

இருவருக்கும் உள்ள தொடர்பு பற்றி செல்போன், சி.டி., ஆதாரத்துடன் பெண் வீட்டாரும் புகார் செய்தனர். தேனி போலீசாரை விசாரிக்குமாறு எஸ்.பி., உத்தரவிட்டார். தேனி ஸ்டேஷனில் இருவருக்கும் இடையே சமரச பேச்சு நடந்தது. முதலில் திருமணத்திற்கு மறுத்த வக்கீல், பின்னர் வெளியில் வைத்து பெரியவர்கள் சம்மதத்துடன் விமலாவை திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டு போலீசாரிடம் எழுதிக் கொடுத்தார்.இதனை பெண் வீட்டார் ஏற்கவில்லை. உடனே திருமணம் முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாலை 5 மணிக்கு தேனி போலீஸ் ஸ்டேஷனில் துவங்கிய பஞ்சாயத்து இரவு 10.30 மணி வரை நீடித்தது. போலீசார் வெளியில் போய் திருமணம் முடித்துக் கொள்ளுங்கள் என அனுப்பி விட்டனர். 10.30க்கு வெளியே வந்த வக்கீல் மீண்டும் திருமணத்திற்கு மறுக்கவே, ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளையை தாக்கினர். இந்த தள்ளுமுள்ளு குழப்பத்தில் மணப்பெண்ணுக்கும் அடி விழுந்தது.

அடிவாங்கிய மாப்பிள்ளை திருமணத்திற்கு சம்மதித்தார். பின்னர் ஸ்டேஷன் வாசலில் நடுரோட்டில் இரண்டு மாலை வாங்கி மாப்பிள்ளைக்கும், மணமகளுக்கும் அணிவித்தனர். நள்ளிரவு 10.45 மணிக்கு தேனி ஸ்டேஷன் வாசலில் நடுரோட்டில் விளக்கு வெளிச்சம் இல்லாத இருட்டு பகுதியில் வக்கீல், காதலித்த பெண்ணுக்கு தாலி கட்டினார்.மணம் முடிந்ததும் மீண்டும் மணப்பெண்ணை அழைத்துச் செல்வதில் பிரச்னை நடந்தது. சிறிது நேரம் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் தகராறு செய்தனர். பின்னர் மாப்பிள்ளை தனது வீட்டிற்கும், பெண் தனது வீட்டிற்கும் புறப்பட்டுச் சென்றனர்.

நன்றிங்க DINAMALAR 19/08/07

வக்கீலு எப்ப வேணாலும் குறுக்காலே திரும்பி சட்டம் பேசுவார்னு தெரிஞ்சி, கேமராவும் சிடியுமா பழக்கத்தை பதிவு செஞ்சிருக்கே, இந்தப் பொண்ணு வெவரமான பொண்ணுதான்.

Saturday, August 18, 2007

பிரதமரின் உருக்கமான பேச்சு.

'சக்தி'யின் ஆதரவு எனக்கு உள்ளது
பிரதமராக நீடிப்பேன் - சொல்கிறார் மன்மோகன்


ஆகஸ்ட் 18, 2007

டெல்லி: உயர்ந்த சக்தியின் ஆதரவு எனக்கு உள்ளது. அந்த சக்தியின் விருப்பப்படி நான் பிரதமராக நீடிப்பேன் என்று கூறியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளரும், சமதாக் கட்சியின் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக பிரதமரை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். தனது பேச்சில், இதுவே சீனாவில் ஒரு பிரதமர் இப்படி நடந்திருந்தால் ஒரு தோட்டாவைக் கொண்டு நெற்றியில் சுட்டுக் கொன்றிருப்பார்கள் என்று கோபமாக கூறியிருந்தார் அவர்.

பெர்னாண்டஸின் பேச்சு நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் எம்.பிக்கள், பெர்னாண்டஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அமளியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று தொலைக்காட்சி ஒன்றுக்கு மன்மோகன் சிங் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் பிரதமராக நீடிப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை. சிலர் எனது சாவைக் கூட விரும்புகிறார்கள்.

ஆனால் உயர்ந்த சக்தியின் ஆதரவு எனக்கு உள்ளது. அந்த சக்தியின் விருப்பப்படி, எதிர்க்கட்சிகள் விரும்பாவிட்டாலும் நான் பிரதமர் பதவியில் நீடிப்பேன். அந்த தைரியமும், நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

எதிர்க்கட்சிகளின் போக்கும், மனோ பாவும் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனது சாவுக்காக யாகம் கூட நடத்துகிறார்கள் என்றார் மன்மோகன் சிங்.

உயர்ந்த சக்தி என்று பிரதமர் குறிப்பிட்டிருப்பது சோனியா காந்தியைத்தான் என்று தெரிகிறது.

இதற்கிடையே, தனது சாவுக்காக எதிர்க்கட்சியினர் யாகம் நடத்தி வருவதாக பிரதமர் கூறியிருப்பது குறித்து பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், இப்படிப்பட்ட பிரதமர் ஒருவரை இந்த நூற்றாண்டிலேயே பார்த்ததில்லை. யாகம் நடத்துவது என்பது ஒருவர் நலமாக இருக்க வேண்டும் என்று வேண்டித்தான். சாக வேண்டும் என்று கோரி யாரும் யாகம் நடத்த மாட்டார்கள்.

யாகம் நடத்த ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை பிரதமர் சொல்ல வேண்டும். அதை விடுத்து இப்படி அவதூறான, பொய்யான புகாரை அவர் சொல்லக் கூடாது என்றார்.

நன்றிங்க

:(((

ஆண்டிப்பட்டியில் மணல் அள்ளுகிறார்கள்.

ஆண்டிப்பட்டியில் மணல் அள்ளும் திமுகவினர்:
போராட்டத்தில் குதிப்பேன்: ஜெ எச்சரிக்கை


ஆகஸ்ட் 18, 2007

சென்னை: மணல் அள்ளுவதை தடுக்காவிட்டால் ஆண்டிப்பட்டி பகுதியில் நானே போராட்டத்தில் குதிப்பேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள ஆற்றுப் படுகையில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெள்ளிமலையில் இருந்து வைகை ஆற்றுக்கு வரும் தண்ணீர், வைகை அணைக்கு சென்று அங்கிருந்து திறந்துவிடப்பட்டு ராமநாதபுரம் வரை பாய்கிறது. இதனால் விவசாயிகளும், பொது மக்களும் பெரிதும் பயனடைகிறார்கள்.

மக்களின் அன்றாடத் தேவைகளை நிவர்த்தி செய்து கொண்டிருக்கும் இந்த நீரை அவர்கள் இழக்கவுள்ளார்கள். தண்ணீர் செல்ல வேண்டிய இடத்தில் திமுகவினர் தொடர்ந்து மணலை அள்ளிய வண்ணம் இருக்கிறார்கள்.

இதனால் தண்ணீர் எந்த நோக்கத்திற்காக திறந்து விடப்படுகிறதோ அது நிறைவேறாமல் போகப் போகிறது.

மணலை அள்ளுவதால் பொது மக்களும், விவசாயிகளும் தான் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

அதிலும் குறிப்பாக, ஆண்டிப்பட்டியில் உள்ள துரைசாமிபுரம் முதல் அய்யனார்புரம் வரையுள்ள ஆற்றுப் படுகைகளில் சுமார் 20 அடி அளவிற்கு மணல் மேடுகளைக் கொண்டிருப்பதனால் தான் வைகை ஆற்றுத் தண்ணீர் அந்த இடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் சீராக செல்ல முடிகிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் சுமார் 80,000 மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு பயனுள்ளதாக இத்தண்ணீர் இருக்கிறது. துரைசாமிபுரம் முதல் அய்யனார்புரம் வரையுள்ள பகுதியில் மணல் அள்ளுவதற்கு இதுவரை எந்த அரசும் அனுமதி கொடுத்தது இல்லை.

ஆனால் திமுக அரசு தான் முதல் முறையாக இதற்கு அனுமதி வழங்கியதன் பேரில், தேனி மாவட்ட கலெக்டரால் மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் திமுகவினரின் சுயலாபத்திற்காக மணல் அள்ளுவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பொதுமக்களின் குடிநீர் பிரச்சனையை பூர்த்தி செய்கிற கடமலைக்குண்டு-மயிலாடும்பாறை பகுதியில் வைகையாற்றில் திமுகவினர் மணல் அள்ளுகிற செயல் மனிதாபிமானமற்ற, ஈவு, இரக்கமற்ற செயலாகும்.

