இந்தியா
01. இன்று ஏழ்மை ஒழிப்பு தினம்
ஆண்டுதோறும் ஏழ்மை ஒழிப்பு தினம் அக். 17ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. ஏழ்மை ஒழிப்பு குறித்த திட்டங்கள் வகுக்கவும், ஏழ்மை காரணமாக மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் ஐ.நா., சபை ஏழ்மை ஒழிப்பு தினத்தை அறிவித்துள்ளது. அடிப்படை வசதிகளும், கல்வியும் அனைவருக்கும் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பசியும் ஏழ்மையுமே உலகில் ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் ஒரு குழந்தையின் மரணத்துக்கு காரணமாக அமைகிறது என்றால் நம்புவீர்களா? 2004ல் சுனாமியால் ஏற்பட்ட மரணங்களுக்கு இணையான எண்ணிக்கையில் ஒவ்வொரு வாரமும் குழந்தைகள் மரணமடைகின்றனர். இங்கு குழந்தைகள் என குறிப்பிடப்படுபவர்கள் 5 வயதுக்கு உட்பட்டவர்களே. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளையும், பெரியவர்களையும் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் கணிசமான அளவு உயரும்.
வறுமை காரணமாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 12 கோடிக்கு மேல். உலக நாடுகள் ராணுவ தளவாடங்கள் வாங்கும் செலவில் ஒரு சதவீதத்தை ஒதுக்கினால் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்க வழி செய்து விடலாம் என திட்டமிடப்பட்டது. எனினும் அனைவருக்கும் கல்வி என்பது இன்று வரை கனவாகவே உள்ளது.
வசதிபடைத்தவர் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துக்கொண்டே வருகிறது. வளராத 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு. உலக பணக்காரர்களில் 20 சதவீதம் பேர் உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை கைப்பற்றியுள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது வெறும் 14 சதவீதம் மட்டுமே.
ஏழ்மைக்கு முக்கிய காரணமாக ஊழல் உள்ளது. ஏழை நாடுகளின் முன்னேற்றத்துக்கு தடையாக உள்ள ஊழலை வளர்ந்த நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றன. அதிகாரிகளை வளைக்கவும், ஒப்பந்தங்களை கைப்பற்றவும் முறைகேடான வழிகளில் பணத்தை செலவிடும் இந்த நிறுவனங்கள் ஏழை நாடுகளின் குடிமக்களின் வரிப்பணத்தை தெரிந்தே சுரண்டுகின்றன.குற்றங்கள் அதிகரிக்க ஏழ்மையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏழ்மையும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த சமூகத்தில், வன்முறையையும், குற்றங்களையும் தவிர்க்க முடியாது.
நன்றிங்க
பொதுவானவை
8 comments:
நேற்று உலக உணவு தினம்
ஏழ்மை ஒழிப்பு தினம் என்று வருடத்தில் ஒருநாள் சடங்குக்காக அறிவித்துவிட்டு - மற்ற 364 நாட்களில் 'ஏழைகளை' ஒழிப்பதில் ஈடுபடுகிறார்கள்.
தாசன் உங்கள் வரவுக்கு நன்றி.
//நேற்று உலக உணவு தினம்//
:)
பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கு நன்றி.
//ஏழ்மை ஒழிப்பு தினம் என்று வருடத்தில் ஒருநாள் சடங்குக்காக அறிவித்துவிட்டு - மற்ற 364 நாட்களில் 'ஏழைகளை' ஒழிப்பதில் ஈடுபடுகிறார்கள்.//
ஏழ்மையை ஒழிப்பதில் ஈடுபட்டாலும் வருஷா வருஷம் ஏழ்மைகள் இருந்து கொண்டேயிருக்கும், ஏழ்மை தினமும் நினைவுகூரப்படும்.
உலகில் ஏழைகளாக இருப்பது - சுய விருப்பத்தினால் அல்ல..சுரண்டல்களால்தான்..
