Tuesday, October 23, 2007

சிரஞ்சீவிக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்!

சிரஞ்சீவிக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்

மகள் காதலருடன் கல்யாணம் செய்து கொண்ட சோகத்தில் இருக்கும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியையும், அவரது மனைவியையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்வரியுடன் சென்று ஆறுதல் கூறினார். அவரிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, தனது காதலர் சிரீஷ் பரத்வாஜுடன் ரகசியக் கல்யாணம் செய்து கொண்டு தலைமறைவாக இருக்கிறார். தனது தந்தையால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்தார். அதை ஏற்ற நீதிமன்றம், ஸ்ரீஜாவுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. சிரஞ்சீவிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனது மகளை மன்னித்து விட்டதாகவும், அவரது திருமணத்தை அங்கீரித்து விட்டதாகவும், எங்கிருந்தாலும் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வர வேண்டும் எனவும் ஆந்திர பத்திரிக்கைகள் மூலம் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும் இன்னும் கூட மகள் தந்த அதிர்ச்சியிலிருந்து சிரஞ்சீவ மீளவில்லை. எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். சிரஞ்சீவியின் குடும்பத்தினர் பெரும் சோகத்திலும், அவமானத்திலும் கூனிக் குறுகிப் போயுள்ளனர்.

பெரும் சோகத்தில் இருக்கும் சிரஞ்சீவி குடும்பத்தினரை திரையுலகினரும், அரசியல்வாதிகளும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சிரஞ்சீவியை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்வரியுடன் சென்று சந்தித்தார். என்.டி.ராமராவின் மகள்தான் புவனேஸ்வரி. அவரும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகவும் நீண்ட நாளைய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயுடுவையும், புவனேஸ்வரியையும் பார்த்த சிரஞ்சீவி தம்பதியினர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அவர்களைத் தேற்றிய நாயுடுவும், சுரேகாவும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனராம்.

நன்றிங்க

வெள்ளத் திரையில் ஏழையாக பரோபகாரியாக வரும் கதாநாயகன், பணக்கார வில்லனின் மகளைக் காதலிப்பார். அதற்காக வில்லனிடமிருந்து எத்தனை எதிர்ப்பு வந்தாலும் அவையனைத்தையும் முறியடித்து காதலியைக் கைபிடிப்பார் நாயகன். திரையரங்குகளில் இதைப் பார்த்து விட்டு வேளியேறும் ரசிகப் பெருமக்கள் ஆஹா...பிரமாதம் என்னதான் இருந்தாலும் காதலியைக் கைவிடவில்லை பாருங்கள் அங்குதான் நாயகன் நிற்கிறார் என்று காதலுக்கு சென்டிமெண்ட் வழங்குவார்கள்.

பணக்காரப் பெண்ணை சாதாரண ஏழையாகிய நாயகன் காதலித்து காதலியின் சம்மதத்தோடு கடத்திச் சென்றுத் திருமணம் செய்து குடும்பம் நடத்துவார் இது வெள்ளித் திரையில் காதல் தெய்வீகமானது என்று வர்ணிக்கப்டும் இந்தக் காதல் வர்ணனைகள் எல்லாம் வெள்ளித் திரையோடு சரி நிஜவாழ்க்கையில் அந்த நாயகனும் தன் மகள் காதல் விஷயத்தில் வில்லானாகி விடுகிறார் பாருங்கள்.

காதலித்தால் அது அவமானமில்லீங்க என்ற தத்தவ வசனங்கள் வெள்ளித்திரையோடு முடிந்து விடுகிறது.

வெள்ளத் திரை வாழ்க்கை வேறு, நிஜ வாழ்க்கை வேறுங்க.

2 comments:

பிறைநதிபுரத்தான் said...

'அவர்களைத் தேற்றிய நாயுடுவும், சுரேகாவும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனராம்'-

நாயுடுகாரு, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின் தன்னை விட்டு ஓடிப்போன ஆட்சியை - நிணைத்து - அவமானப்பட்டு - கூணிக்குறுகி வீட்டில் அடைப்பட்டு கிடந்தபோது சிரஞ்சீவி தம்பதியினர் சென்று ஆறுதல் சொல்லியிருப்பார்களோ?

வெள்ளைத் திரையில் போடும் 'கலர் வேஷம்' வேறு, நிஜ வாழ்க்கை வேறுங்க.

வேஷத்திற்கும் - வாழ்க்கைக்கும் வித்தியாசம் தெரியாத ஏமாளி ரசிகர்களுக்கு இது ஒரு பாடமாக அமைந்தால் சரி..

முஸ்லிம் said...

பிறைநதிபுரத்தான் உங்கள் அனைத்து வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.