திருட்டுத்தனமாக யார் மணல் எடுத்துச் செல்ல முற்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசுக்கு வரவேண்டிய வருவாயை ஏமாற்றிப் பிழைக்க நினைப்போரை வளர்த்திடக்கூடாது என்றும் கடந்த 02-08-2007 அன்று நடந்த கனிம வளத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் அதற்கு முரணாக திமுக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இத்தகைய செயலை கடுமையாக கண்டிக்கிறேன்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீருக்காகவும், விவசாய பாசனத்திற்கு பயனுள்ளதாகவும் இருக்கிற வைகையாற்றில் உள்ள மணலை எடுப்பதற்கு வழங்கப்பட்டிருக்கும் அரசின் அனுமதியை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இல்லாவிட்டால், அப்பகுதி மக்களை திரட்டி அதிமுக சார்பில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அரசுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நன்றிங்க

ஜெயாக்கா ஆண்டிப்பட்டியில் மட்டும் குதிக்காமல் தமிழ் நாட்டில் மணல் அள்ளுகிற இடத்திலெல்லாம் குதிக்கட்டும் போராட்டத்தில்.

ம்ம்ம்... ஆட்சி கையிலே இல்லேன்னா எல்லாரும் இப்படி மாறிடுவாங்க போலேயே... நெசந்தானா...?

சென்னை, கார் ரிவர்ஸ் எடுப்பதில் தகராறு.

சென்னை-கார் ரிவர்ஸ் எடுப்பதில் தகராறு:
சகோதரர்கள் மீது துப்பாக்கிச் சூடு


ஆகஸ்ட் 18, 2007

சென்னை: செங்குன்றம் அருகே மார்க்கெட் பகுதியில் காரை யார் ரிவர்ஸ் எடுப்பது என்பதில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் சுடப்பட்டார்.

சென்னை அருகே செங்குன்றம் முண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் ராமநாதன். சந்தனக் கட்டைகள் கடத்துவதில் கில்லாடி. அது தொடர்பாக இவர் மீது பல வழக்குகள் உள்ளன.

இவரது தம்பி பாலனும் சந்தன கடத்தல் கடத்தலில் அண்ணனுக்கு உதவியாக இருந்து வருகிறார். மேலும் செம்மரக் கடத்தலிலும் இந்த அண்ணன் தம்பிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அந்தப் பகுதியில் ரெளடித்தனமும் செய்து வந்தனர்.

இந் நிலையில் இன்று காலை பாலன் முண்டியம்மன் மார்க்கெட் பகுதிக்கு காரில் வந்தார். குறுகலான அந்த மார்க்கெட் சாலையில் எதிரே இன்னொரு காரில் தேவநேசன் என்பவரும் அவரது தம்பி செல்வராஜ் என்பவரும் வந்தனர்.

இருவரும் அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். செல்வராஜ் தான் காரை ஓட்டினார்.

எதிரே வந்த பாலனின் காரும் இவர்களது காரும் விலகிச் செல்ல முடியாத அளவுக்கு அந்த சாலை மிகக் குறுகலாக இருந்தது.

இதையடுத்து காரை பின்னால் எடு என பாலன் சொல்ல, உன் காரை பின்னால் எடு என செல்வராஜ் சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பாலன் மிக மோசமாகப் பேசவே, செல்வராஜ் காரை பின்னால் எடுக்க முயன்றார். ஆனாலும் அவரை போக விடாமல் பாலன் தகராறு செய்தார். இதையடுத்து தேவநேசன் தனது தம்பிக்கு ஆதரவாக பேச வந்தார்.

அப்போது தனது காருக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்த பாலன் வானை நோக்கி சுட்டார்.

மார்க்கெட் பகுதியில் துப்பாக்கிச் சூட்டைப் பார்த்த பொது மக்கள் சிதறி ஓடினர்.

இதையடுத்து செல்வராஜையும் தேவநேசனையும் நோக்கி இரண்டு ரவுண்டுகள் சுட்டார் பாலன்.

இதில் தேவநேசனின் தலையை உரசியபடி சென்ற குண்டால் அவர் மயங்கி விழுந்தார். செல்வராஜுக்கு தோள்பட்டையில் குண்டு உரசிச் சென்றது. அவர் வலியில் அலறினார்.

மக்கள் செய்தவறியாது திகைக்க தனது காரில் நிதானமாக ஏறி அமர்ந்து பின் ரிவர்ஸில் போய் அடுத்த சாலை வழியாக தப்பினார் பாலன்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த தேவநேசனையும் செல்வராஜையும் பொது மக்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சம்பவம் குறித்து அறிந்தவுடன் சென்னை வடக்கு இணை கமிஷ்னர் ரவி தலைமையில் போலீசார் அங்கு வந்து பார்வையிட்டனர்.

பாலனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாலனிடம் உள்ள துப்பாக்கிக்கு லைசென்ஸ் உள்ளதாகத் தெரிகிறது.

நன்றிஙக

எதெதுக்கு துப்பாக்கியில சூடுறதுன்னு ஒரு வெவஸ்தை இல்லியா...?

Friday, August 17, 2007

இன்னொரு மீனாட்சிபுரமாக...

மீனாட்சிபுர ஸ்டைலில் மீண்டும் ஒரு பரபரப்புக்குத் தயாராகி வருகிறது நெல்லை. அங்கே திரளான தலித் மக்கள் மதம் மாறப் போகிறார்கள். அவர்கள் தழுவப் போவது புத்த மதத்தை. 'தீண்டாமை' காரணமாக அவர்கள் கிறிஸ்தவ மதத்தை விட்டுக் கிளம்பப் போகிறார்கள் என்பதுதான் இதில் வேதனையான விஷயம்.

_இப்படி புத்த மதத்துக்குப் போக இருப்பவர்கள் அனைவருமே ஆர்.சி. எனப்படும் ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த பறையர் சமூக மக்கள். இவர்களை 'ஏழை கிறிஸ்துவர் விடுதலை இயக்கம்' என்ற அமைப்பு, புத்த மதத்துக்கு மதம் மாற்ற இருப்பதாகக் கேள்விப்பட்டு, எக்கச்சக்க பரபரப்புக்குள்ளானோம்.

இந்த மதமாற்ற நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக, கடந்த 29.7.07 அன்று பாளையங்கோட்டை ஆதிதிராவிடர் நலச்சங்க கட்டடத்தில் புத்தமதம் தொடர்பான ஒரு ரகசிய கருத்தரங்கு நடந்திருக்கிறது. அதில் சுமார் ஐம்பது தலித் கிறிஸ்துவர்கள், குறிப்பாக பறையர் சமூகத்தினர் பங்கேற்றிருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்ற வக்கீலும், புத்த சமூக செயல்பாட்டு பாசறைத் தலைவருமான தமிழினியன் என்பவர், அந்தக் கருத்தரங்கை நடத்தியிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் இந்த மதமாற்றச் செய்தி நெல்லையில் மல்லுக்கட்டத் தொடங்கியிருக்கிறது.

ஆரம்பகட்டமாக ஆர்.சி. கிறிஸ்துவ பறையர் சமூகத்தினர் நூற்றைம்பது பேர் புத்தமதத்துக்கு மாற இருப்பதாகவும், ஏழை கிறிஸ்துவர் விடுதலை இயக்க அமைப்பின் மாநிலத் தலைவர் நரேஷ் அம்பேத்கர் என்பவர்தான் இந்த மதமாற்றத்துக்கு முன்னோடி என்பதும் நமக்குத் தெரியவந்தது. இவரும் பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவர் பாளையங்கோட்டை, தாழையூத்து, தென்கலம், தேவர்குளம், சங்கரன்கோயில், லாலுகாபுரம், வைராவிகுளம் ஆகிய ஊர்களில் தலித் மக்களை புத்த மதத்துக்கு ஈர்த்திருக்கிறார் என்றும் கேள்விப்பட்டோம்.

நரேஷ் அம்பேத்கரை நாம் சந்தித்து, ''ஏன் இந்தத் திடீர் மதமாற்றம்?'' என்றோம்.