ஏழைகளுக்கும் - பணக்காரர்களுக்கும் இருக்கும் 'வளர்ந்து வரும்' பொருளாதர இடைவெளி இயற்கையால் ஏற்பட்டது அல்ல..செல்வந்தர்களின் செயற்கையால்தான்..
வளர்ந்த நாடுகளின் கைப்பிடியில் இருக்கும் சர்வதேச ஏழ்மை ஒழிப்பு அமைப்புகள் - நிறுவனங்கள், தன்னிச்சையாக செயல்பட்டு..
'ஏழ்மை' படிப்படியாக குறைக்கப்பட்டு - இறுதியில் ஒழிக்கப்பட்டு - அதற்காக 'நிணைவு' நாள் கொண்டாடப்படும் நாள் விரைவில் வரவேண்டும்..
வறுமைக்கு காரணமும், விளைவுகளும்
செல்வசெழிபிற்க்கு அருகமையில், கடுமையான வறுமையய் காணும் பெரும்பாலான, மனிதநேயங்கொண்டவர்கள் இந்த முரண்பாட்டிற்க்கு காரணம் முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளே என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர்.
இரண்டாம் உலக்ப்போரில் முற்றிலும் அழிந்த ஜெர்மனியில், 1945ல் வறுமை, பசி, வேலையில்லா திண்டாட்டம் மிக அதிகமாக இருந்தது. சந்தை பொருளாராத கொள்கைகளை, கடும் எதிர்பிற்கிடையில் அமல் படுதிய பின் பத்தே ஆண்டுகளில் ஜெர்மனி மீண்டும் தலை நிமிர்ந்தது. "ஜெர்மன் மிராக்கில்" என்று இன்றும் போற்றப்படுகிறது.
1947இல், நம்மைவிட மிகவும் கீழ் நிலையில் இருந்த மலேசயா, சிங்கப்பூர், தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளும் சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இன்று நம் நாட்டை விட பல மடங்கு சுபிட்சமாக உள்ளன. சைனாவும் முதலாளித்துவ பாதைக்கு வந்து, வேகமாக வளம் பெற்று வருகிறது.
1950 முதல் இடதுசாரி, சோசியலிச கொள்கைகளை பின்பற்றியதின் விளைவாக, நாம் 1991ல் திவால் நிலையில் இருந்தோம். அரசு, தங்கத்தை அடமானம் வைத்து இறக்குமதிக்கான் டாலர்களை பெற வேண்டிய நிலை உருவானது. அதன் பிறகு, சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை அமல் படுத்தியதன் விளைவாக, இன்று மீண்டு வருகிறோம். பல கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் எழும்ப முடிந்தது. தொழில் துறையின் வளர்சியால் புதிய வேலை வாய்ப்புகளும், அரசுக்கு பெரிய அளவில் வரி வசுலும் உருவாகிறது. அதை வைத்து அரசு, பல நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. மத்திய அரசின் நிகர வரி வருமானம், 1995ல் 1,10,354 லச்சம் கோடியில் இருந்து 2007ல், 5.48,122 லச்சம் கோடியாக ஆக உயர்ந்தது. 1991இல், இரண்டு வார இறக்குமதிக்கான அந்நிய செலவாணி கையிருப்பே இருந்தது. இன்று சுமார் 100 மடங்கு அதிகரித்து, 8,64,000 கோடி ரூபாய் மதிப்பிற்க்கு டாலர் கையிருப்பு சேர்ந்துள்ளது. அந்நிய செலவாணிக்காக் I.M.F / World Bank இடம் கை ஏந்த வேண்டிய நிலை இன்று இல்லை.
ராணுவதிற்க்காக வருடம் சுமார் 93,000 கோடி ரூபாய் செலவிடுவது நமக்கு மிக அதிகமான சுமை. இது போன்ற பல சுமைகளை விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியாக நாம் அனைவரும், குறிப்பாக ஏழைகளும் சுமக்க வேண்டியுள்ளது.