''இந்து மதத்தில் தீண்டாமை இருப்பதால்தான் தலித்துகள் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தனர். அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகிவிட்டது. ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவப் பிரிவில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. தலித் கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துவ தேவாலயங்களில் சம உரிமை இல்லை. சில ஆலயங்களில் அவர்கள் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பிலும் கூட சம உரிமையில்லை. கல்லூரிப் பேராசிரியர்கள், பங்குத்தந்தையர், பேராயர்கள் போன்ற உயர் பதவிகள் எங்களுக்கு மறுக்கப்படுகிறது. கடைநிலை ஊழியர்களாக மட்டுமே நாங்கள் உட்கார வைக்கப்படுகிறோம். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிலர் பங்குத்தந்தையாக இருந்தாலும், அவர்கள் கையால் திவ்விய நற்கருணை அப்பம் வாங்கிக் கொள்ள மற்ற சமுதாயத்தினர் மறுக்கிறார்கள்.

கல்லறைத் தோட்டத்தில் பிணத்தைப் புதைப்பதில் கூட தீண்டாமை நிலவுகிறது. தலித் கிறிஸ்துவர்கள் உடல்களை கிழக்குப் பக்கமாகவும், மேல்ஜாதி கிறிஸ்துவர்கள் உடலை மேற்குப் புறமாகவும் தனித்தனி இடங்களில் புதைக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை?

எல்லாவற்றுக்கும் மேலாக பாளையங்கோட்டை புனித சவேரியார் ஆலயம் இருக்கும் இடம் பறையர் சமூகத்துக்குச் சொந்தமானது. அதை மேல்ஜாதி கிறிஸ்துவர்கள் அந்தக் காலத்திலேயே ஏமாற்றி அபகரித்து விட்டார்கள். அந்த நிலத்தை மீட்க பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் எந்தப் புண்ணியமும் இல்லை. அவர்களை எதிர்க்கும் சக்தியும் எங்களுக்கு இல்லை. அதனால்தான் மதம் மாற முடிவு செய்தோம். புத்தமதத்தில் சேர்ந்துவிட்டால் ஜாதிக்கொடுமை இல்லை. தீண்டாமை இல்லை. மதம் மாறும்படி யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை'' என்றார் அவர்.

புத்தமதத்துக்கு மாறப்போகும் தாழையூத்து பறையர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு நரேஷ் அம்பேத்கர் நம்மை அழைத்துச் சென்று அவர்களில் சிலரை நமக்கு அறிமுகப்படுத்தினார். அதில் ஒருவர் ஆல்டன் என்ற இருபத்து மூன்று வயது இளைஞர், குடும்பத்துடன் ஒட்டுமொத்தமாக மதம் மாற இருந்த அவர் நம்மிடம் பேசினார்.

''கிறிஸ்துவ மதத்தில் சம உரிமையில்லை. ஒடுக்கப்படுகிறோம். வைராவிக்குளத்தைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவர் சாமியாருக்குப் படித்தவர். அவரை மேல்ஜாதியினர் கிண்டல், கேலி செய்ததால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார். அதேபோல அருட்சகோதரியாக (கன்னியாஸ்திரியாக) ஆக வேண்டிய ஒருவருக்கும் இதே நிலை ஏற்பட்டு, அவர் மதத்தைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். ஆகவேதான் நான், எனது தாயார் பன்னீர் செல்வம், சகோதரிகள் அருள் ஆஷா போஸ்லின், அருள்திரேசா, அருள் ஆனிசா ஆகியோரோடு புத்த மதத்துக்கு மாறப் போகிறேன்'' என்றார் அவர்.

நரேஷ் அம்பேத்கருக்கு இப்படி மதமாற்ற ஐடியாவைத் தந்தவர் அன்புதாசன் என்று கேள்விப்பட்டோம். அன்புதாசன் அம்பேத்கர் பேரவையின் மாநில பொதுச் செயலாளர். அவருடன் தொலைபேசியில் பேசினோம்.

''சார்! இந்துக்கள் எங்களை விஷம் வைத்துக் கொல்கிறார்கள். கிறிஸ்துவர்கள் இனிப்பில் விஷம் வைத்துக் கொல்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

சென்னை லயோலா கல்லூரி தலித் கிறிஸ்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அங்கு தலித்துகளுக்கு உரிமை மறுக்கப்படுகிறது.

ஆகவே, மதம் மாறுவதுதான் தலித் மக்களுக்குள்ள ஒரே தீர்வு. கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பத்தாயிரம் பேர் புத்தமதத்தைத் தழுவினார்கள். நெல்லையில் இந்த மாதக் கடைசியில் தலித் கிறிஸ்துவர்கள் புத்தமதத்துக்கு மாறப் போகிறார்கள். இதற்காக பிரமாண்ட விழா ஒன்றை நடத்த இருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான தலித் கிறிஸ்துவர்களை மதமாற்றம் செய்வதே எங்கள் இலக்கு'' என்றார்.

வக்கீல் தமிழினியனிடம் பேசியபோது, '' பொதுவாக இந்துக்கள்தான் மதம் மாறுவார்கள். ஆனால், இந்த முறை முதல் தடவையாக கிறிஸ்துவர்கள் மதம் மாறப் போகிறார்கள். கிறிஸ்துவ சபையில் மனுதர்மம்தான் ஆட்சி செய்கிறது. சில ஆலயங்களுக்குள் தலித் கிறிஸ்துவர்கள் போகவே முடியாத சூழ்நிலை இருக்கிறது.

இடஒதுக்கீடு பட்டியலில் தலித் கிறிஸ்துவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கிறார்கள். ஆனால் புத்த மதத்தில் சேர்ந்தால், அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவில் சேர்க்கப்படுவார்கள். முதல்கட்டமாக நூற்றைம்பது பேர் புத்த மதத்தைத் தழுவ இருக்கிறார்கள். நெல்லையிலேயே மதமாற்ற விழாவை நடத்தப் போகிறோம். விரைவில் பத்து ஏக்கர் நிலம் வாங்கி புத்த விகார் ஒன்றையும் கட்டப்போகிறோம்'' என்றார் அவர்.

சரி! இந்த மதமாற்ற முயற்சி பற்றி, ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சபையின் கருத்து என்ன? ஆயர் ஜூடு பால்ராஜ் சார்பாக, ஒரு பங்குத்தந்தை நம்மிடம் 'பெயர் போட வேண்டாம்' என்ற வேண்டுகோளுடன் பேசினார்.

''நீங்கள் சொல்லும் ஏழை கிறிஸ்துவர்கள் விடுதலை இயக்கத்தைப் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். அவர்கள் இதுவரை எங்களிடம் எந்தக் கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. ஆர்.சி. கிறிஸ்துவ சபையில் ஜாதிப் பிரச்னை இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நிச்சயமாக தீண்டாமை இல்லவே இல்லை.

இங்குள்ள பங்குத் தந்தையரில் ஐந்து பேர் தலித் மக்கள். 1990_களுக்குப் பிறகு கிறிஸ்துவ சபையில் தலித்துகளுக்கு அதிகப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்காக தனி அறக்கட்டளை அமைத்திருக்கிறோம்.

வேலைவாய்ப்பில் தலித்துகளுக்கு முப்பது சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால், உடனடியாய் கல்லூரிகளில் அட்மிஷன் வழங்கப்படுகிறது.

புனித சவேரியார் ஆலயம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்பதில் உண்மையில்லை. இந்தப் பிரச்னையைக் கிளப்பிய பலர் அதில் உண்மையில்லை என்று தெரிந்ததும் விட்டுவிட்டார்கள். கல்லறைத் தோட்டத்தில் எல்லோருக்கும் சமஉரிமை வழங்கப்படுகிறது. திருச்சியில் அப்படியொரு பிரச்னை ஏற்பட்டு பிஷப்புகளின் தீவிர முயற்சியால் அது முடிவுக்கு வந்துவிட்டது'' என்றார் அவர்.

எது எப்படியோ? 'பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே' என்று இதுவரை சொல்லிவந்த உதடுகள், இனி புத்தமதத்துக்கு மாறி, 'புத்தம், சரணம், கச்சாமி' என்று சொல்லப் போவதால், நெல்லை கொஞ்சம் பரபரப்பாகி நிமிர்ந்து உட்கார்ந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

நன்றிங்க, குமுதம் ரிப்போர்டர் 19/08/07

பங்குத்தந்தை சொல்வதற்கும், மதம் மாறப்போகிறவர்கள் சொல்லும் காரணங்களுக்கு நேர் முரண்பாடுகள் இருக்கிறதே...?

Thursday, August 16, 2007

3. இஸ்லாமியர்களின் விரோதி!?

கருணாநிதி இஸ்லாமியர்களின் விரோதி-ஜெயலலிதா

ஆகஸ்ட் 16, 2007

சென்னை: ஜமாத் அமைப்புகளிலும், தர்ஹா நிர்வாகத்திலும் வக்பு வாரியத்தைத் தலையிடச் செய்து குழப்பங்களை ஏற்படுத்த திமுக அரசு முயன்று வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அவர்களது ஜமாத் அமைப்புகளிலும், தர்ஹா நிர்வாகத்திலும் வக்பு வாரியத்தைத் தலையிடச் செய்து குழப்பங்களை ஏற்படுத்த திமுக அரசு தூண்டி வருகிறது.

இதனால் இஸ்லாமிய பெருமக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் கருணாநிதி இழந்து வருகிறார்.

வக்பு வாிய நிர்வாகிகள் உள்பட அதிகாரிகள் சென்னை வியாசர்பாடி கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள புனித மகான்களின் கபர்ஸ்தான்களை உடைத்து தரைமட்டமாக்கியுள்ளனர்.

இந்தச் செயல் இஸ்லாமிய மதத்தின் புனிதத்தன்மையை பாழ்படுத்துவதோடு மத நம்பிக்கைக்கு ஊறு விளைவித்து இறை கோட்பாட்டுத் தத்துவத்தையே சேதாரப்படுத்தும் முயற்சியாகும்.

கடந்த 9ம் தேதி திமுகவின் தோழமைக் கட்சியாக செயல்படும் எம்பி காதர் மைதீனின் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக், வாணியம்பாடி எம்எல்ஏ அப்துல் பாஷித் தலைமையில் திமுக அரசின் பாசிச நடவடிக்கைகளை கண்டித்தும், வக்பு வாரிய நிர்வாகத்தைக் கண்டித்தும், மதரீதியிலான தவறான அணுகுமுறைகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் தங்களது கடும் ஆட்சேபத்தை தெரிவிக்கும் விதத்தில் திரண்டு நின்று கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

இஸ்லாமிய நெறிமுறைகளின்படி இம்மையிலும் மறுமையிலும் உன்னதமான ஒன்றாக சுட்டிக்காட்டப்படுவது சொர்க்கம். பெருமானார் நபிகளின் வாக்கின்படி, தாயின் காலடியில் தன் சொர்க்கம் இருக்கிறது என்பதாகும்.

உயரிய நெறிமுறைகள் என்பது சமூகத்தில் ஒருவரின் வாழ்நிலை சார்ந்து மரியாதை வழங்க வேண்டும். அதை மறுப்பதற்கோ மத உரிமைகளை பறிப்பதற்கோ கண்ணியமிக்க கடைமைகளை தட்டிப் பறிப்பதற்கோ யாருக்கும் உரிமையில்லை.

இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு அரசு தொடர்ந்து துவேசத்தில் ஈடுபட்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கருணாநிதியின் அரசியல் சித்து விளையாட்டு என்பது தேர்தல் வந்துவிட்டால் இஸ்லாமிய பெருமக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட பொய்யான பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து தனது கற்பனை சரக்கை காற்றில் பறக்கவிட்ட தேர்தல் வியாபாரத்தை கன ஜோராகா நடத்துவது தான்.

ரமலான் மாதத்தின் நோன்புக் கஞ்சி குடிப்பதோடு கருணாநிதிக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் உள்ள உறவு முடிந்து விடும் என்பதன் அடையாளமாகத் தான் புகழ் பெற்ற தர்ஹாக்களின் நிர்வாகத்திலும் தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.

எனது ஆட்சி காலத்தில் இஸ்லாமிய பெருமக்களின் உணர்வுகளுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு சிறந்த சமூகப் பாதுகாப்பு, சுதந்திரம் ஆகியவற்றுக்கு வழி வகுத்தேன். புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பித்த அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் அந்தப் புனிதப் பயணத்தைத் தொடர மத்திய அரசிடம் போராடி சலுகையை பெற்றுத் தந்தேன்.

சுதந்திரம் பெற்ற பின் தமிழ்நாட்டில் முதன் முதலாக எனது ஆட்சியில் தான் வக்பு வாரியத்துக்கு கட்டடம் கட்டித் தரப்பட்டது. தற்போது அந்தக் கட்டடத்தைத் திறக்காமல் கிடப்பில் போட்டதன் மூலம் அக் கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

எனது ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறார் கருணாநிதி.

இஸ்லாமிய மக்களின் நண்பராக நடித்துக் கொண்டு, அவர்களின் உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொள்வதையே தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டுள்ளார் கருணாநிதி என்பதை அச் சமூக மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளுக்கு மாறாக நடக்கும் வக்பு வாரியத்தின் நடவடிக்கைகளை ஆதரித்து அந்த மக்களுக்கு விரோதமாக செயல்படத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் அரசின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நன்றிங்க, thatstamil 16/08/07

வித்தாரக் கள்ளி விறகு பொறுக்கப் போனா...

தாம் ஆட்சியில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி ஜெயாக்கா முஸ்லிம்களுக்கு எதிரிதான்.

ஆனால் கரு. போல் நண்பனாக நடித்துக் கால் வாரவில்லை. தம்மை வெளிப்படையான வி.-ஹெச்.பி ஆளாகக் காட்டியதால் நமக்குள் பெரிய எதிர்ப்பும், எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.

கரு.வைத் தாக்க ஒரு சாக்காக இதைச் சொல்வதால் ஜெயாக்கா இப்போது வித்தாரக்...

அணு குண்டு சோதனை நடத்தினால்...

அணு குண்டு சோதனை நடத்தினால்
ஒப்பந்தம் ரத்து: அமெரிக்கா


ஆகஸ்ட் 16, 2007

வாஷிங்டன்: இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் அடுத்த நிமிடமே இந்தியாவுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள சிவில் அணு சக்தி ஒப்பந்தம் ரத்தாகி விடும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது.

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. ஆனால் இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கூட்டணி அரசு உறுதியாக உள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு பாதகமான பல அம்சங்கள் இருப்பதாக பரவலாக கருத்து உள்ள நிலையில், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் முறிந்து விடும் என அமெரிக்கா திடீரென மிரட்டியுள்ளது.

இதுகுறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கார்மக் கூறுகையில், இந்தியா அணு குண்டு சோதனை நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் முறிவடைந்து விடும் என ஒப்பந்தத்தில் ஒரு அம்சம் உள்ளது.

அதேபோல அணு சோதனை நடத்தினால் இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிய அனைத்துப் பொருட்களும் திரும்பப் பெறப்படும் எனவும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது என்றார் மெக்கார்மக்.

அமெரிக்காவுடனான 123 அணு சக்தி ஒப்பந்தத்தில், இந்தியாவின் அணு குண்டுச் ேசாதனைக்கு எந்தவிதத் தடையும் இல்லை. அது நமது உரிமை. அதை நாம் அமெரிக்காவிடம் விட்டுக் கொடுக்கவில்லை என்று சமீபத்தில்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார்.

ஆனால் பிரதமரின் பேச்சில் சம்மட்டியால் அடிப்பது போல, அணு குண்டு சோதனை செய்தால், ஒப்பந்தம் ரத்து என பட்டவர்த்தனமாக அமெரிக்கா தெளிவாகத் தெரிவித்து விட்டது.

நன்றிங்க

அணு ஒப்பந்தத்தில் அமெரிக்கா போட்ட குண்டு சூப்பர்!

தென்காசியில் பதட்டம் தணியவில்லை!

தென்காசியில் பதட்டம் தணியவில்லை!
பாதுகாப்பு பணியில் விஜயகுமார்-1500 போலீசார்!