இன்னும் வெகு தூரம் போக வேண்டியதுள்ளது. எழ்மை ஒழிப்பு, விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அடிபடை வசதிகாளுக்காக அரசு பல லச்சம் கோடி ரூபாய்கள் செலவிட்டாலும், அதில் பெரும்பாண்மையான தொகை அரசு எந்திரத்தாலும், அரசியல்வாதிகளாளும் திருடப் படுகிரது. அரசு மான்ய தொகை, பணக்கார விவசாயிகளுக்கே பெரும்பாலும் சேர்கிரது. உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்கும்படி செய்ய, ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். அதுவே நமக்கு முதல் வேலையாகும். அதை செய்யாமல், வறுமைக்கு காரணமாக முதலாளித்துவ பொருளாராதார் கொள்கைகளை காரணமாக காட்டுதல் தவறு.
http://nellikkani.blogspot.com/
பிறைநதிபுரத்தான் உங்கள் மீள் வரவுக்கு நன்றி.
அதியமான் உங்கள் வரவுக்கும் நீண்ட கருத்துடனான மறுமொழிக்கும் நன்றிகள்.
அரசு இயந்திரமும், அரசியல் வாதிகளும் திருடினது போக இந்தியா பெற்றுள்ள கடன்களை அடைத்து கடன் சுமை குறைய ஏதாவது மிச்சம் இருக்கிறதா?
வளரும் நாடுகளில் வறுமை வளர - ஊழல் 'ஆற்றிய' பங்கைவிட - முதலாளித்துவ பொருளாதர கொள்கைகள் ஆற்றிய பங்கு அளப்பரியது. சுதந்திர சந்தை பொருளாதார கொள்கையை - வறுமை நீக்கியாக கொள்ள இயலாது.
சாதி-ச்மய-பிராந்திய-மொழி வேறுபாடுகளுடன்-
உலகிலேயே அதிக மக்கள் தொகைக்கொண்ட இரண்டாவது நாடாக - துனைக்கண்டமாக விளங்கும் நமது இந்தியா - சமீபத்தில் அடைந்த பொருளாதார வளர்ச்சியை வியட்நாம் - சீனா போன்ற நாடுகளின் வளர்ச்சியோடு ஒப்பிட இயலாது. இந்திய் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கியது முதலாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள Capital Intensive and Skill Intensive Industries கள்தான். அதனால் கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பான்மையான இந்தியனுக்கு ஏற்பட்ட பயன் என்ன? சந்தைப்பொருளாதரம் மூலம் சந்திக்கு வந்த விவசாயிகளின் எண்ணிக்கைதான் அதிகம்.
இந்திய முதலாளிகளுக்கு மட்டும்தான் 'சந்தைப்பொருளாதார கொள்கை' சாதகமாக அமைந்தது.
ஆனால் - சீனாவிலும் - வியட்நாமிலும் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியால் -வறுமை ஒழிந்து கிராமங்கள் மின்னியது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு - முதலாளித்துவ- சந்தைப் பொருளாதாரத்தை காரணியாக காட்டுவது பொருளாதார அறிஞர்களால் இதுவரை புள்ளி விவரங்களோடு நிரூபிக்கப்படாதால் - உண்மையில்லை.
சந்தைப்பொருளாதாரம் மூலம் 'வல்லரசாக' உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியாவில்தான் - பங்களாதேசை விட அதிகமான பேறுகால இறப்பும் சிசு மரணமும் ஏற்படுகிறது.
எதிர்கால இந்தியர்களான குழந்தைகளுக்கு தடுப்பூசி தரப்படாத அவலம் நிலவுகிறது.
இந்தியாவில் உள்ள குழந்தைகளில் ஏறக்குறைய 46 சதவிகிதம் underweight children -இது மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் 30 சதவிகிதம்தான்.
இவைகளுக்கு காரணம் - சமூக-பொருளாதார - ஏற்றத்தாழ்வுகளும் - அதை -வலியுறுத்தி நிலை நிறுத்தும் 'முதலாளித்துவ' சக்திகளும்தான்.
Post a Comment