ஆகஸ்ட் 16, 2007

தென்காசி: தென்காசியில் இரு சமூகத்தினர் மோதிக் கொண்டு 6 பேர் பலியானதையடுத்து ஏற்பட்ட பதற்றம் தணிய ஆரம்பித்துள்ளது. அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி விஜயகுமார் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தென்காசி பஜாரில் கடந்த 14ம் தேதி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும், தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் இரு தரப்பிலும் தலா 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இதனால் தென்காசி முழுவதும் கடைகள் அைடக்கப்பட்டன. அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். தென்காசி நிலவரத்தை நேரில் பார்வையிட விஜயகுமார் தென்காசி வந்தார். கொலை நடந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

தென்காசியில் நடந்த சம்பவம் பழிக்கு பழியாக நடந்த கொலைகள்தான். இதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மேலும் இங்கு பதட்டம் ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

எனது தலைமையில் தென் மண்டல ஐ.ஜி. சஞ்சீவ் குமார், நெல்லை சரக டி.ஐ.ஜி கண்ணப்பன், எஸ்.பி ஸ்ரீதர் ஆகியோர் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

இவர்களது கண்காணிப்பின் கீழ் 3 மாவட்ட எஸ்.பிக்கள், 16 டி.எஸ்.பிக்கள், கமாண்டோ படை உள்பட 1,500 போலீசார் குவிக்கப்பட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்னும் 500 போலீசார் தென் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பகையை தீர்க்க 2 பிரிவினரும் மோதினர். இது மத பிரச்சனை அல்ல. இரு மத மக்களும் தங்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளனர். அதனை காவல் துறை ஏற்றுக் கொண்டுள்ளது. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக நடந்ததுதான் இது.

மேலும் அசம்பாவிதங்களை தடுத்திட மேலப்பாளையம், கடையநல்லூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கம்போல் பள்ளிகள், கடைகள் திறக்கப்படும். போக்குவரத்து நடைபெறும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்வோம். பல தகவல்கள் கிடைத்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது.

கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவர். தனிப் படையினர் பல குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டி.ஐ.ஜி, எஸ்.பி ஆகியோர் அமைதி ஏற்பட நடவடிக்கை எடுத்துள்ளனர். வர்த்தகர்களும் கடைகளை திறக்க தொடங்கியுள்ளனர் என்றார்.

நேற்று 2-வது நாளான சுதந்திர தினத்தன்றும் பொது மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. கிராமங்களுக்கு முற்றிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

கொல்லப்பட்ட குமார் பாண்டியனின் சகோதர்கள் சேகர், சுரேஷ், செந்தில் ஆகியோரின் உடல்களை வாங்க அவரது தந்தை மறுத்து விட்டார்.

பஷீர், நாகூர் மீரான், அசன் கனி ஆகிய 3 பேர் உடலையும் த.மு.மு.க மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் தலைமையில் வந்து அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

பின்னர் நேற்று காலை 11 மணியளவில் தென்காசி மாவட்ட மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்த குமார் பாண்டியனின் சகோதரர்கள் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். பின்பு இலஞ்சி ரோட்டில் உள்ள சுடுகாட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், ஆர்.டி.ஓ, தாசில்தார், மற்றும் 300 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். குமார் பாண்டியன் தம்பி சக்தி பாண்டியன் என்பவரை ஒரு போலீஸ் வேனில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் இடுகாட்டுக்கு அழைத்து வந்தனர். இப்பகுதியில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.

அங்கு முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறுகையில்,

தென்காசியில் 6 பேர் கொலையுண்டதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம். முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டிருக்கும். உளவுத்துறை எச்சரித்தும் அரசு மெத்தனமாக இருந்துள்ளது. இது அரசின் தவறு.

நாங்கள் தவறை சுட்டி காட்டி பேசினால் கலவரத்தை துண்டுவதாக கூறி வாய்ப்பூட்டு போட்டுவிடுகிறார்கள். தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு மோசமாக உள்ளத்தையே இச்சம்பவம் காட்டுகிறது. இறந்தவர்களுக்கு அரசிடம் நிதியுதவி கேட்க தயாரில்லை. அவர்களிடம் தேவையான அளவு நிதி உள்ளது என்றார்.

இவ்வழக்கில் அலாவுதீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செந்தில், கபிலன், சக்தி பாண்டியன், சுப்பிரமணியன், சுரேந்தர், முத்து, சேகர், மாலையப்பன், சண்முகம், மற்றொரு சேகர், ஆட்டோ ரமேஷ், பிஸ்தா மணி, செண்பகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் சக்தி பாண்டியன், இந்து முன்னணி தலைவர் ஆவார். வெட்டிக் கொல்லப்பட்ட குமார் பாண்டியனின் அண்ணன் ஆவார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சக்தி பாண்டியனும், பிஸ்தா மணியும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

அதேபோல சக்தி பாண்டியன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஹனிபா, அப்துல்லா, அலாவுதீன், அசன்கனி, அபு, ராஜா முகமது, செய்யதலி, மீரான் முகைதீன், நவாஸ், நாகூர் மீரான், சம்சுதீன், பசுலுதின், ஜின்னா மகன் மற்றும் தொழில் அதிபர் ரகுமான் பாட்ஷா, ஹாஜி முஸ்தபா நிறுவனங்களின் உரிமையாளர் கமால் முகைதீன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சக்தி, பிஸ்தா மணி, அனிபா, அலாவுதீன் ஆகியோர் நேற்றிரவு தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வரும் 30ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடையநல்லூர், செங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் இன்று தென்காசியில் சில கடைகள் திறக்கப்பட்டன. போக்குவரத்தும் சீராகி வருகிறது. இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் இன்று நிதி வழங்க உள்ளார்.

நன்றிங்க

என்னத்தே சொல்ல...?

Wednesday, August 15, 2007

கட்சி மாறினார்கள்.

04. அ.தி.மு.க.,வில் 2,400 பேர் இணைந்தனர்

சென்னை : தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து, பெண்கள் உட்பட இரண்டாயிரத்து 400 பேர், ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர்.

மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவர்கள் அ.தி.மு.க.,வில் இணையும் விழா, நேற்று மாலை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, மாலை 4.40 மணிக்கு கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

அவரை, ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சியின் முன்னணி நிர்வாகிகள் வரவேற்றனர்.திண்டுக்கல், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றியக் குழு உறுப்பினர்கள் நான்கு பேர், நகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆறு பேர், ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றும் 88 பேரும், அக்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் என மொத்தம் 488 பெண்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்து 375 பேர், சம்பந்தப்பட்ட கட்சிகளில் இருந்து விலகி, ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

25 மாவட்டங்களுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள், ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, மகளிர் அணி செயலர் வளர்மதி உடனிருந்தார்.முன்னதாக கட்சியில் சேர வந்தவர்கள் அனைவரும் தனித்தனி குழுவாக பிரித்து உள்ளே அனுப்பப்பட்டனர். அனைவரும், ஜெயலலிதாவுடன், "குரூப் போட்டோ' எடுத்ததால், ஒன்றரை மணி நேரம் வரை நிகழ்ச்சி நடந்தது. மாலை 6.00 மணிக்கு ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

நன்றிங்க

? அப்ப இந்தவாட்டி ஆட்சியை பிடிச்சிருவாங்கன்னா சொல்றீங்க...?

! என்னமோ நான் என்னத்தைக் கண்டேன்!

சுதந்திரதினத்தில் வந்த செய்தி..

பத்திரிகை அலுவலகம் சூறை

மும்பை : சிவசேனா தலைவர் பால் தாக்கரேயை வில்லனாக சித்தரித்த, "அவுட்லுக்' ஆங்கில வார இதழின் மும்பை அலுவலகத்தை, சிவசேனா கட்சியினர் சூறையாடினர்.

"அவுட்லுக்' வார இதழின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. இந்த இதழில், வில்லன்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் அசாருதீன் ஆகியோருடன் சிவசேனா தலைவர் பால் தாக்கரே பெயரும், கேலிச் சித்திரமும் வெளியிடப்பட்டு இருந்தது. ஹிட்லர் போன்ற தோற்றத்தில், பால் தாக்கரே சித்தரிக்கப் பட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிவசேனா தொண்டர்கள், "அவுட்லுக்' இதழின் அலுவலகத்துக்குள் நேற்று புகுந்தனர். அங்கிருந்த பொருட் களை சூறையாடினர்.

நன்றிங்க, DINAMALAR 15/08/07


அப்ப கருத்துச் சுதந்திரம் காவிகளுக்கு மட்டும்தானா...?

மற்றவர்களுக்கில்லையா...?

Tuesday, August 14, 2007

செல்போன், வாக்மேனுடன் பிச்சைக்காரர்!

செல்போன், வாக்மேனுடன் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்

வத்தலகுண்டு, ஆக. 15: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் செல்போன், வாக்மேன் சகிதம் ஒருவர் பிச்சை எடுத்து வருகிறார்.

வத்தலகுண்டு பஸ் நிலையத்தில், சித்தி விநாயகர் கோயில் உள்ளது. அக்கோயில் முன்பு 35 வயது மதிக்கத்தக்க பிச்சைக்காரர், வாக்மேனில் பாட்டு கேட்டவாறும், அவ்வப்போது செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டும் பிச்சை எடுத்து வருகிறார்.

பலர் எப்போதும்போல, அவருக்கு பிச்சை போட்டுச் செல்கின்றனர்.

நன்றிங்க

தொழிற்நுட்பத்தில் வளர்ந்துள்ளதாகச் சொல்லிக்கொண்டே வல்லரசுகளிடம் கையேந்தும் இந்தியாவின் குறியீடா இவர்?

பிச்சைக்காரர் கைத்தொலைபேசியில் 9440000000 தட்டி அழைப்பைச் சொடுக்குகிறார். எதிர்முனையின் அழைப்பு மணி ஒலிக்கிறது. அழைப்பையேற்று எதிர்முனையில் ஹலோ... என்றகிறார் ஒரு அம்மா.

பிச்சைக்காரர்: நாந்தாம்மா பிச்சைக்காரன் பேசுறேன்.

அந்த அம்மா: ஹலோ பிச்சைக்காரன் எப்படியிருக்கே?

பிச்சைக்காரன்: ஒங்க புண்ணியத்திலே நல்லாயிருக்கேம்மா, ஏதாவது பிச்சை போடுங்கம்மா?

அந்த அம்மா: சரி சரி வீட்டு நம்பர் 00/1111 முதலாளித் தெரு என்ற முகவரிக்கு வா!

பிச்சைக்காரர்: சரிங்கம்மா! என்று கூறி இணைப்பைத் துண்டித்துவிட்டு, பிச்சையை கன்ஃபாம் செய்ய கைத் தொலைபேசியில் வேறு எண்களை தட்டுகிறார் மிஸ்டர் பிச்சைக்காரர்.

வாழ்க சுதந்திரம்!

வாழ்த்துக்கள்!!

2. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல்.

தமிழ்நாடு

11. ப்ளுபிலிம் ஒத்திகையில் ஈடுபட்ட விபசார கும்பல் போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்.

கோயம்பேடு : ஜெ.ஜெ., நகரில் குரூப் செக்சில் ஈடுபட்டு கைதானவர்கள் ஆபாச "சிடி' படப்பிடிப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டதும், அவர்களுடன் சிக்கிய புரோக்கர், "தொழிலில்' ஜூனியர் கன்னட பிரசாத் என்று பெயரெடுத்தவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, ஜெ.ஜெ.,நகர் மற்றும் முகப்பேர் பகுதிகளில் அரசு உயர் அதிகாரிகள் மட்டுமின்றி தொழிலதிபர்களும், ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் வசித்து வருகின்றனர். உயர் வருவாய் பிரிவினரான இவர்களில் "சபல' பிரியர்களை குஷிபடுத்துவதற்காக இப்பகுதிகளில் உள்ள சில வீடுகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் விபசார தொழில் களைகட்டியுள்ளது. இது குறித்து போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்ததை தொடர்ந்து திருமங்கலம் உதவி கமிஷனர் அழகு சோலைமலை தலைமையில் ஜெ.ஜெ.,நகர் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர், அப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

கோல்டன் ஜார்ஜ் நகர் சுடுகாடு பகுதியில் குரூப் செக்ஸில் ஈடுபட்டிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புரோக்கர்கள் பஷீர்(22) சயனுதீன்(33), சமீர்(22) ஆகியோரும் அவர்களுடன் விபசார பெண்கள் ஆயிஷா(19), ரஷீயா(18), பூஜா மற்றும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த விபசார புரோக்கர் சாகுல் ஹமீது(44) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் விபசார புரோக்கர் சாகுல் ஹமீது குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட கன்னட பிரசாத்தைப் போலவே சாகுல் ஹமீதும் தமிழகம் முழுவதும் விபசார தொழிலை நடத்தி வந்துள்ளார். இவன் கர்நாடகாவில் உள்ள பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அழகான ஏழை பெண்களை வேலை தருவதாக தமிழகம் அழைத்து வந்து பல இடங்களில் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும் கோல்டன் ஜார்ஜ் நகர் சுடுகாட்டில் கைது செய்யப்பட்டபோது அவர்கள் ஆபாச "சிடி' படப்பிடிப்பிற்கான ஒத்திகையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இரவு நேரங்களில் "தொழில்' நடத்தும் இந்த கும்பல் பகலில் ஆள் நடமாட்டமற்ற சுடுகாட்டுப் பகுதியில் மறைந்து இருப்பார்களாம். ஏற்கனவே, இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் விபசார வழக்குகளும் பதிவாகியுள்ளது. பிற மாநில பெண்களை "சப்ளை' செய்வதில் சாகுல் ஹமீது பிரபலமானவர் என்பதால் அவரை "ஜூனியர் கன்னட பிரசாத்' என்று அவர்களது வட்டாரத்தில் பட்டப் பெயர் வைத்து அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஜெ.ஜெ.,நகர் போலீசார் சாகுல் ஹமீதை, தங்களது பாதுகாப்பில் எடுத்து விசாரித்தால் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது. இதனிடையே அவரை பெயிலில் எடுக்க வக்கீல்கள் மனு செய்துள்ளதாக தெரிகிறது. இவ்வழக்கு அம்பத்துõர் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

நன்றிங்க, DINAMALAR 14/08/07

அட மானங்கெட்ட ஜென்மங்களா...!

Monday, August 13, 2007

தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உதயம்!

தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் உதயம்!

ஆகஸ்ட் 14, 2007

சென்னை: தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அமைத்துள்ள தனி நிறுவனத்துக்கு தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

கேபிள் டிவி ஒளிபரப்பை அரசே மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரி வந்தார். இதையடுத்து கேபிள் டிவி ஒளிபரப்பை அரசே மேற்கொள்வது குறித்து முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி எல்காட் (எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் தமிழ்நாடு) அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் அடிப்படையில் முதல்வரிடம் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டன. இதையடுத்து புதிய கேபிள் டிவி கட்டமைப்பு உருவாக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் சமீபத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது இந்த கட்டமைப்புக்கு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு கம்பி வட தொலைக்காட்சி சேவையை வழங்குவது சம்பந்தமாக 11.8.2007 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் என்ற புதிய அரசு பொதுத்துறை நிறுவனம் தொடங்கப்படும்.

இந்த நிறுவனத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் இருப்பார். இவர் தவிர நான்கு இயக்குநர்களும் இருப்பார்கள். நிதித்துறைச் செயலாளர் ஞானதேசிகன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் சந்திரமெளலி, எல்காட் நிர்வாக இயக்குநர் உமாசங்கர், தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோரே அவர்கள்.

இந்த பொதுத் துறை நிறுவனத்தில் தனியார் நிறுவனம் எதுவும் சேர்க்கப்பட மாட்டாது. முழுக்க முழுக்க அரசு பொதுத் துறை நிறுவனமாகவே இது செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிங்க

அப்படியே டாடா நிறுவனத்துக்கும் டாடா சொல்லிட்டு அந்தத் திட்டத்தை தமிழக அரசே செயல்படுத்தலாமே! என்ன நாஞ்சொல்றது...?

தேர்தலுக்கு ரெடியா...?

ஆட்சியில் தொடர்வதா, இல்லையா?-காங். முடிவு
செய்யட்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ


ஆகஸ்ட் 13, 2007

திருவனந்தபுரம்: அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆட்சியில் தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ் தான் முடிவு செய்ய வேண்டும் என மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக எங்கள் கட்சியின் நிலையை ஏற்கனவே தெரிவித்து விட்டோம். இந்த ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை.

ஆனால் மத்திய அரசு அதையும் மீறி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இதை மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கும்.

மத்திய அரசுக்கு ஆதரவு தரவேண்டும் என்பது எங்கள் கடமை கிடையாது. மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ், மைனாரிட்டி அரசு என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

இந்த அரசு தொடர வேண்டுமா வேண்டாமா என்பதை காங்கிரஸ் தான் தீர்மானிக்க வேண்டும்.

அணு ஒப்பந்தம் குறித்து இன்னும் இரண்டு நாட்களில் மார்க்சிஸ்ட் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கும் என்றார் காரத்.

நன்றிங்க

தேர்தலுக்கு நீங்கள் ரெடியா...?

Saturday, August 11, 2007

2. ஆயுள் கைதிக்கு மாற்று ஆயுள் கைதி!

கால் பந்தாட்டத்தில் ஓர் அணியைச் சேர்ந்த வீரர் ஓய்ந்து போனாலோ, உதை வாங்கிச் சோர்ந்து போனாலோ, அவருக்குப் பதிலாக மாற்று ஆட்டக்காரர் ஒருவரை களமிறக்குவார்கள். அந்த பதிலி ஆட்டக்காரர் பந்தாட்டத்தில் முத்திரை பதிக்க முயல்வார். தேர்தல்களில், கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் மனுதாக்கல் செய்யும்போது, மாற்று வேட்பாளராக ஒருவர் மனுதாக்கல் செய்வார். அதிகாரபூர்வ வேட்பாளர் ஏதோ காரணத்துக்காகப் போட்டியிட முடியாமல் போனால், இந்த மாற்று வேட்பாளர்தான் இறுதி வேட்பாளர்.

மதுரை மத்திய சிறையில், இப்படி ஒரு 'மாற்று ஆட்டக்காரர்' உண்மைக் குற்றவாளிக்குப் பதில் கைதியாக இருக்கிறார் என்ற தகவல் 'மடேர்' என்று நம் மண்டையைத் தாக்க, ஆடி அதிர்ந்து போனோம். ஆயுள் தண்டனை பெற்ற ஒரு கொலைக் குற்றவாளிக்குப் பதிலாக, இவர் சிறையில் இருக்கிறார் என்ற தகவல் நம்மை அதிர வைத்தது.

பாளையங்கோட்டையைச் சேர்ந்த நமக்குத் தெரிந்த ஜெயில் அதிகாரி ஒருவரிடம், இந்த ஆள் மாறாட்ட மோசடி பற்றிக் கேட்டோம். ''அதையேன் கேட்கிறீங்க?'' என்று அலுத்துக் கொண்ட அவர், ''ஆள் மாறாட்டம் செய்து இப்போது மதுரை மத்திய சிறையில் மாட்டிக் கொண்டு தவிக்கும் அந்தக் கைதியின் பெயர் சிவக்குமார்.

ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் சிவகுமாருக்கு, சிறையில் வழங்கும் பெயர் மணி. அந்த சிவகுமாரை நாங்குநேரி கோர்ட்டுக்கு வரும்போது நீங்கள் சந்தியுங்கள். முழு விவரமும் தெரியும்!'' என்றார்.

நாமும் அதன்படியே சிவகுமார் கோர்ட்டுக்கு வந்தபோது அவரைச் சந்தித்தோம். ஆரம்பத்தில் பேசத் தயங்கியவர், அதன்பின் குற்றால மெயின் அருவி போல நம்மிடம் கொட்டத் தொடங்கிவிட்டார்.

ராதாபுரம் தொகுதியிலுள்ள இளைய நயினார் குளம்தான் என் சொந்த ஊர். விஜயாபதி ஸ்ரீ தில்லை காளியம்மன் விசுவாமித்திரர் கோயிலில் இருபத்திரண்டு வருடங்களாக பூசாரியாக இருந்து வருகிறேன். எனக்குத் திருமணமாகி ஏழு வயதில் பையன் இருக்கிறான்.

எனது அப்பாவின் தங்கை மகன் மணி. அவள் என்னை விட வயதில் சின்னவன். ஆனால் வசதியானவன், நாங்குநேரியில் 1998_ம் ஆண்டு வாக்கில் ஒரு கொலை நடந்தது. அதில் ஏழு பேர் கைதானார்கள். அந்த ஏழு பேரில் மணியும் ஒருவன். இன்னும் சொல்லப்போனால், அந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்டவன் மணி தான்.

மணி அப்போதே பெரிய பணக்காரன். மதுபானக்கடை பிறகு பார் எல்லாம். வைத்திருந்தான். வழக்கில் அவனுக்கு ஆயுள்தண்டனை கிடைத்தபோது மணி ஆடிப் போய் விட்டான். ஆறுமாதம் உள்ளே இருந்த பிறகு ஐகோர்ட்டில் அப்பீல் செய்து பெயிலில் வெளியே வந்தார். ஆறுவருடங்களுக்குப் பிறகு அவனது ஆயுள் தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்துவிட்டது. மணி வெலவெலத்துப் போனான்.

இனிமேலும் சிறைக்குப் போனால் இமேஜ் பாழாகி விடும், அதோடு பிஸினஸ§ம் படுத்து விடும். சிறைக் கூண்டுக்குள் போகாமல் தப்பிக்க என்ன வழி என்று மணி சிந்தித்த போது, அவனது நினைவில் வந்த பெயர் என்னுடைய பெயர்.

2005_ம் ஆண்டு நவம்பர் மாதம் 19_ம் தேதி மணியும், என் மாமன் மகன் முத்துக் கிருஷ்ணனும் விஜயாபதிக்கு வந்து என்னைச் சந்தித்தார்கள். 'மணி வெளியில் இருந்தால் பிஸினஸ் செய்வான். நம்ம இரண்டு குடும்பத்துக்கும் அது நல்லது. உன் குடும்பத்துக்கும் அவன் உதவுவான். அதனால் நீ ஒரு தியாகம் செய்யணும்' என்று முத்துக் கிருஷ்ணன் பீடிகை போட்டார்.

'என்ன செய்யணும்? சொல்லுங்க!' என்றேன். 'மணிக்குப் பதிலாக நீ ஜெயிலுக்குப் போகணும். மூன்றே மாதத்தில் உன்னை வெளியில் எடுத்து விடுவோம். மணி அதற்குள் வெளிநாடு போய் விடுவான். நீ மணி இல்லேன்னு சொல்லி நிரூபித்து வெளியே வந்து விடலாம். இரண்டு பேருமே ஜெயில் தண்டனையில் இருந்து தப்பிவிடலாம்'' என்றார். எனக்குத் திக்கென்று இருந்தது.

இது நடக்குமா? கோர்ட்டையும், ஜெயிலையும் ஏமாத்துகிறது தப்பில்லையா?' என்றேன். 'அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்றார் முத்துக் கிருஷ்ணன். அவர் மீதுள்ள மரியாதையால் நான் ஒப்புக் கொண்டேன்.

என்னை திருநெல்வேலிக்கு அழைத்துப் போனார். வண்ணாரப் பேட்டை பஸ் டிப்போ முன் வக்கீல் ஒருவர் எங்களைச் சந்தித்து, அப்போது அரசில் அ.தி.மு.க. அமைச்சராக இருந்த ஒருவரிடம் கூட்டிப் போனார். அமைச்சர் எங்களுக்கு ஏற்கெனவே பழக்கமானவர். மாமா... மச்சான்னு உரிமையாகப் பேசிக் கொள்வோம். அவரிடம் முழு விவரத்தையும் சொன்னேன். 'அதற்கென்ன? ஜெயில் அதிகாரிகளிடம் பேசிக் கொள்ளலாம். அதற்கு குற்றாலம் ஐந்தருவியில் இரண்டு காட்டேஜ் புக் செய்யுங்கள்' என்றார்.

வேறு ஆட்கள் இரண்டு பேர் பெயரில் காட்டேஜ்களை புக் செய்தோம். அங்கு அமைச்சர் உள்பட எல்லோரும் கூடினோம். இரவு பத்து மணியளவில் பாளையங்கோட்டை சிறை உயர் அதிகாரி அந்த காட்டேஜுக்கு வந்தார். நானும் என் அத்தான் முத்துக் கிருஷ்ணனின் கார் டிரைவரும் வெளியில் போய் மதுபான அயிட்டங்களை வாங்கி வந்தோம்.

அமைச்சர், சிறை அதிகாரி, வக்கீல் மூவரும் ஒரு காட்டேஜில் தங்கிக் கொண்டார்கள். நாங்கள் மற்ற காட்டேஜில் தங்கினோம். மறு£நள் காலை அமைச்சர் வக்கீலிடமும், சிறையதிகாரியிடமும் விஷயத்தைச் சொல்லி, கோர்ட்டிலும், ஜெயிலிலும் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி, என் அத்தான் தந்த பணத்தை வாங்கி வக்கீலுக்கும், ஜெயில் அதிகாரிக்கும் பிரித்துக் கொடுத்தார்.

ஜெயில் அதிகாரி என்னிடம் 'வரும் 24.11.2005 அன்று நீ கோர்ட்டில் ஆஜராகிவிடு. அப்போது ஓர் எலுமிச்சம் பழத்தைக் கையில் வைத்துக் கொள். இன்னொரு பழத்தை பையில் வைத்துக் கொள். நீ பூசாரிதானே! எலுமிச்சம்பழம் வைத்திருந்தால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். இது எங்களுக்கும் ஓர் அடையாளம். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்றார்.

24.11.2005 அன்று வக்கீல் என்னை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி என் பெயரைக் கேட்டார், மணி என்று பதில் சொன்னேன். 'அப்பா பெயர் சுப்பையாவா?' என்றார் 'ஆமாம்' என்றேன்.

மாலை நாலே முக்கால் மணிக்குப் போலீஸார் வந்து வக்கீல் குமாஸ்தாவிடம் பேசினார்கள். 'நீ தான் மணியா?' என்று என்னிடம் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். 'கையில் என்ன எலுமிச்சம்பழமா?' என்று கேட்டு வாங்கிக் கொண்டார்கள். அதன் பிறகு பாளை சிறைக்கு என்னை அழைத்துப் போனார்கள்.

அங்கிருந்த ஜெயில் அதிகாரியிடமும் என் பெயரை மணி என்றேன். என் பையை சோதனை போட்டு எலுமிச்சம்பழத்தை எடுத்துவிட்டு, புத்தகத்தில் கையெழுத்து வாங்கி உள்ளே அனுப்பினார். 29.11.2005 அன்று ஜெயிலுக்குள் இருக்கும் உள் மருத்துவமனைக்கு என்னை கூட்டிப் போனார்கள் ஜெயில் அதிகாரி ஏற்கெனவே எனக்குத் தெரிந்தவர் என்றாலும், அவர் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஜெயிலில் எனக்குத் தறி வேலை'யை ஒதுக்கியிருப்பதாகக் கூறினார்கள்.

என் உடலில் மச்சம், தழும்பு என அங்க அடையாளம், கைரேகைப் பதிவு என எந்த வெரிபிக்கேஷனும் செய்யவில்லை. ஒன்பது மாதங்கள் கழித்து இரண்டாம் நிலை ஜெயில் அதிகாரி என்னைக் கூப்பிட்டார். நான் ஆள் மாறாட்ட ஆசாமி என்பது அவருக்கும் தெரியும். 'உயர் அதிகாரி மாற்றலாகிப் போகிறார். இனி நீ ஜாமீனில் போவது சிரமம். மணியின் உடலில் என்ன தழும்பு இருந்ததோ, அது உன் உடம்பிலும் இருக்கணும். அப்போதுதான் நீ வெளியே போகமுடியும்' என்றார்.

அதிர்ச்சியடைந்து போன நான், மணியின் வலதுபக்க மார்பில் தழும்பு இருப்பதாக, அதிகாரி ஆவணத்தைப் பார்த்துக் கூறியதைக் கேட்டு சிகரெட்டால் என் மார்பில் தழும்பை ஏற்படுத்திக் கொண்டேன்.

பதினேழு மாதங்கள் நான் பாளை மத்திய சிறையில் இருந்தேன். அதிகாரிகளால் எந்த ஓர் இடையூறும் இல்லை. இந்த நிலையில் மணியை மார்ச் மாதம் திருநெல்வேலி போலீஸார் கைது செய்து விட்டதாக அறிந்தேன். இனி நாம் வெளியே போய்விடலாம் என்று நினைத்த போது பலத்த அதிர்ச்சி. என் மீதும் போர்ஜரி வழக்குப் போட்டு விட்டார்கள்.

இந்தச் சூழ்நிலையில், மதுரை சரக சிறைத்துறை உயரதிகாரி பாளை ஜெயிலுக்கு வந்து என்னை விசாரித்தார். 'மணிதான் பிடிபட்டுவிட்டானே.' மூன்று மாதத்தில் வெளிவந்து விடலாம்' என்று சொல்லி என்னை உள்ளே அனுப்பி, இப்போது பதினேழு மாதங்களாகி விட்டது. கொலைக் குற்றத்துக்கான ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கிறேன். எனவே உண்மையைச் சொல்லி விடலாம் என, அவரிடம் உண்மையை ஒப்புக் கொண்டேன்.

இந்த ஆள் மாறாட்ட மோசடியில் பாளை ஜெயில் அதிகாரிக்கும் பங்கு இருப்பதை வாக்குமூலத்தில் தெரிவித்தேன். அது அந்த அதிகாரிக்கு பலத்த அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவரை என்னிடம் பரிவு காட்டிய அவர், அதன் பின் போக்கை மாற்றிக் கொண்டார். மணியும் நானும் ஒரே சிறையிலிருந்தால் பிரச்னை என்று நினைத்தாரோ என்னவோ, என்னை மதுரை மத்திய சிறைக்கு மாற்றிவிட்டார்கள்.

கடந்த மே மாதம் மதுரை சிறைக்கு வந்தேன். ஆள் மாறாட்டம் பற்றி என்னிடம் ஏற்கெனவே விசாரணை செய்த மதுரை சரக சிறைத்துறை உயர் அதிகாரி, அங்கே இருந்ததால் எனக்கு பிரச்னை எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால் திடீரென அவர் மாற்றப்பட்டார்.

நான் ஆள் மாறாட்டம் செய்தது பற்றி போலீஸ§க்குத் தகவல் தெரிவித்தேன். ஓர் இன்ஸ்பெக்டர் வந்து விசாரித்தார். அதன் பிறகும் நடவடிக்கை எதுவுமில்லை. கடந்த முறை கோர்ட்டுக்கு வந்தபோது நீதிபதியிடமும் இதைச் சொன்னேன். அவர் எழுதித் தரச் சொன்னார். அங்கேயே எழுதிக் கொடுத்தேன்.

இந்தச் சூழ்நிலையில், நான் எந்த சிறை அதிகாரி மீது புகார் கொடுத்திருந்தேனோ, அவரே மதுரை சிறைக்கு உயரதிகாரியாக வந்து விட்டார். அவரது தூண்டுதலால் சக கைதிகளாலோ அல்லது ஜெயில் அதிகாரிகளாவோ என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாமோ என்று அஞ்சுகிறேன். தினமும் செத்து செத்துப் பிழைக்கிறேன்' எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால், அந்த சிறையதிகாரிதான் பொறுப்பு.

செய்யாத குற்றத்துக்காக நான் சிறையில் வாடுகிறேன். உறவுக்காக பரிதாப்பட்டது தான் நான் செய்த ஒரே தவறு. இப்போது என் ஒரிஜினல் பெயரே மறந்து போகும் அளவுக்குச் சிறையில் மணி என்ற பெயருடன் இருக்கிறேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது'' என்றார். மணி... மன்னிக்கவும் சிவகுமார்.

அதற்குள், ''வா போகலாம் நேரமாச்சு!'' என்று அவரைக் கைப்பிடியாக கூட்டிச் சென்றது! போலீஸ்.

ஜெயிலில் செல்போன் கிடைக்கும், கஞ்சா கிடைக்கும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். கைதிக்குப் பதிலாக, போலி கைதி கூட கிடைப்பார் என்ற லேட்டஸ்ட் தகவல் நமக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதை முழுமையாக விசாரித்து உண்மைகளைக் கண்டறிய வேண்டியது, அரசின் கடமை!

நன்றிங்க, kumudam reporter 12/08/07

எல்லாத்திலேயும் substitute இருக்கிற மாதிரி ஜெயில் கைதிகளுக்கும் ஆளுக்குப் பதிலாக ஆளுன்னு வைச்சிக்கிட்டால் கொஞ்சம் Relieve இருக்கும்.

என்ன, சட்டம் ஒத்துக்கொள்ளாதுங்க!